iphone 11 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:37:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 ரெட் கலர் வேரியண்ட் ரூ.16,840 மட்டுமே! https://www.91mobiles.com/tamil/flipkart-big-diwali-sale-apple-iphone-now-available-at-rs-16840-diwali-bumper-offer/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=flipkart-big-diwali-sale-apple-iphone-now-available-at-rs-16840-diwali-bumper-offer Thu, 20 Oct 2022 07:02:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3138 தற்போது ஐபோன்களுக்கு இணையாக சில நிறுவனங்களின் போன்கள் அதிக விலையில் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. எனவே ஐபோன்கள் விலை என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகம் என்று குறிப்பிட்டுவிட முடியாது. இந்நிலையில் ஆன்லைன் விற்பனைத் தளங்கள் அவ்வப்போது சலுகைகளை வழங்கி ஐபோனை அனைவருக்குமானதாக மாற்றி வருகிறது. அதன்படி பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 ரெட் கலர் வேரியண்ட்டை ரூ.16,840 விலையில் பெறும் ஒரு சலுகையை தான் பார்க்கப் போகிறோம். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை பல்வேறு […]

The post பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 ரெட் கலர் வேரியண்ட் ரூ.16,840 மட்டுமே! first appeared on .

]]>

தற்போது ஐபோன்களுக்கு இணையாக சில நிறுவனங்களின் போன்கள் அதிக விலையில் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. எனவே ஐபோன்கள் விலை என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகம் என்று குறிப்பிட்டுவிட முடியாது. இந்நிலையில் ஆன்லைன் விற்பனைத் தளங்கள் அவ்வப்போது சலுகைகளை வழங்கி ஐபோனை அனைவருக்குமானதாக மாற்றி வருகிறது. அதன்படி பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 ரெட் கலர் வேரியண்ட்டை ரூ.16,840 விலையில் பெறும் ஒரு சலுகையை தான் பார்க்கப் போகிறோம்.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் பல்வேறு கேட்ஜெட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஐபோன் 13, 12 மற்றும் 11 போன்ற மாடல்கள் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆனால் இதில் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் இருக்கிறது. பிளிப்கார்ட்டில் முக்கிய சாதனங்களுக்கு வழங்கப்படும் சலுகை விலையில் அடிக்கடி மாற்றம் இருக்கும். எனவே நீங்கள் இந்த தகவலின் மூலம் ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் முழுமையாக படித்துவிட்டு உடனே பிளிப்கார்ட் தளத்தை அணுகவும்.

iPhone 13 தள்ளுபடி

iPhone 13 இன் 128GB மாடல் ரூ.10,000 தள்ளுபடியை பெறுகிறது. அதன்படி தற்போது ரூ.59,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. SBI வங்கி சலுகைகள் உடன் வாடிக்கையாளர்கள் இந்த ஐபோனை ரூ.57,990 என வாங்கலாம். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் ரூ.3000 முதல் ரூ.5000 வரை தள்ளுபடியை பெறலாம். நீங்கள் மாற்றம் செய்யும் பழைய ஐபோனை பொறுத்து இந்த ஐபோன் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஐபோன் 14 மாடலையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

அதேபோல் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஐபோன் 12 மினி மாடலை ரூ.36,990 எனவும் ஐபோன் 11 மாடலை ரூ.31,990 எனவும் வாங்கலாம். இதில் வங்கி சலுகைகளும் அடங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 14 மாடலையும் சிறந்த தள்ளுபடியுடன் வாங்கலாம்.


ரூ.16,840 விலையில் ஐபோன்

இந்த விலையில் கிடைப்பது.. ஐபோன் 11 ஆகும். ஐபோன் 11 ஆனது மிக முந்தைய மாடல் ஆகும். சமீபத்தில் ஐபோன் 14 மாடலே அறிமுகமாகி விட்டது. இந்த ஐபோன் 11 ஆனது 2019 ஆம் ஆண்டு அறிமுகமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிளிப்கார்ட்டில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் உட்படுத்தி ஐபோன் 11 மாடலை ரூ.17,840 என வாங்கலாம். அதேபோல் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 ரெட் கலர் வேரியண்ட்டை ரூ.16,840 என வாங்கலாம்.

எப்படி வாங்குவது?

ஐபோன் 11 மாடலின் விலை ரூ.41,990 ஆகும். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஐபோன் 11 மாடல் ரூ.35,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஐபோன் 11 இன் ரெட் கலர் வேரியண்ட் ரூ.34,990 என பிளிப்கார்ட் சலுகை தின விற்பனையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.16,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் இஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் அதாவது ரூ.1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயனர்கள் ஐபோன் 11 மாடலை ரூ.17840 எனவும் ஐபோன் 11 சிவப்பு நிற வேரியண்ட்டை ரூ.16,840 வாங்க முடியும்.

The post பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ஐபோன் 11 ரெட் கலர் வேரியண்ட் ரூ.16,840 மட்டுமே! first appeared on .

]]>