iphone 12 https://www.91mobiles.com/tamil Mon, 19 Sep 2022 07:19:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ 30,000க்கு புது ஐபோன்! https://www.91mobiles.com/tamil/how-to-buy-iphone-12-under-rs-40000-during-amazon-great-india-festival-sale/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-buy-iphone-12-under-rs-40000-during-amazon-great-india-festival-sale Mon, 19 Sep 2022 07:19:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2416 உங்களுக்கு நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் இருக்கிறதா? ஒரு முறையாவது ஐபோனின் அனுபவத்தை உணர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படியானால், இந்த ஆண்டு அதை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சரியான வாய்ப்பு இருக்கிறது. இந்த வார இறுதியில் துவங்க இருக்கும் Amazon Great India Festival Sale விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் புது iPhone 12 போன்களை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிரடியாக விலை குறைக்கப்பட ஐபோன் 12 […]

The post ரூ 30,000க்கு புது ஐபோன்! first appeared on .

]]>

உங்களுக்கு நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் இருக்கிறதா? ஒரு முறையாவது ஐபோனின் அனுபவத்தை உணர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படியானால், இந்த ஆண்டு அதை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சரியான வாய்ப்பு இருக்கிறது. இந்த வார இறுதியில் துவங்க இருக்கும் Amazon Great India Festival Sale விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் புது iPhone 12 போன்களை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதிரடியாக விலை குறைக்கப்பட ஐபோன் 12

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பிற்குப் பிறகு, தற்போது, ஐபோன் 12 மாடலின் பேஸ் வேரியண்ட் மாடலான 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலை நீங்கள் ரூ.59,900 என்ற விலையில் வாங்கலாம். இதேபோல், 128ஜிபி ஸ்டோரேஜ் மாடளை ரூ.64,900 விலையில் வாங்கலாம். இது ஆப்பிள் அறிவித்துள்ள பொதுவான விலையாகும்.

ஆனால், வரவிருக்கும் Amazon Great India Festival sale மூலம் முதல் ஐபோனை மிகக் குறைந்த விலையில் வாங்க அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் படி, ஐபோன் 12 மாடலின் 128 ஜிபி வேரியண்ட் மாடலின் மீது மிகப்பெரிய விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் உள்ள ஒரு போஸ்டர் ஐபோன் 12 மாடல் ரூ. 40,000 விலைக்குள் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கிறது. இருப்பினும், சரியான விலை விவரங்கள் தெளிவாக இல்லை.

ரூ. 30,000 விலையில் புது ஐபோன் 12?

செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, இ-காமர்ஸ் தளம் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன் 12 மாடலுக்கு கூடுதல் சலுகைகளை அறிவிக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பிட்ட சில வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன், iPhone 12 மாடலின் 128GB வேரியண்ட்டை ரூ. 30,000 விலையில் நீங்கள் வாங்க முடியும்.

ஐபோன் 12 64ஜிபி மாடலை ஏன் வாங்க கூடாது?

ஐபோன் 12 சாதனத்தின் பேஸ் வேரியண்ட் மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றாலும் கூட, இது ஒரு சிறந்த தேர்வாக இருக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 2022 இல் 64 ஜிபி ஸ்டோரேஜ் உண்மையில் போதுமானதாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆப்பிள் நிறுவனமே அதன் சமீபத்திய தலைமுறை ஐபோன் தொடர்களில் 64ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 12 மாடலை வாங்கலாமா?

ஆனால், வாடிக்கையாளர்கள் இரண்டு வருடப் பழைய iPhone 12 மாடலை நம்பி வாங்கலாமா என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஐபோன் 12 மாடலை வாங்குவது சிறந்ததா அல்லது புதிய iPhone 13 / iPhone 14 ஐ வாங்க வேண்டுமா என்று பல கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும். இன்னும் சிலர் iPhone SE (2022) மாடலை கூட வாங்க ஆசைப்படலாம். எளிமையாகச் சொன்னால், iPhone SE (2022) ஒரு சக்திவாய்ந்த சிப்செட்டைக் கொண்டுள்ளது.

ஐபோன் 14 Vs ஐபோன் 12

ஆனால், iPhone SE மிதமான தேவைகளைக் கொண்ட பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்பதையும் நாம் மறுக்க முடியாது. இது நார்மல் யூசர்கள் அல்லது வயதான பெற்றோருக்கு ஒரு சிறந்த டிவைசாக அமையும். ஆனால், ஐபோன் 12 சற்றே அதிக தேவை உள்ள பயனர்களுக்கு போதுமானது. ஆனால், இது இரண்டு ஆண்டுகளில் புதிய iOS அப்டேட்டை நிறுத்திவிடும் என்பதனால் சிலர் தயக்கம் கொள்கிறார்கள். இருப்பினும், இதில் 5G, OLED டிஸ்ப்ளே, டூயல் கேமரா, MagSafe சார்ஜிங் என்ற புதிய ஐபோன் 14 இல் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.

The post ரூ 30,000க்கு புது ஐபோன்! first appeared on .

]]>