iphone yellow https://www.91mobiles.com/tamil Mon, 13 Mar 2023 07:35:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஐபோன் 14 & ஐபோன் 14 ப்ளஸ் மஞ்சள் நிற வேரியண்ட்களை சலுகையில் வாங்குவது எப்படி? https://www.91mobiles.com/tamil/how-to-buy-iphone-14-and-iphone-14-plus-yellow-variant-in-offer-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-buy-iphone-14-and-iphone-14-plus-yellow-variant-in-offer-price Mon, 13 Mar 2023 06:25:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6785   கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் ஆகிய போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இரண்டு மாடல்களும் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைத்தன. தற்போது 6-வதாக மஞ்சள் நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 10 முதல் இதற்கான முன்பதிவு (Pre-order) துவங்கியது. இந்த புதிய மஞ்சள் வேரியண்ட் ஐபோன்கள் மார்ச் 14 முதல் விற்பனைக்கும் வர உள்ளன. கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான இந்த ஆப்பிள் ஐபோன் […]

The post ஐபோன் 14 & ஐபோன் 14 ப்ளஸ் மஞ்சள் நிற வேரியண்ட்களை சலுகையில் வாங்குவது எப்படி? first appeared on .

]]>

Highlights

  • கடந்த 10ம் தேதி முதல் முன்பதிவு முறையில்  ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் மஞ்சள் வேரியண்ட்க்கு புக்கிங் துவங்கியது
  • இந்த மஞ்சள் வேரியண்ட் ஐபோன்கள் மார்ச் 14 முதல் விற்பனைக்கு வருகின்றன.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் ஆகிய போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இரண்டு மாடல்களும் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைத்தன. தற்போது 6-வதாக மஞ்சள் நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 10 முதல் இதற்கான முன்பதிவு (Pre-order) துவங்கியது. இந்த புதிய மஞ்சள் வேரியண்ட் ஐபோன்கள் மார்ச் 14 முதல் விற்பனைக்கும் வர உள்ளன. கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான இந்த ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்களின் புதிய மஞ்சள் நிற வேரியண்ட்டின் (Yellow Colour Variant) அசல் விலை என்ன? இந்த 2 மாடல்களுக்கும் கிடைக்கும் சலுகை என்ன? அவற்றை வாங்குவது எப்படி? எல்லாவற்றையும் பார்க்கலாம்.

 

வாங்குவது எப்படி?

கடந்த மார்ச் 7 ஆம் தேதி அறிமுகமான ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸின் புதிய யெல்லோ கலர் வேரியண்ட்களை ஆப்பிள் இந்தியா (Apple India) வலைத்தளம், பிரபல இ-காமர்ஸ் வலைதளங்களான அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க முடியும்.

இணையதளம்: https://www.indiaistore.com/iphone-14

விலை விவரம்

ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தின் படி, ஐபோன் 14 மஞ்சள் நிற வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ. 79,990. அதேபோல் ஐபோன் 14 பிளஸ் மஞ்சள் நிற வேரியண்ட் ரூ. 89,990 என்ற விலைக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த இரண்டையுமே சலுகை விலையில் வாங்க முடியும். அதற்கு நீங்கள் இந்த 2 ஐபோன்களையும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களில் ஒன்றான ரெடிங்டன் இந்தியா (Redington India) வழியாக வாங்க வேண்டும்.

 

சலுகைகள்

ரெடிங்டன் இந்தியாவானது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸின் மஞ்சள் நிற வேரியண்ட்டை பல வகையான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. அதில் ரூ.15,000 என்கிற ஸ்டோர் டிஸ்கவுண்ட்டும் (Store Discount) அடங்கும். இது தவிர உடனடி கேஷ்பேக் (Instant Cashback) மற்றும் எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் (Exchange Offer) போன்றவைகளும் கிடைக்கும்.

 

அம்சங்கள்

மஞ்சள் நிற வேரியண்ட் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸின் அம்சங்களுக்கும் மற்ற கலர் ஆப்ஷன்களின் அம்சங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஐபோன் 14 மாடலானது அதே 6.1  அங்குல சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட், ஐஓஎஸ் 16 அவுட் ஆஃப் பாக்ஸ் வசதியோடு வருகிறது. கேமராவைப் பொருத்தவரை, 12எம்பி டூயல் ரியர் கேமரா, 12எம்பி ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா போன்றவைகளைக் கொண்டுள்ளது. அதேபோல் ஐபோன் 14 பிளஸ் மாடலும் 6.7 அங்குல அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதுவும் ஐபோன் 14-ஐ போலவே ஐஓஎஸ் 16 மற்றும் ஆப்பிளின் சொந்த ஏ15 பயோனிக் சிப்செட் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது ஐபோன் 14-இல் உள்ள அதே சென்சார்களையே பேக் செய்கிறது. அதாவது 12எம்பி + 12எம்பி ரியர் கேமரா செட்டப் மற்றும் 12எம்பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.

 

The post ஐபோன் 14 & ஐபோன் 14 ப்ளஸ் மஞ்சள் நிற வேரியண்ட்களை சலுகையில் வாங்குவது எப்படி? first appeared on .

]]>