IPL 2024 https://www.91mobiles.com/tamil Fri, 22 Mar 2024 04:51:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.49க்கு 25GB Data! ஜியோ அதிரடி https://www.91mobiles.com/tamil/jio-rs-49-data-pack-launched-with-25gb-data-know-detail/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-rs-49-data-pack-launched-with-25gb-data-know-detail Fri, 22 Mar 2024 04:51:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=14341 IPLஐ மனதில் வைத்து ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் குறைந்தவிலை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை டேட்டா பேக் வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.49 மட்டுமே. இந்த திட்டம் ‘கிரிக்கெட் ப்ளான்’ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இது ஐபிஎல் 2024 க்காக கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பலன்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஜியோவின் ரூ.49 டேட்டா பேக் ஜியோவின் புதிய டேட்டா பேக்கைப் பற்றி பேசுகையில், […]

The post ரூ.49க்கு 25GB Data! ஜியோ அதிரடி first appeared on .

]]>

IPLஐ மனதில் வைத்து ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் குறைந்தவிலை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை டேட்டா பேக் வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.49 மட்டுமே. இந்த திட்டம் ‘கிரிக்கெட் ப்ளான்’ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இது ஐபிஎல் 2024 க்காக கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பலன்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.49 டேட்டா பேக்

ஜியோவின் புதிய டேட்டா பேக்கைப் பற்றி பேசுகையில், நிறுவனம் இதை ரூ.49  விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 1 நாள் மட்டுமே. இந்த திட்டத்தில், ஒன்றல்ல இரண்டல்ல.. முழுமையாக  25GB டேட்டாவைப் பெறுவீர்கள்.

இந்த, 25GB டேட்டாவுடன், JioCinema செயலியில் IPL 2024 போட்டியை ஆன்லைனில் எந்த இடையூறும் இல்லாமல் பார்க்கலாம். குறிப்பாக கிரிக்கெட் சலுகையின் கீழ் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 1 நாள் மட்டுமே. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 25ஜிபி டேட்டாவை நீங்கள் ஒரு நாளில் முடித்துவிட வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த நாள் மீதமுள்ள டேட்டாவை உங்களால் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: 1 நாளுக்கு முன்பே 25 ஜிபி டேட்டாவை முழுமையாகப் பயன்படுத்திவிட்டாலும், இணையத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், கிடைக்கும் இணைய வேகம் 64Kbps ஆக குறையும். 

IPL 2024ஐப் பார்ப்பதற்கு இந்த ரீசார்ஜ் சிறந்தது

இந்த ஐபிஎல் 2024 போட்டியை உங்கள் மொபைலில் நேரடியாகப் பார்க்க நீங்கள் திட்டமிட்டால், உங்களுக்கு நிறைய டேட்டா தேவைப்படும். இந்த டேட்டா பற்றாக்குறையை சமாளிக்க, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் நிறுவனமும் ரூ.49 திட்டத்தில் உள்ளது

ஏர்டெல் 49 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இதிலும் 1 நாளுக்கு வரம்பற்ற டேட்டா கிடைக்கும். அதாவது, அதை வாங்கிய பிறகு, நீங்கள் இணையத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை மற்றும் வீட்டிலேயே வேகமாக இணையத்தை எளிதாக அனுபவிக்க முடியும். திட்டத்தில் 20GB அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகும், இணையம் வேலை செய்யும், ஆனால் வேகம் மிகவும் குறைவாக இருக்கும்.

The post ரூ.49க்கு 25GB Data! ஜியோ அதிரடி first appeared on .

]]>