iQoo 11 5G https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:24:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஜென் 2 சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளோடு வெளியானது ஐக்கூ 11 5ஜி https://www.91mobiles.com/tamil/qualcomm-snapdragon-8-gen-2-powered-iqoo-11-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=qualcomm-snapdragon-8-gen-2-powered-iqoo-11-launched-in-india Wed, 11 Jan 2023 09:00:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4896 iQOO நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQOO 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Vivo-sub பிராண்டான ஐக்யூ நிறுவனத்தின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 2 மூலம் இயக்கப்படுகிறது. iQOO 11 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது E6 AMOLED டிஸ்ப்ளே மற்றும் V2 இமேஜிங் சிப் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் […]

The post ஜென் 2 சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளோடு வெளியானது ஐக்கூ 11 5ஜி first appeared on .

]]>

iQOO நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQOO 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Vivo-sub பிராண்டான ஐக்யூ நிறுவனத்தின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 2 மூலம் இயக்கப்படுகிறது. iQOO 11 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது E6 AMOLED டிஸ்ப்ளே மற்றும் V2 இமேஜிங் சிப் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் முதல் ஐக்யூ ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது மாறி இருக்கிறது.

விலை

இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.64,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை அதிகம் தான் என்றாலும் பிற நிறுவனங்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் விலையை மீறிய அம்சங்கள் நிறைய இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தள்ளுபடி

வங்கி சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.51,999 என்ற விலைக்கும், 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.56,999 என்ற விலைக்கும் வாங்கலாம். அமேசான் பிரைம் சந்தாதாரராக நீங்கள் இருந்தால், ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கும் பிரைம் எர்லி அணுகல் விற்பனையில் ரூ.1000 பிளாட் தள்ளுபடியை பெறலாம். பிற பயனர்கள் ஐக்யூ ஸ்டோர்களில் ஜனவரி 13 முதல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். வண்ண விருப்பங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் லெஜண்ட் மற்றும் ஆல்பா ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனானது 6.78 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 2K E6 பேனலை கொண்டிருக்கிறது.

சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த சிப்செட் தான் ஏணைய ப்ரீமியம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறந்த கேமிங் செயல்திறன் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். டூயல் x-லீனியர் மோட்டார் V2 சிப் பிரேம் ஆதரவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. கேமிங் செயல்திறனை மேம்படுத்துவதற்கு என iQOO 11 ஆனது டூயல் x-லீனியர் மோட்டாரைக் கொண்டிருக்கிறது.

கேமரா

ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்5 லென்ஸ், 13 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் ஆகிய மூன்று கேமராக்களைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி ஸ்னாப்பர் இருக்கிறது. ஐக்யூ 11 ஆனது பிரத்யேக V2 இமேஜிங் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

பேட்டரி

ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்து iQOO இந்தியா CEO நிபுன் மரியா கூறுகையில், “iQOO, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் செயல்திறன் அம்சங்களை கொண்டு வருவதே நோக்கமாகும். இந்த நோக்கம் பயனர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துகிறது. ப்ரீமியம் வடிவமைப்பு, முதன்மை சிறப்பம்சங்கள் மற்றும் சிறந்த செயல்திறனை வழங்கும் iQOO 11 ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் முதல் முதன்மை தயாரிப்பாக கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post ஜென் 2 சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளோடு வெளியானது ஐக்கூ 11 5ஜி first appeared on .

]]>
ஜென் 1 சிப்செட், 5000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களோடு வெளியாகிறதா iQoo 11 5G? https://www.91mobiles.com/tamil/new-iqoo-11-5g-smartphone-will-launch-on-december-8-specs-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-iqoo-11-5g-smartphone-will-launch-on-december-8-specs-features Mon, 05 Dec 2022 06:12:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4072 டிசம்பர் 8-ம் தேதி விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான் iQoo ‘ஐகூ 11 5ஜி (iQoo 11 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த போன் முதலில் சீனாவிலும் அதன்பின்பு சிறிது நாட்கள் கழித்து இந்தியாவிலும் அறிமுகமாகலாம். iQoo 11 ஸ்மார்ட்போன் உடன் iQOO 11 Pro எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஐகூ நிறுவனம். இந்த iQoo 11 5G போன் ஜென் 1 சிப்செட், 5000 […]

The post ஜென் 1 சிப்செட், 5000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களோடு வெளியாகிறதா iQoo 11 5G? first appeared on .

]]>

டிசம்பர் 8-ம் தேதி விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான் iQoo ‘ஐகூ 11 5ஜி (iQoo 11 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த போன் முதலில் சீனாவிலும் அதன்பின்பு சிறிது நாட்கள் கழித்து இந்தியாவிலும் அறிமுகமாகலாம். iQoo 11 ஸ்மார்ட்போன் உடன் iQOO 11 Pro எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஐகூ நிறுவனம். இந்த iQoo 11 5G போன் ஜென் 1 சிப்செட், 5000 mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களோடு வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த iQoo 11 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

GPU திறன்

இது ஒரு 5ஜி போன் ஆகும். iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாக இருக்கிறது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் 40 சதவீத குறைந்த மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறனைக் கொண்டிருக்கிறது. எனவே இந்த iQoo 11 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

டிஸ்பிளே

iQOO 11 5G ஆனது 6.78 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

மெமரி

iQOO 11 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவையும் இந்த போன் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.

கேமரா

iQOO 11 5G ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதனோடு எல்இடி ப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது.

பேட்டரி

iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. கேமிங் பயன்பாட்டுக்கும் நன்றாக இருக்கும். அதேசமயம் சில நிமிடங்களில் இந்த போனை ஃபுல் சார்ஜ் செய்ய முடியும். இத்தகைய பாஸ்ட் சார்ஜிங் வசதியை ஒரிரு மொபைல்கள் மட்டுமே கொண்டு இருக்கிறது.

இயங்குதளம்

இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கிறது இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன். முன்பே குறிப்பிட்டது போல் இந்த மொபைல் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

The post ஜென் 1 சிப்செட், 5000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களோடு வெளியாகிறதா iQoo 11 5G? first appeared on .

]]>