iqoo 9T https://www.91mobiles.com/tamil Wed, 03 Aug 2022 11:01:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமானது iQOO 9 சீரிஸ் போன் https://www.91mobiles.com/tamil/iqoo-9t-with-up-to-12gb-ram-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-9t-with-up-to-12gb-ram-launched-in-india Wed, 03 Aug 2022 11:01:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1333 ஐகூ நிறுவனம் இந்தியாவில் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.78 அங்குல FHD+ E5 AMOLED பிளாட் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 1500 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமரா, […]

The post அறிமுகமானது iQOO 9 சீரிஸ் போன் first appeared on .

]]>

  • ஐகூ நிறுவனம் இந்தியாவில் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.78 அங்குல FHD+ E5 AMOLED பிளாட் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 1500 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா என மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்பக்கத்தில் புகைப்படம் எடுக்கவும், வீடியோ அழைப்புகளைப் பேசவும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதில் கேமிங் மற்றும் ரியல்-டைம் எக்ஸ்டிரீம் நைட் விஷன் வசதிக்காக வி1 பிளஸ் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐகூ 9T ஸ்மார்ட்போன் 4700 mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

iQOO 9T அம்சங்கள் வசதிகள்

  • 6.78 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED 19.8:9 ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
  • 3.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
  • அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU
  • 8GB LPDDR5 6400Mbps ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி – 12 ஜிபி LPDDR5 6400Mbps
  • ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 23
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 50MP பிரைமரி கேமரா, f/1.75, OIS, எல்இடி பிளாஷ் – 13MP 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2 – 12MP போர்டிரெயிட் கேமரா, f/1.98
  • 16MP செல்பி கேமரா, f/2.45
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹைபை ஆடியோ
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
  • யுஎஸ்பி டைப் சி
  • 4700 எம்ஏஹெச் பேட்டரி
  • 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங்

ஐகூ 9T ஸ்மார்ட்போன் ஆல்பா மற்றும் லெஜண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 GB RAM, 128 GB  சேமிப்புத்திறன் கொண்ட போனின் விலை ரூ. 49,999 என்றும், 12 GB RAM, 256 GB சேமிப்புத்திறன் கொண்ட போனின் விலை ரூ. 54,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த போனை iQOO மற்றும் அமேசான் வலைதளங்களில் வாங்கலாம்.

The post அறிமுகமானது iQOO 9 சீரிஸ் போன் first appeared on .

]]>