iQoo Z6 lite 5G https://www.91mobiles.com/tamil Wed, 14 Sep 2022 11:55:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன்! https://www.91mobiles.com/tamil/iqoo-z6-lite-5g-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-z6-lite-5g-launched-in-india Wed, 14 Sep 2022 11:55:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2309 iQOO Z6 Lite 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது iQOO Z6 Lite 5G. இந்த மொபைல் Amazon India-வில் கிடைக்கிறது. iQOO Z6 Lite 5G மொபைல் Z6 வரிசையின் கீழ் வெளியகும் நிறுவனத்தின் நான்காவது மொபைல் இதுவாகும். இந்த Z6-சீரிஸின் கீழ் iQOO Z6, iQOO Z6 5G மற்றும் iQOO Z6, Pro 5G ஆகிய மொபைல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. iQOO Z6 Lite 5G ஆனது Qualcomm Snapdragon 4 […]

The post ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன்! first appeared on .

]]>

iQOO Z6 Lite 5G

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது iQOO Z6 Lite 5G. இந்த மொபைல் Amazon India-வில் கிடைக்கிறது. iQOO Z6 Lite 5G மொபைல் Z6 வரிசையின் கீழ் வெளியகும் நிறுவனத்தின் நான்காவது மொபைல் இதுவாகும். இந்த Z6-சீரிஸின் கீழ் iQOO Z6, iQOO Z6 5G மற்றும் iQOO Z6, Pro 5G ஆகிய மொபைல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

iQOO Z6 Lite 5G ஆனது Qualcomm Snapdragon 4 Gen 1 ப்ராஸசருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ்ரேட் உடன் கூடிய டிஸ்ப்ளே, 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது. பாக்ஸில் சார்ஜர் இல்லாமல் வெளியாகும் முதல் iQOO ஸ்மார்ட்போன் இந்த iQOO Z6 Lite 5G ஆகும். இதன் விலை, சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

விலை & சலுகை

iQOO Z6 Lite 5G மொபைலின் 4GB + 64GB வேரியண்ட் ரூ.13,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. அதுவே, 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.15,499க்கு விற்கப்படுகிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, iQOO SBI உடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதன் கீழ் வாடிக்கையாளர்கள் iQOO Z6 Lite இல் ரூ.2,500 கேஷ்பேக் பெறுவார்கள். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகை செப்டம்பர் 14 முதல் 15 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, iQOO Z6 Lite வாடிக்கையாளர்கள் 399 ரூபாய்க்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டரை காம்போ சலுகையாக வாங்கலாம்.

சிறப்பம்சம்

iQOO Z6 Lite 5G ஆனது நாட்டின் மிகவும் குறைந்த விலை 5ஜி போன்களில் ஒன்றாகும். ஃபோனின் முன்பக்கத்தில் 6.58 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்-ஐ கொண்டிருக்கிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்டு அறிமுகமான உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது முந்தைய பிராசஸரை விட 10 சதவீதம் மேம்பட்ட GPU திறன் மற்றும் 15 சதவீதம் மேம்பட்ட CPU திறன் கொண்டிருக்கிறது.

கேமரா

iQOO Z6 Lite 5G மொபைல் பேனலில் பின்புறத்தில் 50MP இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 8MP முன் கேமரா உள்ளது. இவை அனைத்தும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்களில் கூடுதல் 2ஜிபி மெய்நிகர் நினைவகத்திற்கான ரேம் பூஸ்டர், அல்ட்ரா கேம் பயன்முறை மற்றும் நீண்ட ஹை செயல்திறனுக்கான நான்கு-கூறு கூலிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் கிரீன் மற்றும் மிஸ்டிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

The post ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன்! first appeared on .

]]>
செப். 14ல் அறிமுகமாகிறது iQoo Z6 Lite 5G https://www.91mobiles.com/tamil/budget-priced-iqoo-z6-lite-5g-smartphone-set-to-launch-on-september-14/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=budget-priced-iqoo-z6-lite-5g-smartphone-set-to-launch-on-september-14 Mon, 12 Sep 2022 09:52:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2248 iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது iQoo Z6 Lite 5G இன் டிஸ்ப்ளே 1,080×2,408 பிக்சல்கள் அடர்த்தியுடன் இருக்கும் என ஆன்லைன் சான்றிதழ் தளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் பட்ஜெட் விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கு இது பலத்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி விவோவின் துணை பிராண்டான ஐக்யூ புதிய ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் […]

The post செப். 14ல் அறிமுகமாகிறது iQoo Z6 Lite 5G first appeared on .

]]>

  • iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது
  • iQoo Z6 Lite 5G இன் டிஸ்ப்ளே 1,080×2,408 பிக்சல்கள் அடர்த்தியுடன் இருக்கும் என ஆன்லைன் சான்றிதழ் தளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
  • இந்த மொபைல் பட்ஜெட் விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கு இது பலத்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி

விவோவின் துணை பிராண்டான ஐக்யூ புதிய ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 எம்பி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ப்ளே கன்சோலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் அம்சங்கள் குறித்த தகவலும் கசிந்துள்ளது.

சிப்செட்

iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது மாடல் எண் I2208 உடன் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm SM4375 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 6ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் தொடக்க வேரியண்ட் ஆக இது இருக்கலாம் என சில தகவல்கள் குறிப்பிடுகிறது. குறிப்பிட்டுள்ள குவால்காம் சிப்செட் ஆனது Snapdragon 4 Gen 1 SoC ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இயங்குதளம் & டிஸ்ப்ளே

iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது Funtouch OS 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. டிஸ்ப்ளே குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 440 ppi பிக்சல் அடர்த்தியுடன் கூடிய 1,080×2,408 பிக்சல்கள் அடர்த்தியைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

சார்ஜிங் ஆதரவு

ஐக்யூ நிறுவனம் முன்னதாகவே iQoo Z6 Lite 5G குறித்த சில அம்சங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பேட்டரி 127 மணிநேர மியூசிக் ப்ளே ஆதரவை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

iQoo Z6 Lite 5G மொபைலை இந்தியாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. ஐ ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு கொண்ட 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கும் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளே ஆதரவை பொறுத்தவரை 240Hz டச் மாதிரி விகிதத்துடன் 120Hz ரெஃப்ரஷிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

விற்பனை

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது இதன் பெயர் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் சாதனம் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படும் என்றும், அமேசான் தளம் வழியாக முதலில் இந்த மொபைல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து அமேசானில் இந்த ஸ்மார்ட்போனுக்கு என பிரத்யேக மைக்ரோ சைட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அம்சங்கள்

இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கும் என்பதும் போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என்பதை அமேசான் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் முன்னதாக வெளியான சில தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.58 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் Qualcomm Snapdragon 680 சிப்செட் உடன் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

விலை

கேமரா பற்றி பார்க்கும் போது, இது 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வரலாம். முன்பக்கத்தில், 8MP செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இந்த போன் ரூ.15,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் கசிந்த தகவல்கள் மட்டுமே என்பதால் செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது முழு அம்சங்களையும் அறிந்துக் கொள்ளலாம்.

The post செப். 14ல் அறிமுகமாகிறது iQoo Z6 Lite 5G first appeared on .

]]>