Jeep https://www.91mobiles.com/tamil Wed, 09 Nov 2022 08:19:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஜீப் நிறுவனத்தில் இருந்து ஒரு அட்டகாசமான எலக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/jeep-cj-surge-ev-concept-breaks-cover-first-time/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jeep-cj-surge-ev-concept-breaks-cover-first-time Wed, 09 Nov 2022 08:19:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3496 ஜீப் (Jeep) நிறுவனம் அதன் சிஜே சர்ஜ் (CJ Surge) எனும் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. சொகுசான, வசதிகள் அதிகம் கொண்ட மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் உடைய கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக இருப்பது, ஜீப் (Jeep). இந்நிறுவனம் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக, புதிய மின்சார கார் ஒன்றின் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்திருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் […]

The post ஜீப் நிறுவனத்தில் இருந்து ஒரு அட்டகாசமான எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

ஜீப் (Jeep) நிறுவனம் அதன் சிஜே சர்ஜ் (CJ Surge) எனும் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

சொகுசான, வசதிகள் அதிகம் கொண்ட மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் உடைய கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக இருப்பது, ஜீப் (Jeep). இந்நிறுவனம் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக, புதிய மின்சார கார் ஒன்றின் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்திருக்கிறது.

ஜீப் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக சிஜே-7 (CJ-7) இருக்கின்றது. 80-ஸ்களில் மிக சிறப்பான விற்பனை வரேவற்பைப் பெற்ற கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே தற்போது ஜீப் நிறுவனம் மின்சார வெர்ஷனில் உருவாக்கியிருக்கின்றது. கான்செப்ட் மாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காரையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செமா (Specialty Equipment Market Association) வாகன கண்காட்சியில் ‘சிஜே சர்ஜ்’ (CJ Surge) எனும் பெயரில் இவ்வாகனத்தை அறிமுகப்படுத்தியது.

கிளாசிக் தோற்றத்தில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இக்காரை ஜீப் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. ஆகையால், வாகன பிரியர்களிடையே இக்கார் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக காரில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

ஜீப் நிறுவனம் இந்த கான்செப்ட் மாடலில் 400v 200kW எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மின்சார மோட்டாருக்கு மின்சாரத்தை வழங்கும் விதமாக 24 லித்தியம் அயன் பேட்டரி மாடுல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் ரேஞ்ஜ் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது ஓர் முழு சார்ஜில் 400 கிமீ முதல் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், காரில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார மோட்டார் 266 எச்பி பவரை வெளியேற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு வீல்களுக்கும் இழுவை திறனை வழங்கும் வகையில் இந்த மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

கூடுதல் சிறப்பாக பிற வாகனங்களைப் போல் இல்லாமல் இரு கியர்களைக் கொண்டதாக சிஜே சர்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிளாசிக் வாகனத்தை சற்றே முரட்டுத் தனமான தோற்றத்தில் ஜீப் உருவாக்கியிருக்கின்றது. இதற்கு ஏதுவாக 18 அங்குல வீல்களும், 35 அங்குல பிஎஃப் குட்ரிச் ஆஃப்-ரோடு டயர்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த காரில் நீல நிறம் மற்றும் அடர் ஆரஞ்சு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவையே காருக்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து, 2 அங்குல அடர்த்தியான விண்ட் ஸ்கிரீன் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த விண்ட்ஸ்கிரீன் அவ்வளவு எளிதில் சேதமடையாது.

இதேபோல் இந்த காரின் பின் பக்கம் சற்றே மாறுபட்டதாக இருக்கின்றது. அங்கு ஏர் பெரிய ரோல்கேஜ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதிலேயே சிஜே சர்ஜ் வாகனத்தின் பேட்டரி பேக் மற்றும் ரோட்டரி கியர் செலக்டரைக் காட்டும் பாதை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளன். இந்த மாதிரியான தனித்துவமான அம்சங்களே இந்த காரின் பக்கம் அனைவரையும் ஈர்க்க வைத்துள்ளது.
ஜீப் நிறுவனம் இக்காரை தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே உருவாக்கியிருக்கின்றது. இக்காரை விற்பனைக்குக் கொண்டு வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

The post ஜீப் நிறுவனத்தில் இருந்து ஒரு அட்டகாசமான எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>