jio mart https://www.91mobiles.com/tamil Fri, 24 Feb 2023 09:42:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 டைப் சி உடன் ஐபோன் 15 – ரெண்டர்கள் வெளியானது. https://www.91mobiles.com/tamil/iphone-14-plus-price-discounted-by-rs-10000-jiomart-mobiles-electronics-fest/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iphone-14-plus-price-discounted-by-rs-10000-jiomart-mobiles-electronics-fest Fri, 24 Feb 2023 09:42:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6070 ஐபோன் 15 ரெண்டர்கள் 9to5mac வெளியிட்டு இருக்கும் புதிய 3D CAD ஃபைல் ரெண்டர்களில் ஐபோன் 15 விவரங்கள் தெரியவந்துள்ளது. கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ 9to5mac இடம் CAD மாடலை வழங்கி இருக்கிறது. அதில் ஐபோன் 15 மாடல் நாட்ச் ரக டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.   வடிவமைப்பு இது ஸ்கிரீனின் […]

The post டைப் சி உடன் ஐபோன் 15 – ரெண்டர்கள் வெளியானது. first appeared on .

]]>

Highlights

  • ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்களைத் தொடர்ந்து ஐபோன் 15 ரெண்டர்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
  • நாட்ச் ரக டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

ஐபோன் 15 ரெண்டர்கள்

9to5mac வெளியிட்டு இருக்கும் புதிய 3D CAD ஃபைல் ரெண்டர்களில் ஐபோன் 15 விவரங்கள் தெரியவந்துள்ளது. கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ 9to5mac இடம் CAD மாடலை வழங்கி இருக்கிறது. அதில் ஐபோன் 15 மாடல் நாட்ச் ரக டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.

 

வடிவமைப்பு

இது ஸ்கிரீனின் மேல்புறத்தில் ஒவல் வடிவ கட்-அவுட் கொண்டுள்ளது. இதில் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஐபோன் 15 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என CAD ஃபைல் விவரங்களில் தெரியவந்துள்ளது. ஸ்கிரீன் தவிர இந்த மாடலின் ரெசல்யூஷன், ரிப்ரெஷ் ரேட் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

டைனமிக் ஐலேண்ட்

புதிய ரெண்டர்களின் படி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் புதிய ஐபோன் மாடல்கள் அனைத்திலும் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களில் பழைய தொழில்நுட்பங்கள் இடம்பெறாது என்பதால் ஆப்பிள் இந்த முடிவை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

 

டைப் சி

ஸ்டாண்டர்டு ஐபோன் மாடல்களில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மூன்றாவது கேமரா மற்றும் LiDAR உள்ளிட்டவை ப்ரோ மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவைதவிர ஐபோன் 15 மாடலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் அதிவேக டேட்டா பரிமாற்றத்தை வழங்குகிறது.

மொபைல்ஸ் & எலெக்டிரானிக்ஸ் ஃபெஸ்ட் சேல்

ஜியோமார்ட் வலைத்தளத்தில் மொபைல்ஸ் அண்ட் எலெக்டிரானிக்ஸ் ஃபெஸ்ட் சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஐபோன் 14 பிளஸ் போனுக்கு தற்போது அதிரடி சலுகை மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று துவங்கிய இந்த சிறப்பு விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விற்பனை திருவிழாவில் முன்னணி சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவைதவிர வங்கிகளுடன் கூட்டணி அமைத்து அதிபட்சம் பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் பேங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் பயன்பெற முடியும். இந்த விற்பனையில் குறிப்பிடத்தக்க சலுகை ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

தள்ளுபடி விவரம்

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த விற்பனையில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜியோமார்ட் வலைத்தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ரூ. 78 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் 256 ஜிபி விலை ரூ. 88 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 99 ஆயிரத்து 990 ஆகும். ஐபோன் 13 (128 ஜிபி) மாடலுக்கு 12 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது ரூ. 61 ஆயிரத்து 490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

The post டைப் சி உடன் ஐபோன் 15 – ரெண்டர்கள் வெளியானது. first appeared on .

]]>