Jio Next 4G phone https://www.91mobiles.com/tamil Mon, 12 Dec 2022 10:53:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5ஜியை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் 4ஜியை வெளியிடும் ஜியோ! https://www.91mobiles.com/tamil/jio-to-launch-new-4g-phone-with-android-12-os-unisoc-chipset-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-to-launch-new-4g-phone-with-android-12-os-unisoc-chipset-soon Mon, 12 Dec 2022 10:53:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4252 ஜியோ நிறுவனம் தரப்பில் ஏற்கனவே 4ஜி மொபைல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அந்த போனுக்கு பெருமளவில் வரவேற்பு இல்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அனைவரும் அதை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இப்போது திடீரென JioPhone Next என்ற இன்னொரு 4ஜி போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதாவது ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த JioPhone Next ஆனது Qualcomm Snapdragon 215சிப்செட் உடன் […]

The post 5ஜியை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் 4ஜியை வெளியிடும் ஜியோ! first appeared on .

]]>

ஜியோ நிறுவனம் தரப்பில் ஏற்கனவே 4ஜி மொபைல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அந்த போனுக்கு பெருமளவில் வரவேற்பு இல்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அனைவரும் அதை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இப்போது திடீரென JioPhone Next என்ற இன்னொரு 4ஜி போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அதாவது ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த JioPhone Next ஆனது Qualcomm Snapdragon 215சிப்செட் உடன் வெளிவந்தது. அந்த போன் 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ், 3500 எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா 5.4அங்குல டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் அறிமுகமானது.

புதிய சிப்செட்

இந்நிலையில் ஜியோ நிறுவனம் மீண்டும் புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கீக்பெஞ்ச் தளத்தில் வெளிவந்த தகவலின்படி, ஜியோ நிறுவனம் Unisoc SC9863A சிப்செட் வசதியுடன் ஒரு 4ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே இந்த போனின் மாடல் எண் LS1602UWAB என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய 4ஜி போனில் 2ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. விரைவில் அனைத்து அம்சங்களும் தெரியவரும். குறிப்பாக ஜியோவின் புதிய 4ஜி போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன்

இந்நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அண்மையில் இதன் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஜியோபோன் 5ஜி மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்

ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன் வெளிவரும். பின்பு Adreno 619 GPU ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது 6.5 அங்குல எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

பேட்டரி

ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இதோடு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இந்த புதிய 5ஜி போன் ரூ.12,000-விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 5ஜி போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் புதிய சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்ய உள்ள 4ஜி போனுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்காது என்றே கூறலாம். ஏனெனில் தற்போது 5ஜி அலைவரிசை விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனி புதிய மொபைல் வாங்குபவர்கள் 5ஜி மொபைலையே விரும்புவார்கள்.

The post 5ஜியை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் 4ஜியை வெளியிடும் ஜியோ! first appeared on .

]]>
ரூ2000 எக்ஸ்டேஞ் ஆஃபரில் ஜியோ நெக்ஸ்ட் 4G போன்! https://www.91mobiles.com/tamil/jiophone-next-rs-2000-discount-exchange-old-phone/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jiophone-next-rs-2000-discount-exchange-old-phone Wed, 16 Nov 2022 11:33:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3664 சென்ற ஆண்டு அக்டோபரில் ரூ 6,499 என்ற விலையில் ஜியோ போன் நெக்ஸ்ட் அறிமுகமானது. அந்த போனுக்கு தற்போது ரூ 2000 எக்ஸ்சேஞ் ஆஃபரை வழங்கி இருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இதன் மூலம் நீங்கள் இப்போது வேலை செய்யும் நிலையில் இருக்கும் உங்கள் பழைய போனை கொடுத்து புதிய ஜியோ நெக்ஸ்ட் போனை ரூ 4,499க்கு பெற முடியும். இதுதவிர இதற்கு EMI வசதியும் வழங்கப்படுகிறது. ரூ 1,999 செலுத்தி இந்த மொபைலை பெற்றுக் கொள்ளலாம். மீதித் […]

The post ரூ2000 எக்ஸ்டேஞ் ஆஃபரில் ஜியோ நெக்ஸ்ட் 4G போன்! first appeared on .

]]>

சென்ற ஆண்டு அக்டோபரில் ரூ 6,499 என்ற விலையில் ஜியோ போன் நெக்ஸ்ட் அறிமுகமானது. அந்த போனுக்கு தற்போது ரூ 2000 எக்ஸ்சேஞ் ஆஃபரை வழங்கி இருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இதன் மூலம் நீங்கள் இப்போது வேலை செய்யும் நிலையில் இருக்கும் உங்கள் பழைய போனை கொடுத்து புதிய ஜியோ நெக்ஸ்ட் போனை ரூ 4,499க்கு பெற முடியும்.

இதுதவிர இதற்கு EMI வசதியும் வழங்கப்படுகிறது. ரூ 1,999 செலுத்தி இந்த மொபைலை பெற்றுக் கொள்ளலாம். மீதித் தொகையை 18 அல்லது 24 மாதங்கள் EMI ஆகச் செலுத்தலாம். இதற்கான திட்டம் ரூ 300ல் இருந்து ஆரம்பிக்கிறது. இத்திட்டத்தில் இணைய ரூ 501 செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள ஜியோ ஸ்டோர் அல்லது jio.com இணைய தளத்தை அணுகலாம்.

இதனிடையே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது.

தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

விஐ (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக விஐ நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி விஐ எந்த தகவலையும் வெளியிடவில்லை.

The post ரூ2000 எக்ஸ்டேஞ் ஆஃபரில் ஜியோ நெக்ஸ்ட் 4G போன்! first appeared on .

]]>