jio ture 5G https://www.91mobiles.com/tamil Sat, 19 Nov 2022 04:47:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 டெல்லி NCRஐ சுற்றி வளைத்தது ஜியோ ட்ரூ 5ஜி https://www.91mobiles.com/tamil/jio-true-5g-welcom-offer-is-now-available-across-delhi-ncr-region/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-true-5g-welcom-offer-is-now-available-across-delhi-ncr-region Sat, 19 Nov 2022 04:45:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3741 இந்தியாவின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, அதன் 5G (Jio 5G) சேவையை இப்போது டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உட்பட டெல்லியின் அனைத்து என்சிஆர் (Delhi NCR) பகுதிக்கும் விரிவுபடுத்தி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டில் அதன் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) நெட்வொர்க்கை விரைவாக வெளியிடுவதாகவும், இப்போது இந்தியப் புவியியலின் முக்கிய பகுதிகளில் வேகமாக விரிவடைந்து வருவதாகவும் கூறியுள்ளது. ஜியோ 5G முன்பு ஹைதராபாத், பெங்களூரு, […]

The post டெல்லி NCRஐ சுற்றி வளைத்தது ஜியோ ட்ரூ 5ஜி first appeared on .

]]>

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, அதன் 5G (Jio 5G) சேவையை இப்போது டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உட்பட டெல்லியின் அனைத்து என்சிஆர் (Delhi NCR) பகுதிக்கும் விரிவுபடுத்தி இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டில் அதன் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) நெட்வொர்க்கை விரைவாக வெளியிடுவதாகவும், இப்போது இந்தியப் புவியியலின் முக்கிய பகுதிகளில் வேகமாக விரிவடைந்து வருவதாகவும் கூறியுள்ளது. ஜியோ 5G முன்பு ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, சென்னை, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் கிடைத்தது.

வெல்கம் ஆஃபர்

“வெல்கம் ஆஃபர்” பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த பகுதிகளில், ஜியோ ட்ரூ 5ஜி “வெல்கம் ஆஃபர் (Welcome offer)” வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை கூடுதல் கட்டணம் ஏதுவுமின்றி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. Jio 5G இன் இந்த வரவேற்பு சலுகை MyJio பயன்பாட்டின் மூலம் அழைப்பைப் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, 5ஜி இன்வைட் அழைப்பைப் பெறுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இது நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் நெட்வொர்க் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஜியோ டிசம்பர் 2023-க்குள் பான்-இந்தியா வெளியீட்டை முடிப்பதாக உறுதியளித்துள்ளது. டெல்லி-NCR இல் உள்ள ஜியோ 5G நெட்வொர்க் அனைத்து முக்கிய இடங்களை வளைத்துப் பிடித்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளை நிறுவனம் கவர் செய்துள்ளது.

அதேபோல், இந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு கட்டிடங்கள், உயர் தெருக்கள், மால்கள் மற்றும் சந்தைகள், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள், தொழில்நுட்ப பூங்காக்கள், சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஜியோ தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1 Gbps வேகம்

டெல்லி-என்சிஆரில் வெல்கம் ஆஃபரை லட்சக்கணக்கான பயனர்கள் ஏற்கனவே அனுபவித்து வருவதாக ஜியோ கூறுகிறது. எந்தவித கட்டணமும் இல்லாமல் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க ஜியோ இப்போது மக்களை அனுமதிக்கிறது. 4G நெட்வொர்க்கில் ஜீரோ சார்பு கொண்ட தனித்த 5G கட்டமைப்பின் காரணமாக இது சாத்தியம் என்று ஜியோ கூறியுள்ளது.

டெல்லி-என்சிஆரில் உள்ள அதிகமான பயனர்கள் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபருக்கான அழைப்பைத் தொடர்ந்து பெறுவார்கள் என்று ஜியோ கூறியுள்ளது. இது கூடுதல் கட்டணமின்றி 1Gbps+ வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க அனுமதிக்கிறது. இலவசமாக 5ஜி டேட்டாவை அன்லிமிடெட் ஆக பெற வேண்டும் என்றால் உங்களிடம் ஜியோ 5ஜி இன்வைட் இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொள்ளுங்கள்.

நாட்டில் 5G டேட்டா திட்டங்களை ஜியோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது நடக்கும் வரை, ஜியோ தனது ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க் சேவையை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் என்பதை மறக்காதீர்கள். இது Jio 5G கிடைக்கும் அனைத்து பகுதிக்கும் பொருந்தும். குறிப்பாக தமிழ்நாட்டில் ஜியோ 5ஜி கிடைக்கும் சென்னை பகுதி மக்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி NCRஐ சுற்றி வளைத்தது ஜியோ ட்ரூ 5ஜி first appeared on .

]]>
ஜியோ Vs ஏர்டெல் – 5ஜி வேகத்துல எது பெஸ்ட்? https://www.91mobiles.com/tamil/latest-speed-test-report-from-ookla-says-jio-5g-download-speed-is-far-better-than-airtel-5g-plus/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=latest-speed-test-report-from-ookla-says-jio-5g-download-speed-is-far-better-than-airtel-5g-plus Fri, 11 Nov 2022 05:16:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3547 ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் வேகத்தை பரிசோதித்துப் பார்த்ததில் வெளியான தகவல்கள் சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு ரிலையன்ஸ் ஜியோ (Realiance Jio) வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களும் கூட கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை, சமீபத்திய ஓக்லா ரிப்போர்ட் (OOKLA Report) வழியாக அம்பலமாகி உள்ளது! அதென்ன உண்மை? அதென்ன ரிப்போர்ட்? ஓக்லா என்றால் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்! ஓக்லா என்றால் என்ன? ஓக்லா […]

The post ஜியோ Vs ஏர்டெல் – 5ஜி வேகத்துல எது பெஸ்ட்? first appeared on .

]]>

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் வேகத்தை பரிசோதித்துப் பார்த்ததில் வெளியான தகவல்கள் சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு ரிலையன்ஸ் ஜியோ (Realiance Jio) வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களும் கூட கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை, சமீபத்திய ஓக்லா ரிப்போர்ட் (OOKLA Report) வழியாக அம்பலமாகி உள்ளது! அதென்ன உண்மை? அதென்ன ரிப்போர்ட்? ஓக்லா என்றால் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஓக்லா என்றால் என்ன?

ஓக்லா (Ookla) என்பது கனெக்ஷன் டேட்டா ரேட் (Connection data rate) மற்றும் லேடன்சி (Latency) போன்ற இன்டர்நெட் அக்சஸ் பெர்ஃபார்மென்ஸ் மெட்ரிக்ஸை (Internet access performance metrics) “இலவசமாக” பகுப்பாய்வு செய்யும் ஒரு இணைய சேவை (Web Service ) ஆகும். ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் – இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களின் உண்மையான இன்டர்நெட் வேகம் தொடர்பான தரவுகளை புட்டுப்புட்டு வைக்கும் “ஒரு டெலிகாம் வில்லன்” என்றால் – அது ஓக்லா தான்!

ஏர்டெல் வேகம் என்ன?

சமீபத்தில் வெளியான ஓக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய கையோடு, ஏர்டெல் யூசர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்றே கூறலாம்! ஏனென்றால் லேட்டஸ்ட் ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது, ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி வேகத்துடன் ஒப்பிடும் போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி வேகமானது மிகவும் சிறப்பாக உள்ளது என்கிற உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது!

ஸ்பீட் டெஸ்ட்

வெளியான ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையின்படி, சி-பேண்டைப் பயன்படுத்தும் போது ஜியோ 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகம் – 606.53Mbps மற்றும் 875.26Mbps வரை இருந்தது. அதேசமயம் ஏர்டெல் 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகமானது 365.48 Mbps – 716.85 Mbps-ஐ மட்டுமே அடைய முடிந்தது. அதனை தொடர்ந்து ஓக்லாவானது, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்தது.

4 முக்கிய நகரங்களில் கிடைத்த சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்த போதிலும் கூட ஏர்டெல் நிறுவனமானது பின்னடைவைத்தான் சந்தித்துள்ளது. ஜியோவும் ஏர்டெல்லும் என்ன அளவிலானா சராசரி 5ஜி வேகத்தை பதிவு செய்துள்ளது என்கிற விவரங்கள் இதோ:

டெல்லியில் – 600Mbps (ஜியோ) 197.98Mbps (ஏர்டெல்)
மும்பையில் – 514.38Mbps (ஜியோ) 271.01Mbps (ஏர்டெல்)
கொல்கத்தாவில் – 482.02Mbps (ஜியோ) 33.83Mbps (ஏர்டெல்)
வாரணாசியில் – 485.22Mbps (ஜியோ) 516.57Mbps (ஏர்டெல்)

ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது, வாரணாசியை தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் ஜியோ தான் சிறந்த 5ஜி பதிவிறக்க வேகத்தை கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

காரணம் என்ன?

நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது ஜியோ வாங்கிய அதிக ஸ்பெக்ட்ரம் தான் இதற்கு காரணம்! அதனால் தான் ஜியோவின் 5ஜி வேகம் மிகவும் சிறப்பாக உள்ளது அதுமட்டுமின்றி, 700MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைக் கொண்ட ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ மட்டும் தான்!

ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் சி-பேண்ட்டை மட்டுமே கொண்டுள்ளனர்! இதனால், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் செயல்திறன் ஒப்பீட்டளவில் சற்றே குறைவானதாக இருக்கும்! எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 700MHz என்பது லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஆகும், இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உட்புற சிக்னல் ஊடுருவலை (indoor signal penetration) குறைக்கிறது. எனவே, ஜியோ நிறுவனம் சி-பேண்டைப் பயன்படுத்தும் போது, அதன் செயல்திறன் நன்றாக இருக்கும்.

The post ஜியோ Vs ஏர்டெல் – 5ஜி வேகத்துல எது பெஸ்ட்? first appeared on .

]]>
5G அப்டேட்டை பெற இருக்கும் 13 ஐபோன் மாடல்கள் https://www.91mobiles.com/tamil/total-of-13-iphone-models-in-india-will-support-beta-5g-connectivity-software-update-next-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=total-of-13-iphone-models-in-india-will-support-beta-5g-connectivity-software-update-next-week Fri, 04 Nov 2022 06:39:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3388 இந்தியாவில் சென்ற மாதம், ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகியவை நாட்டில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தின. இதனைடுத்து நாட்டின் சில பகுதிகளில் 5G சேவைகளை வழங்கவும் துவங்கியுள்ளது. இருப்பினும், 5G இணைப்பை இயக்க, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தகுதியான சாதனங்களுக்கான 5G ஃபார்ம்வேர் அப்டேட்களை (5G Firmware update) வெளியிட வேண்டியதுள்ளது. ஐபோன்களில் 5ஜி குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களை வைத்துள்ள இந்தியப் பயனர்களுக்கு இந்த அப்டேட் மிகவும் முக்கியமானது. சில வாரங்களுக்கு முன்பு, […]

The post 5G அப்டேட்டை பெற இருக்கும் 13 ஐபோன் மாடல்கள் first appeared on .

]]>

இந்தியாவில் சென்ற மாதம், ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகியவை நாட்டில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தின. இதனைடுத்து நாட்டின் சில பகுதிகளில் 5G சேவைகளை வழங்கவும் துவங்கியுள்ளது. இருப்பினும், 5G இணைப்பை இயக்க, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தகுதியான சாதனங்களுக்கான 5G ஃபார்ம்வேர் அப்டேட்களை (5G Firmware update) வெளியிட வேண்டியதுள்ளது.

ஐபோன்களில் 5ஜி

குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களை வைத்துள்ள இந்தியப் பயனர்களுக்கு இந்த அப்டேட் மிகவும் முக்கியமானது. சில வாரங்களுக்கு முன்பு, 5ஜி-க்கு தகுதியான ஐபோன்கள் டிசம்பர் மாதத்தில் ஃபார்ம்வேர் அப்டேட்டைப் பெறும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த அப்டேட் கிடைத்தால் மட்டுமே ஐபோன் பயனர்களால் 5G இணைப்பைச் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஐபோன் மாடல்களுக்கு 5G அப்டேட்!

இந்தியாவில் கிடைக்கும் மொத்தம் 13 ஆப்பிள் ஐபோன் மாடல்கள் 5G இணைப்பை ஆதரிக்கின்றன. இருப்பினும், இந்த 13 மாடல்களும் உரிய 5G Firmware update -ஐ பெற்ற பிறகு மட்டுமே 5ஜி இணைப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்பதனால், ஐபோன் பயனர்கள் காத்திருந்தனர். சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இப்போது 5ஜி சேவை கிடைக்கிறது.

ஃபார்ம்வேர் அப்டேட்

ஐபோன் பயனர்கள் டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியதுள்ளதால் கடுப்பில் இருந்து வந்தனர். சமீபத்தில் வெளியான புதிய தகவலின்படி, ஆப்பிள் இந்தியாவில் விரைவில் ஐபோன்களில் 5ஜியை சோதிக்க உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் ஒரு ஃபார்ம்வேர் அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இது தகுதியான மாடல்களில் 5G இணைப்பை செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வெளிவருகிறதா?

iOS 16 பீட்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அப்டேட் வெளியிடப்படும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இது அவர்களின் ஐபோன்களில் iOS 16.1 பீட்டாவை இயக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. iOS 16 பொது பீட்டா ஃபார்ம்வேர் வெளியீடு குறித்து ஆப்பிள் நிர்வாகிகள் விரைவில் தொலைத்தொடர்புத் துறை உறுப்பினர்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உடன் பகிரும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி பிளஸ் & ஜியோ ட்ரூ 5ஜி

ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி ஆகிய இரண்டிற்கும் ஆப்பிள் வரவிருக்கும் iOS 16 பொது பீட்டா அப்டேட் மூலம் ஆதரவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி, குருகிராம், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகள் ஆரம்பகால அணுகலின் ஒரு பகுதியாக இப்போது கிடைக்கின்றன. ஏர்டெல்லின் மிகப் பெரிய போட்டியாளரான ஜியோ தனது ட்ரூ 5ஜி சேவையை நான்கு நகரங்களில் கிடைக்கச் செய்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகியவை அடங்கும்.

அந்த 13 மாடல்கள்

எந்தெந்த ஐபோன் மாடல்களில் இந்த புதிய 5Gஅப்டேட் கிடைக்கப்பெறும் என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள iPhone மாடல்களின் பட்டியலில் உங்கள் ஐபோன் மாடல் இருக்கிறதா பார்த்துக் கொள்ளுங்கள்.
ஐபோன் 12 மினி (iPhone 12 Mini)
ஐபோன் 12 (iPhone 12)
ஐபோன் 12 ப்ரோ (iPhone 12 Pro)
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் (iPhone 12 Pro Max)
ஐபோன் 13 மினி (iPhone 13 Mini)
ஐபோன் 13 (iPhone 13)
ஐபோன் 13 ப்ரோ (iPhone 13 Pro)
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max)
ஐபோன் 14 (iPhone 14)
ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus)
ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro)
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max)
ஐபோன் எஸ்இ 3வது ஜென் (iPhone SE 3rd Generation)
இந்த 13 மாடல்களும் இந்த புதிய 5ஜி ஃபார்ம்வேர் அப்டேட்டை பெற இருக்கின்றன.

The post 5G அப்டேட்டை பெற இருக்கும் 13 ஐபோன் மாடல்கள் first appeared on .

]]>