jioplus https://www.91mobiles.com/tamil Tue, 14 Mar 2023 13:51:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 டேட்டவை பகிர்ந்து கொள்ளும் வசதியோடு ஜியோவின் 4 புதிய போஸ்ட்பெய்டு திட்டங்கள்! https://www.91mobiles.com/tamil/jio-introduce-4-postpaid-plans-with-lot-of-benifits/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-introduce-4-postpaid-plans-with-lot-of-benifits Tue, 14 Mar 2023 13:44:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6873 இந்தியா முழுவதும் 331 நகரங்களில் தனது 5ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது அடுத்த கட்டமாக முழு குடும்பத்திற்குமான புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் ரூ.299, ரூ.399, ரூ.599 மற்றும் ரூ.699 என 4 விதமான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் அளவற்ற அழைப்புகளையும், அளவற்ற SMS வசதியையும் கொண்டுள்ளன. திட்டத்திற்கு ஏற்ப கிடைக்கும் டேட்டா அளவு மாறுபடுகிறது. ரூ. 299 தவிர்த்து மற்ற போஸ்ட்பெய்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஒரு […]

The post டேட்டவை பகிர்ந்து கொள்ளும் வசதியோடு ஜியோவின் 4 புதிய போஸ்ட்பெய்டு திட்டங்கள்! first appeared on .

]]>

Highlights

  • ஜியோ ப்ளஸ் என்ற பெயரில் 4 புதிய போஸ்ட்பெய்டு திட்டங்கள் அறிமுகமாகி  இருக்கின்றன.
  • 4 நபர்கள் கொண்ட குடும்பத்தினருக்கு மொபைல் பயன்பாட்டுச் செலவு மாதம் ரூ.696 மட்டுமே.
  • இந்த புதிய ஜியோ ப்ளஸ் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மார்ச் 22 முதல் கிடைக்கும்.

இந்தியா முழுவதும் 331 நகரங்களில் தனது 5ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது அடுத்த கட்டமாக முழு குடும்பத்திற்குமான புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் ரூ.299, ரூ.399, ரூ.599 மற்றும் ரூ.699 என 4 விதமான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் அளவற்ற அழைப்புகளையும், அளவற்ற SMS வசதியையும் கொண்டுள்ளன. திட்டத்திற்கு ஏற்ப கிடைக்கும் டேட்டா அளவு மாறுபடுகிறது. ரூ. 299 தவிர்த்து மற்ற போஸ்ட்பெய்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஒரு மாத இலவச அணுகலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களை எப்போது இருந்து பயன்படுத்தக் கிடைக்கும்? எப்படி பெறுவது என்பதை இனி பார்க்கலாம்.

 

4 திட்டங்கள்

இந்த ஜியோ ப்ளஸ் போஸ்ட்பெய்டு திட்டங்களில் ரூ.299, ரூ.399, ரூ.599 மற்றும் ரூ.699 என 4 விதமான திட்டங்கள் உள்ளன. ரூ.299 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது மாதத்திற்கு 30ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.399 திட்டத்திற்கு 75ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.599 திட்டத்தில் 100ஜிபி டேட்டா கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் சந்தாவும் கிடைக்கிறது. கடைசியாக ரூ.699 திட்டத்தில் அளவற்ற டேட்டா வழங்கப்படுகிறது.

 

கூடுதல் பலன்கள்

இதில் ரூ.399 மற்றும் ரூ.699 திட்டங்களை தேர்ந்தெடுப்போருக்கு கூடுதல் சலுகையாக மூன்று புதிய போஸ்ட் பெய்டு இணைப்புகளை சேர்த்துக் கொள்ள முடியும். அதாவது ரூ.399 அல்லது ரூ.699 இணைப்பை எடுப்பவர்கள் தனது குடும்பத்தினர் 3 பேரை ஆளுக்கு ரூ99 வீதம் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும். ரூ.399 திட்டத்தை எடுப்பவர்கள் மூன்று பேரைச் சேர்க்கும் போது, 399 + 3 X 99 = ரூ.696 செலவில் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான மொபைல் இணைப்பு கிடைத்துவிடும். அதாவது ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ174 மட்டுமே செலவாகும்.

 

கூடுதல் டேட்டா

இந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் குடுபத்தினர் அனைவரும் டேட்டாவை பகிர்ந்து கொள்ள முடியும். தினசரி டேட்டா லிமிட் கிடையாது. ஒரு நாள் அதிகமாகவும், இன்னொரு நாள் குறைவாகவும் கூட பயன்படுத்த முடியும். இது தவிர முக்கியமாக நீங்கள் 5ஜி மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால், ‘ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபர்’ மூலமாக அளவற்ற 5ஜி டேட்டாவைப் பெற முடியும்.

 

கூடுதல் நன்மை

ஜியோவின் இந்த ஜியோ ப்ளஸ் போஸ்ட் பெய்டு திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் போன் நம்பர் வழங்கப்படும். நெட்ப்ளிக்ஸ், அமேசான், ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற சேவைகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் போது அங்கிருந்து இந்தியாவுக்கு நிமிடத்திற்கு ஒரு ரூபாயில் WiFi அழைப்பை மேற்கொள்ள முடியும். ஒரே இண்டர்நேஷனல் ரோமிங் திட்டம் மூலம் 129 நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.

 

சிறப்புச் சலுகை

இந்த ஜியோ ப்ளஸ் போஸ்ட் பெய்டு திட்டத்தின் சிறப்புச் சலுகையாக, ஜியோ ஃபைபர் உபயோகிப்பவர்கள், கார்பரேட் பணியாளர்கள், ஏற்கனவே வேறு நெட்வொர்க்கின் போஸ்ட்பெய்டு திட்டத்தை பயன்படுத்துவோர், HDFC, Axis bank மற்றும்  SBI வங்கியின் கடன் அட்டையை உபயோகிப்பவர்களுக்கும் செக்யூரிட்டி டெப்பாசிட் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எப்போது & எப்படி பெறுவது?

ஜியோவின் இந்த புதிய ஜியோ ப்ளஸ் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மார்ச் 22 முதல் கிடைக்கும். இதை ஜியோ ஸ்டோர்களுக்கு நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம். கூடுதலாக ஹோம் டெலிவரி மூலமும் சிம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான விவரங்கள் ஜியோவின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது

 

 

The post டேட்டவை பகிர்ந்து கொள்ளும் வசதியோடு ஜியோவின் 4 புதிய போஸ்ட்பெய்டு திட்டங்கள்! first appeared on .

]]>