K10 vitality edition https://www.91mobiles.com/tamil Thu, 28 Jul 2022 08:39:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் அறிமுகமான புதிய Oppo போன் https://www.91mobiles.com/tamil/oppo-k10-vitality-edition-launched-specs-features-and-more-articlecontent/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-k10-vitality-edition-launched-specs-features-and-more-articlecontent Thu, 28 Jul 2022 08:39:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1142 ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ K10 Vitality Edition எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் உடன் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து விரைவில் அனைத்து நாடுகளிலும் ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனில் இருக்கும் முக்கிய அம்சங்களை சற்று […]

The post ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் அறிமுகமான புதிய Oppo போன் first appeared on .

]]>

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ K10 Vitality Edition எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் உடன் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து விரைவில் அனைத்து நாடுகளிலும் ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனில் இருக்கும் முக்கிய அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.59-அங்குல Full HD+ LCD டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (touch samling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளியாகி இருப்பதால் வீடியோக்களை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் (MediaTek) சிப்செட்-ஐ விட ஸ்னாப்டிராகன் (snapdragon) சிப்செட் வசதிக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி இந்த புதிய போன் ஸ்னாப்டிராகன் 778ஜி (snap dragon) சிப்செட் வசதியைக்கொண்டுள்ளது. மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
இந்த ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் கருப்பு (black) மற்றும் நீல (blue) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12GB RAM மற்றும் 256GB சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் ஒப்போ அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளது.

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் 64MP முதன்மை கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது.

ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருக்கிறது. இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் வசதி, 5ஜி, வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளுடூத் 5.2 போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. ஒப்போ கே10 Vitality Edition விலை 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி போன் சேமிப்புத் திறன் கொண்ட ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனின் சீன விலை CNY 2,199. அதுவே இந்திய மதிப்பின்படி பார்த்தால் ரூ.25,900 ஆக உள்ளது. சீனாவில் வெளியானதை அடுத்து இந்த புதிய ஒப்போ கே10 விடலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் அறிமுகமான புதிய Oppo போன் first appeared on .

]]>