kamal https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:26:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இயக்குநர் லிங்குசாமியின் படத்தில் கமல்! https://www.91mobiles.com/tamil/it-is-reported-that-kamal-will-act-in-lingusamy-production/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=it-is-reported-that-kamal-will-act-in-lingusamy-production Wed, 04 Jan 2023 12:32:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4708 உத்தம வில்லன் படத்தின் தோல்விக்கும் நஷ்டத்துக்கும் ஈடுசெய்ய கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பல வித்தியாசமான முயற்சிகளை கையிலெடுக்கும் கமல்ஹாசன், 2015ல் உத்தம வில்லன் படத்தில் நடித்திருந்தார். கமலும் கிரேசி மோகனும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்கினார். கமலுடன் பூஜா குமார், ஊர்வசி, கே பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர். நெகட்டிவான விமர்சனங்களால் மிகப் பெரிய தோல்வியை சந்தித்த உத்தம வில்லன், பாக்ஸ் ஆபிஸிலும் […]

The post இயக்குநர் லிங்குசாமியின் படத்தில் கமல்! first appeared on .

]]>

உத்தம வில்லன் படத்தின் தோல்விக்கும் நஷ்டத்துக்கும் ஈடுசெய்ய கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பல வித்தியாசமான முயற்சிகளை கையிலெடுக்கும் கமல்ஹாசன், 2015ல் உத்தம வில்லன் படத்தில் நடித்திருந்தார். கமலும் கிரேசி மோகனும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்கினார். கமலுடன் பூஜா குமார், ஊர்வசி, கே பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர். நெகட்டிவான விமர்சனங்களால் மிகப் பெரிய தோல்வியை சந்தித்த உத்தம வில்லன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்ய முடியாமல் தடுமாறியது. இதனால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்பட்டது.

 

உத்தம வில்லன்

உத்தம வில்லன் தோல்வியால் தயாரிப்பாளர் லிங்குசாமியின் நிலை மிக மோசமானதாக அப்போது செய்திகள் வெளியாகின. மேலும், பலகோடி ரூபாய் நஷ்டத்தால் ஏராளமான கடனில் சிக்கி அவர் கஷ்டப்படுவதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சில வாரங்களுக்கு முன்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லிங்குசாமி வெளிப்படையாக பேசியிருந்தார். அதில், ‘ஆனந்தம்’ படத்திற்குப் பிறகு ‘மதி’ என்ற டைட்டிலில் ஒரு கதை எழுதியிருந்தேன். அது கமல் சாருக்காக எழுதியது தான், ஆனால் அப்போது அந்த கதையை படமாக எடுக்க முடியாமல் போனது. அதே கதையை மீண்டும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதில் கமல் சார் கண்டிப்பாக நடிப்பார் என நம்பிக்கைத் தெரிவித்து இருந்தார்.

 

கமல் – லிங்குசாமி கூட்டணி

அதேபோல் உத்தமவில்லன் படத்தின் தோல்வி பற்றியும் அவர் பேசியிருந்தார். “உத்தம வில்லன் படத்தின் தோல்விக்கு கமல் எனும் மகா கலைஞன் மீது பழி போடாதீர்கள். அவர் கூட படம் பண்ணதே எங்களுக்கு பெரிய விஷயம். எங்க நிறுவனம் இப்படி ஆனதுக்கு அவர் தான் காரணம்னு நான் சொல்லவே மாட்டேன். அப்படி ஒரு வார்த்தை என்னோட வாயில இருந்து வராது, திரும்ப ஒரு படம் பண்ணுவோம்னு கமல் சார் சொல்லியிருக்கார். நான் விரும்பிதான் உத்தம வில்லன் படம் தயாரித்தேன்” எனக் கூறியிருந்தார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில், மீண்டும் கமல் – லிங்குசாமி கூட்டணி இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

லிங்குசாமி தயாரிப்பில் கமல்

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதற்கு முன்பாக ஒரு படம் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக கமல் நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உத்தம வில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட கமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தை லிங்குசாமி தயாரிக்க மட்டுமே உள்ளதாகவும், ஹெச் வினோத் இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இல்லையென்றால் மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

விரைவில் அறிவிப்பு

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரவிருப்பதால், அதற்கு முன்பாகவே தான் கமிட்டான படங்களில் நடித்து முடிக்க கமல் முடிவு செய்துள்ளாராம். இந்தியன் 2 இறுதிப் பகுதியை எட்டிவிட்ட நிலையில், மணிரத்னம் இயக்கும் படமும் விரைவில் தொடங்க உள்ளதாம். இதனால் லிங்குசாமிக்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ள படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இயக்குநர் லிங்குசாமியின் படத்தில் கமல்! first appeared on .

]]>
விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! https://www.91mobiles.com/tamil/vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today Mon, 05 Dec 2022 14:04:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4091 நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் […]

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>

நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் தேதி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பணிகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோல இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அப்டேட் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்த நிலையில், விரைவில் அதுகுறித்து அவர் அப்டேட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன் என அடுத்தடுத்த நடிகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீருக்கு படக்குழு சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்காக 4 மாதங்கள் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படம் இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சூட்டிங்கிற்காக இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. முந்தைய பாகத்தில் சந்த்ரு மற்றும் சேனாபதி என இரண்டு கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிவரும் இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் கமல் மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். மாதத்தில் 20 நாட்கள் என அடுத்தடுத்து இந்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களாக ராம்சரணின் சூட்டிங்கிற்காக நியூசிலாந்து சென்றிருந்த ஷங்கர் கடந்த 3ம் தேதி நாடு திரும்பிய நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லன் கேரக்டருக்காக சத்யராஜிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்து 2023 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>
கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. https://www.91mobiles.com/tamil/udhayanithi-satalin-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=udhayanithi-satalin-movie-update Tue, 26 Jul 2022 11:56:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1078 தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நேற்று (25-07-2022) சென்னையில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. அதில உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். உதயநிதி […]

The post கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. first appeared on .

]]>

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நேற்று (25-07-2022) சென்னையில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. அதில உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் – கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில், “15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

The post கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி.. first appeared on .

]]>
ரஜினியின் 170-வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? https://www.91mobiles.com/tamil/rajinikanths-170th-film-as-a-director/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rajinikanths-170th-film-as-a-director Wed, 20 Jul 2022 09:03:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=987 அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஐதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு […]

The post ரஜினியின் 170-வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? first appeared on .

]]>

அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஐதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபடுகிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க விரும்புவதாக தெரிகிறது. ஏற்கனவே கமல்ஹாசனும், லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். அப்போது புதிய படத்தில் இணைவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு நடித்து திரைக்கு வந்த விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ரஜினியின் 170-வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? first appeared on .

]]>
புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கும் ஆளவந்தான். https://www.91mobiles.com/tamil/alavanthan-returns-with-new-technology/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=alavanthan-returns-with-new-technology Fri, 15 Jul 2022 05:01:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=909 கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களை குவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. தற்போது இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் வெளியான ஆளவந்தான் படத்தை புதிய தொழில்நுட்பத்துடன் ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளவந்தான் படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கமல் இரு வேடங்களில் நடித்திருந்த […]

The post புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கும் ஆளவந்தான். first appeared on .

]]>

கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களை குவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

தற்போது இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் வெளியான ஆளவந்தான் படத்தை புதிய தொழில்நுட்பத்துடன் ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆளவந்தான் படம்
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கமல் இரு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் வசூல் ரீதியாக கைக்கொடுக்கவில்லை என்றபோதிலும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக தேசிய விருதை பெற்றது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை சிறப்பாக கையாண்டிருந்தார் கமல்.

3டி & டால்பி தொழில்நுட்பம்
இந்நிலையில் தற்போது கமலின் விக்ரம் படம் கொடுத்துள்ள வெற்றியை தொடர்ந்து ஆளவந்தான் படத்தை மீண்டும் திரையிட தாணு முடிவெடுத்துள்ளார். 3டி மற்றும் டால்பி தொழில்நுட்பத்துடன் இந்தப் படம் விரைவில் ரசிகர்களை சந்திக்க திரையரங்குகளுக்கு வரவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது

The post புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியாக இருக்கும் ஆளவந்தான். first appeared on .

]]>