kantara https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:10:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நெட்ஃப்ளிக்ஸில் டாப் 10ல் மூன்று இடங்களைப் பிடித்த ‘துணிவு’ https://www.91mobiles.com/tamil/thunivu-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=thunivu-movie-update Wed, 15 Feb 2023 12:39:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5865 இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி […]

The post நெட்ஃப்ளிக்ஸில் டாப் 10ல் மூன்று இடங்களைப் பிடித்த ‘துணிவு’ first appeared on .

]]>

Highlights

  • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’திரைப்படம் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
  • நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருக்கும் படங்கள் பட்டியலில் ‘துணிவு’ திரைப்படம் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருக்கும் படங்கள் பட்டியலில் ‘துணிவு’ திரைப்படம் மூன்று இடங்களை பிடித்துள்ளது. அதாவது, ‘துணிவு’ திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷன் முதலிடத்தையும் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், நான் இங்கிலீஸ் (non english) பிரிவில் முதல் ஐந்து இடத்தில் இரண்டு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை குவித்தது. நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர்.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘காந்தாரா’ படம் குறித்து புதிய செய்தி பரவி வருகிறது. அதன்படி, இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளிநாடுகளில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நெட்ஃப்ளிக்ஸில் டாப் 10ல் மூன்று இடங்களைப் பிடித்த ‘துணிவு’ first appeared on .

]]>
ஆஸ்கருக்கு செல்லும் காந்தாரா! https://www.91mobiles.com/tamil/kantara-movie-has-been-confirmed-that-the-film-has-been-sent-for-the-oscars-nomination/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kantara-movie-has-been-confirmed-that-the-film-has-been-sent-for-the-oscars-nomination Thu, 22 Dec 2022 13:15:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4491 காந்தாரா திரைப்படம் கடைசி நேரத்தில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படம் நிச்சயம் விருதை அள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது. […]

The post ஆஸ்கருக்கு செல்லும் காந்தாரா! first appeared on .

]]>

காந்தாரா திரைப்படம் கடைசி நேரத்தில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படம் நிச்சயம் விருதை அள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது.

காந்தாரா கதை

பெயர், புகழ், செல்வாக்கும் கொண்ட ஒரு அரசருக்கு எதிலும் மன நிம்மதி இல்லாததால், முனிவர் ஒருவரின் ஆலோசனையை கேட்டு, நிம்மதி தேடி அலைகிறார். அப்போது, காட்டுப்பகுதியில் ஒரு இனத்தவர் வழிபாடு செய்யும் தெய்வத்தைப்பார்த்து, மெய்மறந்து அந்த தெய்வத்தை தனக்கு தரும்படி கேட்கிறார். அதற்கு பதிலாக அந்த தெய்வன், என் குரலின் சத்தம் எவ்வளவு தூரம் கேட்கிறோ அவ்வளவு நிலத்தையும் எங்கள் மக்களுக்கு தரவேண்டும் என கேட்கிறது.

நேரில் வந்த தெய்வம்

தெய்வத்திற்காக பல ஏக்கர் நிலத்தை அந்த மக்களுக்கு எழுதி கொடுத்துவிடுகிறார். இதற்குப் பிறகு அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை மீட்க நினைக்க, அங்கிருந்த தெய்வம் அவனை கொன்றுவிடுகிறது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதே நிலத்தை மக்களிடமிருந்து பறிக்க நினைக்க அரசர் வழிவந்த ஒருவன் நினைக்க தெய்வம் மீண்டும் தோன்றி நிலத்தை காப்பாற்றுகிறது.

மகத்தான வசூல்

திரையரங்கிற்கு அதிக ரசிகர்களை வரவைத்த திரைப்படம் என்ற பெருமை காந்தாரா படத்திற்கு கிடைத்தது. கர்நாடக மாநிலம் மங்களுர், உடுப்பி போன்ற தெற்கு கடலோரப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் வழிபடக்கூடிய கிராம தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதால், அப்படம் அனைவருக்கும் பிடித்துப்போய் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்கர் விருதுக்கு

இந்நிலையில்,காந்தாரா படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான விருது பரிந்துரைக்கு திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது என்று படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை அனுப்பியிருந்தாலும் காந்தாரா நிச்சயம் விருதை வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர். நாட்டுக்கூத்து

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் குஜராத்தி படமான செல்லோ ஷோவும் தேர்வாகி உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் 12ந் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது.

The post ஆஸ்கருக்கு செல்லும் காந்தாரா! first appeared on .

]]>
அமேசான் ப்ரைமில் வெளியானது காந்தாரா! https://www.91mobiles.com/tamil/kantara-starts-streaming-on-amazon-prime/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kantara-starts-streaming-on-amazon-prime Thu, 24 Nov 2022 09:05:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3874 கன்னட திரைப்படமான காந்தாரா நவம்பர் 4ம் தேதியே பொன்னியின் செல்வன் படத்துடன் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அமேசான் ப்ரைம் அதன் ஓடிடி ரிலீஸை தள்ளி வைத்தது. அதன் பின்னர் காந்தாரா ஓடிடியில் எப்போது வரும் வீட்டில் குடும்பத்தினருடன் காணலாம் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காந்தாரா அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த ஆண்டு கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு கன்னட […]

The post அமேசான் ப்ரைமில் வெளியானது காந்தாரா! first appeared on .

]]>

கன்னட திரைப்படமான காந்தாரா நவம்பர் 4ம் தேதியே பொன்னியின் செல்வன் படத்துடன் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அமேசான் ப்ரைம் அதன் ஓடிடி ரிலீஸை தள்ளி வைத்தது. அதன் பின்னர் காந்தாரா ஓடிடியில் எப்போது வரும் வீட்டில் குடும்பத்தினருடன் காணலாம் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காந்தாரா அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த ஆண்டு கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு கன்னட திரையுலகை தலைநிமிரச் செய்த படம் என்றால் அது காந்தாரா தான்.

கன்னட திரையுலகம் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அதை பற்றி யாருமே பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. கன்னட ரசிகர்களை தவிர பிற மொழி ரசிகர்கள் கன்னட படங்களை பார்ப்பதை வெகுவாக தவிர்த்து வந்தனர். ஆனால், கேஜிஎஃப் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் பார்வையும் கன்னட திரையுலகம் மீது திரும்பியுள்ளது. அதில், மைல் கல்லாக காந்தாரா திரைப்படம் அமைந்துள்ளது.

வசூல் மழை

வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி என்கிற இமாலய வசூல் வேட்டையை நடத்தி கன்னட திரையுலகத்திற்கு இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக அமைந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன் வன அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வசூலில் பொன்னியின் செல்வன் படத்தை துரத்திக் கொண்டு வரும் காந்தாரா திரைப்படம் ஓடிடியிலும் அந்த படத்திற்கு பெரிய தலைவலியாக மாறும் என நவம்பர் 4ம் தேதி கருதப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை முதலில் ரசிகர்கள் பார்த்து முடிக்கட்டும் அதன் பிறகு காந்தாராவை வெளியிடுவோம் என அமேசான் ப்ரைம் இவ்வளவு கால தாமதம் செய்து விட்டது.

அமேசானில்.. 4 மொழிகளில்..

இந்நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24ம் தேதி காந்தாரா வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அமேசான் பிரைம் ஓடிடியில் காந்தாரா திரைப்படம் வெளியானது. அந்த படத்தை குடும்பத்துடன் விடிய விடிய பார்த்து ரசித்த மக்கள் #KantaraOnPrime ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் அமேசான் பிரைமில் காந்தாரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்த ஓடிடி ரசிகர்கள் படம் படு மிரட்டலாக உள்ளதாக விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தியேட்டரில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை காந்தாரா அனுபவத்தை ஓடிடியில் கண்டு ரசித்தனர்.

ஏமாற்றம்

காந்தாரா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வராஹ ரூபம் பாடல் காப்பி ரைட்ஸ் பிரச்சனை காரணமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்துக்கு பலமே அந்த பாடல் தான் அதையே தூக்கிட்டீங்களே.. ரொம்பவே கடுப்பா இருக்கு என சோஷியல் மீடியாவில் தங்கள் வருத்தத்தையும் பதிவிட்டு வருகின்றனர். தியேட்டரில் இருந்த அந்த கூஸ்பம்ப்ஸ் காந்தாரா ஓடிடியில் வெளியானதில் கொஞ்சம் கூட இல்லை. கிளைமேக்ஸில் வராஹ ரூபம் பாடல் மாற்றப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். நீங்க காந்தாரா பார்த்துட்டீங்களா?

The post அமேசான் ப்ரைமில் வெளியானது காந்தாரா! first appeared on .

]]>