komaki https://www.91mobiles.com/tamil Tue, 04 Oct 2022 12:22:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கோமகியின் ஹை-ஸ்பீடு ஸ்கூட்டர் அறிமுகம் https://www.91mobiles.com/tamil/komaki-venice-eco-high-speed-electric-scooter-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=komaki-venice-eco-high-speed-electric-scooter-launched-in-india Tue, 04 Oct 2022 12:22:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2784 கோமகி அதன் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவின் புகழ்பெற்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கோமகி (Komaki), அதன் வெனிஸ் ஈகோ (VENICE ECO) எனும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் பற்றிய கணிசமான தகவல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அதிகாரப்பூர்வமாக ரூ. 79 ஆயிரம் என்கிற விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வரவால் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் […]

The post கோமகியின் ஹை-ஸ்பீடு ஸ்கூட்டர் அறிமுகம் first appeared on .

]]>

கோமகி அதன் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்தியாவின் புகழ்பெற்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கோமகி (Komaki), அதன் வெனிஸ் ஈகோ (VENICE ECO) எனும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் பற்றிய கணிசமான தகவல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அதிகாரப்பூர்வமாக ரூ. 79 ஆயிரம் என்கிற விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வரவால் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெள்ளை மற்றும் நீலம் உட்பட 7 நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம் ஃபெர்ரோ ஃபாஸ்பேட் (LiPO4) பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியின் ரியல் டைமை அனலைஸ் செய்யக் கூடிய கருவியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் பெரிய டிஎஃப்டி திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை 6.4 அங்குல மூன்றாம் தலைமுறை திரையாகும்.
இந்த திரை மிக சிறந்த நேவிகேஷன் தகவலை வழங்கும். இதுமட்டுமின்றி, இதில் மியூசிக் பிளேயரும் கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்று பற்பல வசதிகள் அந்த திரையில் உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை நிறுவனம் அதிக வேகத்தில் செல்லும் மின்சார ஸ்கூட்டர் என குறிப்பிடுகின்றது. ஆனால், இதன் வேக திறன் பற்றிய விபரம் வெளியாகவில்லை.

எங்களின் யூகத்தின்படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 40 கிமீ அல்லது 60 கிமீ வரையிலான உச்ச வேகத்தைக் கொண்டிருக்கலாம் என தெரிகின்றது. நிறுவனம் ஏற்கனவே 11 குறைந்த வேக திறனை வெளியேற்றக் கூடிய மின்சார ஸ்கூட்டரையும், ஆறு உயர் வேக எலெக்ட்ரிக் டூ-வீலரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே கோமகி வெனிஸ் ஈகோ விற்பனைக்கு இணைந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இதில் தீயை எதிர்க்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்தில் சிக்காது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதன் வாயிலாக ரைடர்கள், அதாவது, வெனிஸ் ஈகோ உரிமையாளர்கள் எந்தவித அச்சமுமின்றி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க முடியும்.

தீ விபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பன்முக சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பன்முக தெர்மல் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், செயலி இணைப்பு அம்சமும் வெனிஸ் ஈகோவில் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ முதல் 100 கிமீ வரை பயணிக்க முடியும்.

பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் முதல் 4 மணி நேரங்கள் தேவைப்படும். அதேநேரத்தில் இதன் ஒவ்வொரு முழு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், அதிக பலன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என யூகிக்க முடிகின்று. வெனிஸ் ஈகோ கார்னெட் ரெட் (garnet red), சேக்ரமென்டோ கிரீன் (sacramento green), ஜெட் பிளாக் (jet black), மெட்டாலிக் ப்ளூ (metallic blue), பிரைட் ஆரஞ்சு (bright orange) மற்றும் சில்வர் க்ரோம் (silver chrome) ஆகிய நிற தேர்வுகளிலேயே வெனிஸ் ஈகோ விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, 2019ம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவில் புதுமுக மின் வாகனங்களின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையிலேயே அதி-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்புபவர்களைக் கவரும் வகையில் வெனிஸ் ஈகோ விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது.

The post கோமகியின் ஹை-ஸ்பீடு ஸ்கூட்டர் அறிமுகம் first appeared on .

]]>
அறிமுகமாகிறது தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/komaki-teased-venice-eco-e-scooter-with-fireproof-battery/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=komaki-teased-venice-eco-e-scooter-with-fireproof-battery Thu, 22 Sep 2022 12:16:02 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2539 கோமகி நிறுவனம் தனது LiFePO4 பேட்டரியோடு வெனீஸ் எக்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் ஒரு முக்கியமான நிறுவனம் கோமகி. இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் 11 குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் 6 அதிக வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் பயணிகள் வாகனம் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் எலெக்ட்ரிக் வாகனங்களைக் கூட தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் […]

The post அறிமுகமாகிறது தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>
கோமகி நிறுவனம் தனது LiFePO4 பேட்டரியோடு வெனீஸ் எக்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் ஒரு முக்கியமான நிறுவனம் கோமகி. இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் 11 குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் 6 அதிக வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் பயணிகள் வாகனம் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் எலெக்ட்ரிக் வாகனங்களைக் கூட தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த கோமகி நிறுவனம் தற்போது வெனீஸ் எக்கோ என்ற அதிக வேக எலெக்ரிக் ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான டீசரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த டீசரில் பைக்கின் முழு அமைப்பைக் காட்டாமல் வெறும் இந்த பைக்கின் டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவை மட்டும் காட்டியுள்ளது. அதில் 6 x 4 அங்குல அளவில் உள்ள 3ம் தலைமுறை டச் ஸ்கிரீன் இடம் பெற்றுள்ளது. இந்த டீசரில் ஒரு நிறத்தில் உள்ள ஸ்கூட்டர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. பொதுவாக கோமகி நிறுவனத்தின் அதிக வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொருத்தவரை வெள்ளை மற்றும் நீல நிற ஷேட்களில் மட்டுமே கிடைத்து வந்தது.

தற்போது கோமகி நிறுவனம் இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மொத்தம் 7 நிறங்களில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இது போக இந்நிறுவனம் டீஸ் செய்துள்ள டிஎஃப்டி ஸ்கிரீன் நேவிகேஷனிற்கு சிறப்பாகச் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் மியூசிக் பிளேயரும் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் பாட்டுக் கேட்டுக்கொண்டே பயணிக்க முடியும்.

இந்த கோமகி வெனீஸ் எக்கோ ஸ்கூட்டரை பொருத்தவரை லித்தியம் ஃபெர்ரோ பாஸ்பேட் என்ற பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் ரியல் டைம் அனலைசர் இந்த இந்நிறுவனம் டீஸ் செய்துள்ள டச் ஸ்கிரீனில் தெரிகிறது. இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் குன்ஞன் மல்கோத்ரா கூறும்போது “கோமகி நிறுவனம் பசுமையான மாசு இல்லாத வாகனங்களைத் தயாரிப்பதில் தரமான தயாரிப்புகளை வழங்கும் நிறுவனம் என மக்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ளது. எங்கள் தயாரிப்புகள் அதிக திறன், அதிக பலம், சிறப்பான டிசைன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் நீண்ட காலம் உழைக்கும் தயாரிப்புகளாகும். வெனீஸ் எக்கோ ஸ்கூட்டரும் இதில் முக்கிய பங்கை வகிக்கும். வாடிக்கையாளர்கள் பலர் விரும்பும் படி இதை வடிவமைத்துள்ளோம்” எனக் கூறினார்.

இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட லித்தியம் அயான் ஃபெர்ரோ பாஸ்பேட்(LiFePO4) பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரி தீ பிடிக்காத தன்மை கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த பேட்டரியை தான் இந்த வாகனத்தில் பயன்படுத்தியுள்ளது. இந்த பேட்டரியை தயாரிக்கும் போதே இந்த வாகனத்திற்கு இந்த பேட்டரி தான் பொருத்த வேண்டும் என அந்நிறுவனம் முடிவு செய்திருந்தது.

தீப்பிடிக்காத தன்மைக்காக இந்த பேட்டரியில் பயன்படுத்தப்படும் செல்களின் எண்ணிக்கை 3ல் 1 பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் குறைவாகவே வெளியாகும். இது மட்டுமல்ல LiFePO4 ன் லைஃப் சைக்கிள் 2500-3000 என அந்நிறுவனம் தெரித்துள்ளது. சாதாரண நிக்கல், மேக்னீஸ், கோபால்ட் பேட்டரியின் லைஃப் சைக்கிள் வெறும் 800 தான்.

இந்த பேட்டரியை தயாரிக்கும் போது அந்நிறுவனம் வெனீஸ் ஸ்கூட்டரில் இந்த பேட்டரி 300 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என்றும், இந்நிறுவனம் அடுத்ததாகத் தயாரித்து வரும் SE மற்றும் TN95 ஸ்கூட்டர்கள் 180 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் இந்த ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ வெளியீடு நடக்கும்போதே உறுதியாகும்.

கோமகி நிறுவனம் இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ79,999 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் உள்ள ஓலா எஸ்1, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.

The post அறிமுகமாகிறது தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>
எரியாத பேட்டரியை உருவாக்கிய கோமகி! https://www.91mobiles.com/tamil/komaki-launches-fire-resistant-batteries-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=komaki-launches-fire-resistant-batteries-in-india Mon, 08 Aug 2022 12:30:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1449 பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி (Komaki) தீ விபத்தைத் தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரியை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறது. மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் தீ விபத்து நிகழ்வுகள் அண்மைக் காலமாக தொடர் கதையாகி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தீயை தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரியை உருவாக்கியிருக்கின்றது. தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நிறுவனம் தற்போது பேட்டரியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. பெரும்பாலான மின்சார இருசக்கர வாகன […]

The post எரியாத பேட்டரியை உருவாக்கிய கோமகி! first appeared on .

]]>

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி (Komaki) தீ விபத்தைத் தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரியை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.
மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் தீ விபத்து நிகழ்வுகள் அண்மைக் காலமாக தொடர் கதையாகி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தீயை தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரியை உருவாக்கியிருக்கின்றது. தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நிறுவனம் தற்போது பேட்டரியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

பெரும்பாலான மின்சார இருசக்கர வாகன தீ விபத்து சம்பவங்கள் சார்ஜ் போடும் போது ஏற்பட்டு இருக்கிறது. ஏனெனில், சார்ஜ் போடும்போது பேட்டரியில் அதிகம் வெப்பம் ஏற்படுவது வழக்கம். இந்த வெப்பமே சில எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் தீ விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஓர் பேட்டரியையே கோமகி தற்போது உருவாக்கியுள்ளது. இந்த பேட்டரி அடுத்த மாதத்தில் இருந்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் இடம் பெற இருப்பதாக கோமகி தெரிவித்துள்ளது.

லித்தியம் அயன் ஃபெர்ரோ பாஸ்பேட் (LiFePO4) ரக பேட்டரியையே தீயை தவிர்க்கும் திறனில் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த பேட்டரியில் அயர்னே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் இக்கட்டான சூழலிலும் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மூன்றில் ஒரு பங்கு செல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது உச்சபட்ச வெப்பத்தைத் தவிர்க்க உதவியாக இருக்கும். இந்த பேட்டரியின் வாழ்க்கை சுழற்சி 2500 முதல் 3000 வரை என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிக்கல், மக்னீசியம் மற்றும் கோபால்ட் ஆகியவற்றால் ஆன பேட்டரிகளைக் காட்டிலும் 800 வாழ்க்கை சுழற்சி இதில் அதிகம் ஆகும்.

இந்த பேட்டரியை விரைவில் தனது அனைத்து தயாரிப்புகளிலும் கோமகி நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், சமீப காலமாக அதிகரித்து வரும் மின்சார இருசக்கர வாகன தீ விபத்து சம்பவங்கள், மின் வாகன பயன்பாட்டிற்கு பெரும் தடைக் கல்லாக மாறத் தொடங்கியிருக்கின்றது.

இதுமட்டுமின்றி பலர் தொடர் தீ விபத்தைக் காரணம் காட்டி மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கும் பிளானையே தள்ளிப் போட்டிருக்கின்றனர். இவை அனைத்திற்கும் முற்று புள்ளி வைத்து, மின் வாகனங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு கோமகி நிறுவனம் தீயை தவிர்க்கும் பேட்டரியை அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக வெனிஸ், எஸ்இ மற்றும் டிஎன்95 ஆகியவை இருக்கின்றன. இவை மட்டுமின்றி நிறுவனத்தின் ரேஞ்ஜர் மற்றும் டிடி 3000 ஆகிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஒன்பது குறைந்த வேக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும், ஆறு ஹை-ஸ்பீடு மின்சார இருசக்கர வாகனங்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் புதிய லித்தியம் அயன் ஃபெர்ரோ பாஸ்பேட் ஒரு முழு சார்ஜில் 300 கிமீ ரேஞ்ஜ் தரும் திறனில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இதற்கு நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

The post எரியாத பேட்டரியை உருவாக்கிய கோமகி! first appeared on .

]]>