kwid https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 10:25:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 குறைந்த விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா ரெனால்ட் நிறுவனம்? https://www.91mobiles.com/tamil/renault-might-introduce-kwid-all-electric-in-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=renault-might-introduce-kwid-all-electric-in-india-soon Tue, 14 Feb 2023 10:45:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5823 இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பிரிமியம் செக்மெண்டில் மட்டுமே கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று குறைந்த பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றனர். இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் இவி வெர்ஷனை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.   […]

The post குறைந்த விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா ரெனால்ட் நிறுவனம்? first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் இவி வெர்ஷனை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.
  • அதுவும் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பிரிமியம் செக்மெண்டில் மட்டுமே கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று குறைந்த பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றனர். இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் இவி வெர்ஷனை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

டாடா இவி

டாடா நிறுவனம் முதன் முறையாக ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாடா டியாகோ இவி கார் தான் தற்போது மார்கெட்டில் குறைந்த விலை இவி காராக இருக்கிறது. இந்நிலையில் மார்கெட்டில் கார் தயாரிப்பு நிறுவனம் அதிக கார்கள் விற்பனையாகும் செக்மெண்டில் இவி கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

 

ரெனால்டும் களம் இறங்குகிறது

எம்ஜி, சிட்ரோன் ஆகிய நிறுவனங்கள் விரைவில் குறைந்த விலையில் இவி கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் ரெனால்ட் நிறுவனமும் இந்தியாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் காரை களம் இறக்கப்போவதாகப் பேச்சு எழுந்துள்ளது. இதற்காகத் தனது என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரை பயன்படுத்தப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

க்விட் இவி

ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரித்து இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக விற்பனைக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இது தற்போது உள்ள க்விட் காரை விடப் பார்க்கச் சிறப்பானதாகவும், அதிகமான அம்சங்கள் நிறைந்ததாகவும், அதிக பேட்டரி லைஃப் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ரெனாலட் க்விட் எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே வெளிநாடுகளில் வேறு வேறு பெயர்களில் விற்பனையாகி வருகிறது. ஐரோப்பாவில் டேக்கியா ஸ்பிரிங் இவி என்ற பெயரிலும், சீனாவில் ரெனால்ட் சிட்டி கே-ஸிஇ என்ற பெயரிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார் தான் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாற்றங்கள்

இந்த ரெனால்ட் க்விட் இவி காரின் டிசைனை பொருத்தவரை தற்போது உள்ள க்விட் காரின் பெரும்பாலான அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. ஆனால் சில சின்ன சின்ன ஆல்ட்ரேஷன்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக சில டெக்னிக்கல் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் எலெக்ட்ரிக் காரின் தேவைகளுக்குத் தகுந்தார் போல மாற்றப்படும் எனத் தெரிகிறது.

மைலேஜ்

இந்த காரின்பேட்டரி குறித்த விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் ரெனால்ட் நிறுவனம் முழு சார்ஜில் 230-305 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்ட வாகனமாக இதை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது மட்டுமல்ல இந்த காரின் அதிகபட்ச வேகமாக 125 கி.மீ வேகம் செல்லும் மோட்டாரை ஃபிட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட்டும் என எதிர்பார்க்கலாம்.

 

திறன்

இது 0-80 சதவீத சார்ஜை வெறும் 30 நிமிடத்தில் ஏற்றும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இந்த காரின் விலை தான். இந்த காரை ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர ரெனால்ட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. அப்படி இந்த கார் குறைவான விலையில் விற்பனைக்கு வந்தால் குறைந்த பட்ஜெட் கார் செக்மெண்டில் மாருதி நிறுவனம் தற்போது பெருவாரியான கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் விற்பனையில் பலத்த அடி ஏற்படும். மேலும் குறைந்த பட்ஜெட்டில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ரெனால்ட் நிறுவனம் மாறும் என எதிர்பார்க்கலாம்.

The post குறைந்த விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறதா ரெனால்ட் நிறுவனம்? first appeared on .

]]>
இந்தியாவிற்கு வருமா ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக் கார்? https://www.91mobiles.com/tamil/renault-planning-to-launch-kwid-ev-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=renault-planning-to-launch-kwid-ev-in-india Tue, 10 Jan 2023 10:39:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4852 க்விட் இவி காரின் மூலம் இந்தியாவின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ரெனால்ட்டும் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நம் நாட்டில் உள்ள எலக்ட்ரிக் காரை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் என சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. மஹிந்திரா அடுத்ததாக எக்ஸ்யூவி400 காரின் மூலம் நுழைய தயாராகி வருகிறது. இந்த நிலையில் க்விட் இவி காரின் வாயிலாக இந்த ரேஸில் ரெனால்ட்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி நிறுவனமான […]

The post இந்தியாவிற்கு வருமா ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக் கார்? first appeared on .

]]>

க்விட் இவி காரின் மூலம் இந்தியாவின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ரெனால்ட்டும் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம் நாட்டில் உள்ள எலக்ட்ரிக் காரை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் என சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. மஹிந்திரா அடுத்ததாக எக்ஸ்யூவி400 காரின் மூலம் நுழைய தயாராகி வருகிறது. இந்த நிலையில் க்விட் இவி காரின் வாயிலாக இந்த ரேஸில் ரெனால்ட்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி நிறுவனமான நிஸான் உடன் இணைந்து இவி-இல் இறங்கும் முயற்சியில் ரெனால்ட் ஈடுப்பட்டு வருகிறதாம். அதாவது, மற்ற கார்கள் உற்பத்திக்கு மட்டும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் இவி-யிலும் கவனம் செலுத்த ரெனால்ட் தயாராகி வருகிறது.

அதேபோல் ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸானும் எலக்ட்ரிக் வாகனங்களிலும், அதற்கான தொழிற்சாலைகளை நிறுவுவதிலும் மும்முரம் காட்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், லீஃப் உள்பட நிஸான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. ஆனால் நம் நாட்டிற்கும் தான் தற்போதுவரையில் எந்தவொரு நிஸான் எலக்ட்ரிக் காரும் வரவில்லை. இந்த குறை விரைவில், நிஸானின் கூட்டு நிறுவனமான ரெனால்ட்டின் க்விட் இவி மூலம் சரிச்செய்யப்படும் என எதிர்பார்ப்போம்.

விரைவில் எலக்ட்ரிக் வெர்சனில் எதிர்பார்க்கப்படும், விற்பனையில் உள்ள க்விட் கார் ஆனது ரெனால்ட்டின் அளவில் சிறிய ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள 3 ரெனால்ட் கார்களுள் ஒன்று. க்விட் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்றாலும், இவி வெர்சனிலாவது இந்தியாவில் தனது சந்தை பங்கு அதிகரிக்குமா என்று பார்ப்போம் என்றே ரெனால்ட் கணிந்திருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, பல்வேறு கார் பிராண்ட்கள் மெல்ல மெல்ல இவி-ஐ நோக்கி நகர்ந்து வருகின்றன.

இதில் தன்னையும் ஈடுப்படுத்தி கொள்ள ரெனால்ட் எடுக்கவுள்ள முயற்சியாகவே இதனை பார்க்கிறோம். அதுவுமில்லாமல், க்விட் எலக்ட்ரிக் காரை தயாரிப்பது ஒன்றும் ரெனால்ட்டிற்கு புதியது அல்ல. ஏனெனில் க்விட் இவி ஏற்கனவே சீனாவில் விற்பனையில் உள்ளது. சீனா, நம் இந்தியாவை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் நாடு. இதனாலேயே க்விட் இவி மட்டுமின்றி, சிட்டி கே-இசட்.இ என்ற எலக்ட்ரிக் காரையும் சீனாவில் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்கிறது.

சீனாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வது எளிமையானதாகவும், மற்ற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் செலவு குறைந்ததாகவும் இருப்பதால் டேசியா ஸ்பிரிங் என்ற எலக்ட்ரிக் காரை சீனாவில் இருந்து பிரான்ஸிற்கு ரெனால்ட் ஏற்றுமதி செய்து வருகிறது. ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 230கிமீ தொலைவிற்கு பயணிக்கக்கூடியதாக உள்ள டேசியா ஸ்பிரிங் பிரான்ஸ் நாட்டில் கடந்த 2022இல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2வது எலக்ட்ரிக் வாகனமாகும்.

இதற்கு காரணங்களுள் ஒன்று, அந்த நாட்டில் இந்த எலக்ட்ரிக் காரின் விலையும் ஆகும். பிரான்ஸில் டேசியா ஸ்பிரிங் காரின் விலை 20,800 யூரோக்கள் மட்டுமே. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.18.29 லட்சம் மட்டுமே. நம்மை பொறுத்தவரையில் இந்த தொகை அதிகமாக இருக்கலாம். ஆனால் பிரான்ஸ் நாட்டு மக்களை பொறுத்தவரையில் குறைவே ஆகும். அதுவுமில்லாமல், இது அரசாங்கத்தின் மானியங்களுக்கு முந்தைய விலை ஆகும். மானியங்களை சேர்த்தால் இந்த விலை இன்னும் குறையும்.

இருப்பினும் டேசியா ஸ்பிரிங் எலக்ட்ரிக் காரை நம் நாட்டில் ரெனால்ட் கொண்டுவருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பது உறுதி. ஏனெனில் விலை ஒருபக்கம் குறையாக இருக்கும் என்றாலும், அதேவேளையில் தற்போதைக்கு இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை. ஏனென்றால், இந்திய சந்தையில் கடந்த 2022இல் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்கள் எண்ணிக்கையில் வெறும் 1% மட்டுமே எலக்ட்ரிக் கார்களாகும். ஆனால் இந்த எண்ணிக்கையை 2030க்குள் குறைந்தது 30% ஆக உயர்த்த மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.

The post இந்தியாவிற்கு வருமா ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக் கார்? first appeared on .

]]>