lathi https://www.91mobiles.com/tamil Tue, 20 Dec 2022 12:29:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விஜய் படத்தை இயக்குவேன். விஷால் நம்பிக்கை! https://www.91mobiles.com/tamil/cinema-vishal-has-decided-to-direct-3-films/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=cinema-vishal-has-decided-to-direct-3-films Tue, 20 Dec 2022 11:14:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4427 ‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. அதனையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘ஊஞ்சல் மனம் ஆடுமே’ வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள […]

The post விஜய் படத்தை இயக்குவேன். விஷால் நம்பிக்கை! first appeared on .

]]>

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. அதனையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘ஊஞ்சல் மனம் ஆடுமே’ வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வீரத்துக்கோர் நிறமுண்டு பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷால் அளித்துள்ள பேட்டியில், ”மார்க் ஆண்டனி படத்தை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து நானே டைரக்டு செய்ய இருக்கிறேன். தொடர்ந்து விலங்குகளை வைத்து இரு படம் இயக்க உள்ளேன். இது எனது கனவு படம். அதேபோல் ஒரு ரசிகனாக விஜய்யை எப்படி பார்க்க விரும்புகிறேனோ அப்படி ஒரு கதையை எழுதுகிறேன். விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கப்போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. அரசியல் என்பது மக்கள் பணி. அதை இப்போதும் செய்து வருகிறேன்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன். திரைப்படங்களை திருட்டு இணையதளத்தில் வெளியிடுவதை அரசு நினைத்தால் உடனே தடுக்க முடியும். சென்னையில் அனைத்து வசதிகள் கொண்ட திரைப்பட நகரை உருவாக்க அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைப்பேன். நான் நடித்துள்ள லத்தி படத்தில் போலீஸ்காரர்களின் பிரச்சினைகள், தந்தை, மகன் பாசம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கும். சண்டை காட்சியில் எனக்கு அதிகம் அடிபட்டது. இந்த படத்தில் எனது நடிப்பு பேசப்படும்” என்றார்.

இந்நிலையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்ல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விஜய் படத்தை இயக்குவேன். விஷால் நம்பிக்கை! first appeared on .

]]>