Lava Blaze 2 4G https://www.91mobiles.com/tamil Tue, 28 Mar 2023 05:29:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Unisoc T616 SoC உடன் Geekbench இல் தோன்றியது Lava Blaze 2 4G https://www.91mobiles.com/tamil/lava-blaze-2-geekbench-listing/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lava-blaze-2-geekbench-listing Tue, 28 Mar 2023 05:29:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7128   2009 இல் நிறுவப்பட்ட இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான LAVA, குறைந்த பட்ஜெட்டில் நல்ல வசதிகளைத் தரும் ஸ்மார்ட்போன் என பெயர் வாங்கி சந்தையில் பிரபலமடைந்தது. 2021 இல், Lava Blaze 5G மொபைலை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இது Lava Z தொடரை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் LAVA நிறுவனம் விரைவில் இந்தியாவில் மற்றொரு மலிவு விலை ஸ்மார்ட்போனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. LAVA இன் வரவிருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் லாவா பிளேஸ் 2 என்று […]

The post Unisoc T616 SoC உடன் Geekbench இல் தோன்றியது Lava Blaze 2 4G first appeared on .

]]>

Highlights

  • Lava Blaze 2 4G என்ற பட்ஜெட்போனை லாவா வெளியிடும் என வதந்தி பரவுகிறது
  • இந்த போன் கீக்பெஞ்ச் பட்டியலில் வெளியாகி இருக்கிறது
  • இது ஆண்ட்ராய்டு 12 உடன் 4ஜி மொபைலாக வெளியாகுமெனத் தெரிகிறது

 

2009 இல் நிறுவப்பட்ட இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான LAVA, குறைந்த பட்ஜெட்டில் நல்ல வசதிகளைத் தரும் ஸ்மார்ட்போன் என பெயர் வாங்கி சந்தையில் பிரபலமடைந்தது. 2021 இல், Lava Blaze 5G மொபைலை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இது Lava Z தொடரை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் LAVA நிறுவனம் விரைவில் இந்தியாவில் மற்றொரு மலிவு விலை ஸ்மார்ட்போனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LAVA இன் வரவிருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் லாவா பிளேஸ் 2 என்று வதந்தி பரவுகிறது மேலும் இந்த மொபைல் ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும். இந்த மொபைல் யூனிசோக் T616 SoC செயலியைக் கொண்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த மொபைலின் விலை ரூ.10,000க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீக்பெஞ்ச்சில் லாவா ப்ளேஸ் 2

கீக்பெஞ்ச் பட்டியலின்படி லாவா ப்ளேஸ் 2 மொபைலில் UNISOC சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கிறது. இந்த 0cta-core சிப் 1.82GHz அடிப்படை அதிர்வெண்ணையும், 1.95GHz பூஸ்ட் க்ளாக் ஸ்பீடையும் கொண்டுள்ளது. பெஞ்ச்மார்க் மதிப்பெண்கள் மற்றும் விவரக்குறிப்புகளின் அடிப்படையில், மாடல் எண் LZX409 உடன் Lava Blaze 2, சிங்கிள் கோர் சுற்றில் 359 புள்ளிகளையும், Geekbench 5 சோதனையின் மல்டி-கோர் சுற்றில் 1497 புள்ளிகளையும் பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில், 6 ஜிபி ரேம் உடன் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

கசிந்த அம்சங்கள்

வரவிருக்கும் லாவா பிளேஸ் 2 இன் படம் சமீபத்தில் ஆன்லைனில் கசிந்தது. இதன் மூலம் அதன் வடிவமைப்பு தெரியவந்தது. இந்த ப்ளேஸ் 2 ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் இரண்டு பெரிய வளையத்திற்குள் கேமரா சென்சார்கள் இருக்கின்றன. இதன் அருகில் ஒரு LED ப்ளாஷ் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பின்பக்கம் கண்ணாடியால் தயாராகி இருக்கிறது. கசிந்த புகைப்படத்தில் இருக்கும் போன் மஞ்சள் வண்ணத்தில் இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ வெளியீட்டின் போது இன்னும் சில நிறங்களில் இந்த போன் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. போனின் ஓரங்கள் தட்டையாக இருக்கிறது. வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் ஆகியவை வலது விளிம்பில் பொருத்தப்பட்டுள்ளன. இது கைரேகை சென்சாராகவும் செயல்படுகிறது. சாதனத்தின் முன்புறம் கசிந்த படத்தில் காட்டப்படவில்லை, ஆனால் தடிமனான பெசல்கள் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் சேமிப்புத் திறன் குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. ஆனால், சேம்ப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள ஒரு மைக்ரோ எஸ் டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்த மொபைல் ஒரு 4ஜி போன் ஆகும்.  இந்த மொபைல் ரூ.10,000 என்ற விலைப்பிரிவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

The post Unisoc T616 SoC உடன் Geekbench இல் தோன்றியது Lava Blaze 2 4G first appeared on .

]]>