lava x3 https://www.91mobiles.com/tamil Thu, 22 Dec 2022 13:48:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 4ஜி மொபைல் + ப்ளூடூத் நெக்பேண்ட் = ரூ6999 மட்டுமே! லாவா அதிரடி! https://www.91mobiles.com/tamil/lava-x3-smartphone-go-for-sale-with-free-lava-probuds-n11-neckband-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lava-x3-smartphone-go-for-sale-with-free-lava-probuds-n11-neckband-in-india Thu, 22 Dec 2022 13:48:39 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4496 இந்தியாவில் இதுவரை இல்லாத குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போன் தான் Lava X3. இந்த Lava X3 போனை அடிமட்ட விலைக்கு அறிமுகம் செய்தது மட்டுமின்றி, இத்துடன் கூடுதலாக நிறுவனம் அதன் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் சாதனத்தையும் இலவசமாக வழங்குகிறது என்பது தான் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. இந்த போனின் விலை என்ன? இலவசமாக வரும் நெக்பேண்டின் மதிப்பு என்ன? இந்த போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற அனைத்து விபரங்களையும் […]

The post 4ஜி மொபைல் + ப்ளூடூத் நெக்பேண்ட் = ரூ6999 மட்டுமே! லாவா அதிரடி! first appeared on .

]]>

இந்தியாவில் இதுவரை இல்லாத குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போன் தான் Lava X3.

இந்த Lava X3 போனை அடிமட்ட விலைக்கு அறிமுகம் செய்தது மட்டுமின்றி, இத்துடன் கூடுதலாக நிறுவனம் அதன் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் சாதனத்தையும் இலவசமாக வழங்குகிறது என்பது தான் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.

இந்த போனின் விலை என்ன? இலவசமாக வரும் நெக்பேண்டின் மதிப்பு என்ன? இந்த போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற அனைத்து விபரங்களையும் பார்க்கலாம். லாவா நிறுவனம் இந்த வார தொடக்கத்தில், இந்திய சந்தையில் Lava X3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட Lava X2 இன் வாரிசுதான் இந்த Lava X3!

லாவா எக்ஸ்3 என்பது மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். Lava X3 தற்போது Amazon வழியாக முன்கூட்டிய ஆர்டர் செய்யக் கிடைக்கிறது. சமீபத்திய லாவா எக்ஸ்-சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கான அமேசான் பட்டியலின் படி இந்த மொபைல் டிசம்பர் 27 முதல் விற்பனைக்கு வரும்.
இந்தியாவில் Lava X3 விலை 3GB + 32GB வேரியண்ட் மாடலுக்கு வெறும் ரூ.6999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மலிவு விலையுடன் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 27 முதல் Amazon வழியாகப் பிரத்தியேகமாக வாங்குவதற்குக் கிடைக்கும்.

இப்போதே இந்த லாவா எக்ஸ்3 போனை அமேசானில் முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக லாவா ப்ரோபட்ஸ் என்11 நெக்பேண்டை (Lava Probuds N11 neckband) இலவசமாக வழங்குகிறது. இதன் மதிப்பு ரூ. 2299 ஆகும். சரி, இந்த புதிய Lava X3 ஸ்மார்ட்போன் அம்சங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். வெறும் 6999 ரூபாய் மதிப்பிற்கு இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Lava X3 சிறப்பம்சம்

  • 6.5 அங்குல 1600 × 720 பிக்சல் கொண்ட HD+ IPS LCD டிஸ்ப்ளே
  • 60Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வாட்டர் டிராப் நாட்ச்
  • டூயல் பின்புற கேமரா அமைப்பு
  • 8MP பிரைமரி கேமரா
  • VGA இரண்டாம் நிலை சென்சார்
  • LED ஃபிளாஷ்
  • 5MP முன்பக்க ஷூட்டர்
  • குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 சிப்செட்
  • IMG PowerVR GPU
  • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி மைக்ரோ-எஸ்டி கார்டு ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 12 (Go edition)
  • கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக்
  • டூயல் சிம் – 4ஜி
  • வைஃபை 802.11 ஏசி
  • புளூடூத் 5.1
  • ஜிபிஎஸ் மற்றும் குளோனாஸ்
  • 10W சார்ஜிங் ஆதரவு
  • 4000mAh பேட்டரி
  • நிறம்: லஸ்டர் ப்ளூ, ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல் பிளாக்
  • விலை: ரூ. 6,999 மட்டுமே.

ரெட்மி ஏ1, ரெட்மி ஏ1+, டெக்னோ பாப் 6 ப்ரோ மற்றும் லாவா பிளேஸ் ஆகியவற்றை இயக்கும் அதே சிப்செட் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போக, நிறுவனம் Lava X3 போனுக்கான இலவச ஹோம் சர்வீஸ் ப்ரோக்ராம் திட்டத்தையும் வழங்குகிறது. ரூ.7000 விலைக்குள் ரூ. 2299 மதிப்புள்ள இலவச நெக்பேண்ட் உடன் கிடைக்கும் இந்த Lava X3 போனை தவறவிடாதீர்கள்.

The post 4ஜி மொபைல் + ப்ளூடூத் நெக்பேண்ட் = ரூ6999 மட்டுமே! லாவா அதிரடி! first appeared on .

]]>
நாளை முன்பதிவை துவங்குகிறது லாவா எக்ஸ்3. https://www.91mobiles.com/tamil/lava-x3-smartphone-pre-booking-from-20th-december-launch-next-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lava-x3-smartphone-pre-booking-from-20th-december-launch-next-week Mon, 19 Dec 2022 11:47:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4395 லாவா நிறுவனம் அடுத்த வாரம் லாவா எக்ஸ்3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளை முதல் (டிசம்பர் 20-ம் தேதி) மதியம் 12 லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Lava Probuds N11 Neckband இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த லாவா எக்ஸ்3 […]

The post நாளை முன்பதிவை துவங்குகிறது லாவா எக்ஸ்3. first appeared on .

]]>

லாவா நிறுவனம் அடுத்த வாரம் லாவா எக்ஸ்3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளை முதல் (டிசம்பர் 20-ம் தேதி) மதியம் 12 லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Lava Probuds N11 Neckband இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.5 அங்குல எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜியா? 5ஜியா?

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவு உள்ளதா? அல்லது 5ஜி ஆதரவு உள்ளதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்நிறுவனம் தற்போது 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதேபோல் இனிமேல் பல நிறுவனங்கள் 5ஜி போன்களை மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை வந்துவிட்டது.

கேமரா

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.

சிப்செட்

பட்ஜெட் விலைக்கு தகுந்த சிப்செட் வசதி தான் இதில் உள்ளது. அதாவது 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் ஆதரவுடன் இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதோடு ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே பாஸ்ட் சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

மெமரி

3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா எக்ஸ்3 போன். மேலும் கூடுதலாக, மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதோடு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருப்பதால் இந்த போனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

The post நாளை முன்பதிவை துவங்குகிறது லாவா எக்ஸ்3. first appeared on .

]]>
லாவாவில் இருந்து இன்னொரு பட்ஜெட் போன்! https://www.91mobiles.com/tamil/lava-to-launch-new-lava-x3-smartphone-powered-by-mediatek-chipset-under-rs-10-000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lava-to-launch-new-lava-x3-smartphone-powered-by-mediatek-chipset-under-rs-10-000 Tue, 13 Dec 2022 07:40:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4260 இந்தியாவில் லாவா நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. லாவா நிறுவனமும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் லாவா நிறுவனம் பெரும்பாலும் பட்ஜெட் விலையிலான போன்களை, போதுமான வசதிக்ளோடு அறிமுகம் செய்து வருகிறது. இதனால் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு மொபைலை வாங்க நினைப்பவர்கள் லாவாவின் மொபைலை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். லாவா மொபைல்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் (கடைகள்) வாங்க முடியும் என்பதால் ஆன்லைனில் வாங்கத் தெரியாத மக்களாலும் கடைகளுக்குச் […]

The post லாவாவில் இருந்து இன்னொரு பட்ஜெட் போன்! first appeared on .

]]>

இந்தியாவில் லாவா நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. லாவா நிறுவனமும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் லாவா நிறுவனம் பெரும்பாலும் பட்ஜெட் விலையிலான போன்களை, போதுமான வசதிக்ளோடு அறிமுகம் செய்து வருகிறது. இதனால் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு மொபைலை வாங்க நினைப்பவர்கள் லாவாவின் மொபைலை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். லாவா மொபைல்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் (கடைகள்) வாங்க முடியும் என்பதால் ஆன்லைனில் வாங்கத் தெரியாத மக்களாலும் கடைகளுக்குச் சென்று வாங்குகிறார்கள். இந்நிலையில் லாவா நிறுவனம் இந்தியாவில் LAVA X3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் பற்றிய டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்பிளே

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.5 அங்குல HD plus ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டு இருக்கிறது. கூடவே சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாக இருக்கிறது இந்த லாவா ஸ்மார்ட்போன்.

4Gயா 5Gயா?

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 4ஜி போனா? அல்லது 5ஜி போனா என்பது பற்றி தற்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்நிறுவனம் தற்போது 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதே போல் இந்த மொபைல் பெரும்பாலும் இரட்டை சிம் போனாக இருக்கும்.

கேமரா

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மை கேமரா 8 மெகா பிக்சலாக இருக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 5எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இது தவிர LELD ஃப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட்

2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் ஆதரவுடன் இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. மேலும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவர இருக்கிறது.

மெமரி

இந்த போன் 3ஜிபி ரேம் மெமரியையும், 32ஜிபி சேமிப்புத்திறனையும் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது.

கனெக்டிவிட்டி

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த லாவா எக்ஸ்3 போன். பின்பு பாட்டம்-ஃபைரிங் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த லாவா எக்ஸ்3 மாடல்.

இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை வைத்துப் பார்க்கையில், ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த லாவா எக்ஸ் 3 போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

The post லாவாவில் இருந்து இன்னொரு பட்ஜெட் போன்! first appeared on .

]]>