LeEco S1 Pro https://www.91mobiles.com/tamil Tue, 17 Jan 2023 06:48:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஐபோன் மாதிரி.. ஆனா, ஐபோன் இல்ல.. https://www.91mobiles.com/tamil/style-and-look-are-all-like-iphone-14-pro-leeco-s1-pro-launched-at-rs-10-900/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=style-and-look-are-all-like-iphone-14-pro-leeco-s1-pro-launched-at-rs-10-900 Tue, 17 Jan 2023 07:09:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5064 ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அதன் விலை உயர்வாக இருப்பதால் பலருக்கும் இது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் போன்ற தோற்றம், வடிவமைப்பு, லுக் கொண்ட புது போனை சீன நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த போனுக்கும் ஐபோனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிக சிரமம். ஆப்பிள் ஐபோன் 14 போன்றே தோற்றமளிக்கும் LeEco S1 Pro போன் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். […]

The post ஐபோன் மாதிரி.. ஆனா, ஐபோன் இல்ல.. first appeared on .

]]>

Highlights

  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட LeEco S1 Pro போன் விலை தோராயமாக ரூ.10,900 என்ற விலையில் வெளியாகி இருக்கிறது.
  •  இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, தோற்றம் என அனைத்தும் ஐபோன் 14 ப்ரோ போன்றே இருக்கிறது.

ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அதன் விலை உயர்வாக இருப்பதால் பலருக்கும் இது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் போன்ற தோற்றம், வடிவமைப்பு, லுக் கொண்ட புது போனை சீன நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த போனுக்கும் ஐபோனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிக சிரமம்.

ஆப்பிள் ஐபோன் 14 போன்றே தோற்றமளிக்கும் LeEco S1 Pro போன் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் சீனாவில் CNY 899 (தோராயமாக ரூ.10,900) என முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மாடல் ஆனது ரூ.1,29,900 என்ற விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. எனவே இந்த இரண்டுக்கும் ரூ.1.19 லட்சம் வித்தியாசம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதுவும் இதுவும்

LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. ஐபோன் 14 மாடலில் 6.1 அங்குல ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது HD+ (720x1600px) தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது. ஐபோனில் 4கே தெளிவுத்திறன் உடன் கூடிய 4கே டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. LeEco S1 Pro ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12nm Zhanrui T7510 சிப்செட் மூலம் இயங்குகிறது.

 

கேமரா

LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கிறது. இந்த மூன்று கேமராக்களும் ஐபோன் 14 ப்ரோவில் இருப்பது போன்றே பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் முன்புறத்தில் 5 எம்பி ஸ்னாப்பர் இடம்பெற்றுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது.

கூகுளுக்கு பதில் ஹூவாய்

LeEco S1 Pro ஸ்மார்ட்போனானது குறிப்பாக சீனாவுக்காக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், கூகுள் மொபைல் சேவைகளுக்கு பதிலாக Huawei இன் மொபைல் சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இருக்கும் அம்சங்கள் அப்படி ஒன்றும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்றாலும் இதன் வடிவமைப்பு மற்றும் லுக் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

 

விலை

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ விலை Apple iPhone 14 Pro விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.1,29,900 முதல் தொடங்குகிறது. அதாவது 128 ஜிபி வேரியண்ட் ரூ.1,29,900 எனவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.1,39,900 எனவும் 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,59,900 எனவும் 1 டிபி வேரியண்ட் ரூ.1,79,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்ட் மற்றும் டீப் பர்பில் என்ற வண்ண விருப்பங்களில் இந்த மாடல் கிடைக்கிறது. ஆனால் இந்த மொபைல் இந்திய மதிப்பில் ரூ 10,600க்கு கிடைக்கிறது.

The post ஐபோன் மாதிரி.. ஆனா, ஐபோன் இல்ல.. first appeared on .

]]>