macbook https://www.91mobiles.com/tamil Mon, 18 Jul 2022 05:50:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 M2 சிப்செட் உடன் விற்பனைக்கு வந்தது புதிய மேக்புக் ஏர் https://www.91mobiles.com/tamil/apple-macbook-air-m2-available-in-india-prices-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=apple-macbook-air-m2-available-in-india-prices-revealed Mon, 18 Jul 2022 05:50:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=926 M2 சிப்செட்ல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக வெளியாகி இருக்கிறது 2022 மேக்புக் ஏர். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிளின் டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய M2 சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்டான இது, தலைசிறந்த CPU மற்றும் கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. இதற்கு முன்னதாக வந்த […]

The post M2 சிப்செட் உடன் விற்பனைக்கு வந்தது புதிய மேக்புக் ஏர் first appeared on .

]]>

M2 சிப்செட்ல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக வெளியாகி இருக்கிறது 2022 மேக்புக் ஏர். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிளின் டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய M2 சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்டான இது, தலைசிறந்த CPU மற்றும் கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. இதற்கு முன்னதாக வந்த M1 பிராசஸரை விட பல்வேறு அம்சங்களில் தனித்து விளங்கும் வகையில் சக்திவாய்ந்த ஒன்றாக இந்த புதிய M2 சிப்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர புதிய மேக்புக் ஏர் (Mac book Air) மற்றும் 13 அங்குல மேக்புக் ப்ரோ (Mac Book Pro) ஆகிய மாடல்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருந்தது. இந்த இரண்டிலும் புதிய சக்திவாய்ந்த M2 சிப்செட் இடம்பெற்று இருக்கிறது.

தற்போது இந்த புதிய M2 சிப்செட் உடன் கூடிய மேக்புக் ஏர் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை ரூ.1 லட்சத்து 19,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த மேக்புக் ஏர் ரூ.1 லட்சத்து 9,900-க்கு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக 2022 மேக்புக் ஏர் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது மிக மெல்லியதாகவும், குறைந்த எடையுடனும் இருக்கிறது. 2022 மேக்புக் ஏர் மாடல், ஸ்பேஸ் கிரே (space gray), சில்வர் (silver), மிட்நைட் (Midnight) மற்றும் ஸ்டார்லைட் (star light) என நான்கு நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது.

The post M2 சிப்செட் உடன் விற்பனைக்கு வந்தது புதிய மேக்புக் ஏர் first appeared on .

]]>