maruthi https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 14:08:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 வேகன் ஆர் எலக்ட்ரிக் காராக வருகிறதா ? https://www.91mobiles.com/tamil/maruti-suzuki-wagonr-ev-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=maruti-suzuki-wagonr-ev-details Tue, 31 Jan 2023 08:16:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5393 6 வாகனங்கள் மாருதி சுஸுகி சமீபத்தில் ஓர் டீசர் படத்தை வெளியிட்டது. அதில், ஆறு கார்களின் நிழற்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது, கார்களின் உருவத்தை வெளிக்காட்டாத அதன் ஸ்டைலை மட்டுமே பிரதிபலிக்கக் கூடிய படத்தை அது வெளியிட்டது. இதன் வாயிலாகவே நிறுவனம் வேகன்ஆர் அடிப்படையிலான எலெக்ட்ரிக் காரை உருவாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் தற்போது மிக குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி இதற்கு போட்டி இல்லாத நிலையே […]

The post வேகன் ஆர் எலக்ட்ரிக் காராக வருகிறதா ? first appeared on .

]]>

  • Highlights
  • மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் மின் வாகன உற்பத்தி திட்டம் பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டது.
  • அதன்படி ஒட்டுமொத்தமாக 6 எலெக்ட்ரிக் கார்களை 2030 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டம் போட்டு இருக்கின்றது. அதில் ஒன்று மாருதி சுஸுகியின் பிரபல காரான வேகன்ஆர் – ஆக இருக்கலாம் எனத் தெரிய வந்திருக்கிறது

6 வாகனங்கள்

மாருதி சுஸுகி சமீபத்தில் ஓர் டீசர் படத்தை வெளியிட்டது. அதில், ஆறு கார்களின் நிழற்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது, கார்களின் உருவத்தை வெளிக்காட்டாத அதன் ஸ்டைலை மட்டுமே பிரதிபலிக்கக் கூடிய படத்தை அது வெளியிட்டது. இதன் வாயிலாகவே நிறுவனம் வேகன்ஆர் அடிப்படையிலான எலெக்ட்ரிக் காரை உருவாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் தற்போது மிக குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி இதற்கு போட்டி இல்லாத நிலையே தென்படுகின்றது.

இதை போக்கும் விதமாக மாருதி சுஸுகி வேகன்ஆரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் வருகை எப்போது அமையும் என்கிற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. அதேவேளையில், வேகன்ஆர் எலெக்ட்ரிக்கை இந்திய சாலையில் வைத்து பல மாதங்களாக அது சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது.

முதல் எலக்ட்ரிக் கார்

மாருதி சுஸுகி அதன் முதல் எலெக்ட்ரிக் காரை வரும் 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கார் வேகன்ஆர் எலெக்ட்ரிக்காக கூட இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதை மாருதி சுஸுகி உறுதிப்படுத்தவில்லை. ஆகையால், இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி கார் பிரியர்களுக்கு மிகப் பெரிய குழப்பம் நிலவிக் கொண்டிருக்கின்றது.

கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, ஒரு பக்கம் அந்நிறுவனம் புதுமுக இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரையே முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மின்சார காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே நிறுவனம் முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இதனை நிறுவனம் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராக வடிவைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் முழு சார்ஜில் 550 கிமீ ரேஞ்ஜை வழங்குமாம். மேலும், பார்க்கவும் மிகவும் கவர்ச்சிகரமான வாகனமாக அது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதனை இப்போது விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக களமிறக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

நெக்ஸான் இவி

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது. இது இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி பிளஸ் அவை ஆகும். இதில், நெக்ஸான் இவி பிரைம் ஓர் முழு சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜையும், நெக்ஸான் இவி பிளஸ் ஓர் ஃபுல் சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இத்தகைய ரேஞ்ஜ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு போட்டியாகவே மாருதி சுஸுகி அதன் இவிஎக்ஸ் காரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

 

எது முதலில்?

இதுமட்டுமின்றி, ஜிம்னி அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார், ஸ்விஃப்ட் இவி வெர்ஷன், பலேனோ இவி வெர்ஷன் மற்றும் ஃப்ரான்க்ஸ் இவி வெர்ஷன் ஆகியவற்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் எதை வேண்டுமானாலும் மாருதி சுஸுகி நிறுவனம் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரலாம். அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த கார் மாடல்கள் அனைத்திற்குமே இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு.

 

The post வேகன் ஆர் எலக்ட்ரிக் காராக வருகிறதா ? first appeared on .

]]>
2025ல் வருகிறதா மாருதியின் எலக்ட்ரிக் கார்? https://www.91mobiles.com/tamil/maruti-plans-to-launch-electric-car-in-2025/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=maruti-plans-to-launch-electric-car-in-2025 Mon, 31 Oct 2022 09:23:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3296 மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் காரை 2025ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கத் துவங்கிவிட்டனர். டாடா தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஹூண்டாய், எம்ஜி ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தைக் களம் இறக்கியுள்ளனர். ஆனால் இந்தியாவிலேயே […]

The post 2025ல் வருகிறதா மாருதியின் எலக்ட்ரிக் கார்? first appeared on .

]]>

மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் காரை 2025ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்று இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கத் துவங்கிவிட்டனர். டாடா தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஹூண்டாய், எம்ஜி ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தைக் களம் இறக்கியுள்ளனர்.

ஆனால் இந்தியாவிலேயே கார் தயாரிப்பில் சிறப்பான இடத்தில் இருக்கும் மாருதி நிறுவனம் தற்போது தங்களது எலக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தைத் தயாரிப்பதாக சில செய்திகள் வெளியாகியிருந்தது. இருந்தாலும் இது குறித்து பெரிய அளவில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பலர் மாருதி நிறுவனம் அந்த திட்டத்தை எல்லாம் கைவிட்டுவிட்டதாகக் கருதினர்.

இந்நிலையில் சமீபத்தில் இது குறித்து அந்நிறுவனத்தின் சேர்மன் பார்கவா பேசினார். அப்பொழுது அவர் : “கார்கள் விற்பனையில் எத்தனை கார்கள் விற்பனையாகிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்று மாதம் 10 ஆயிரம் கார்கள் விற்பனையாகவில்லை என்றால் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதில் பலனில்லை. அதற்காக எலெக்ட்ரிக் கார்களை மாருதி நிறுவனம் புறந்தள்ளி விடவில்லை. தற்போது எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணியின் ஆய்வில் இறங்கியுள்ளோம்.

ஆனால் அதை இந்தியாவிலேயே அதற்கான பேட்டரி மற்றும் மற்ற உதிரிப்பாகங்கள் தயாரிப்பு குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துவருகிறோம். இது மட்டுமல்ல எங்கள் நிறுவனத்தின் கார்களை நம்பி வாங்கும் மக்கள் அதன்பின் அதில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். 2025ம் ஆண்டு மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இது கால தாமதமான அறிமுகமாகத் தெரியலாம். இதற்கும் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் நல்ல அனுபவத்தைப் பெறலாம். ஆனால் அதை பற்றியெல்லாம் மாருதி நிறுவனம் கவலைப்பட வேண்டியதில்லை. எங்களுக்கான திட்டம் திடமாகவும், எதிர்காலத்தை நோக்கியும் இருக்கிறது.” எனக் கூறினார்.

இந்தியா மட்டுமல்ல உலகமே தற்போது ஆட்டோமொபைல் துறையில் தற்போது பெரும் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அந்த மாற்றம் எலெக்ட்ரிக் காராக இருக்கும் எனப் பலர் கூறுகின்றனர். ஆனால் ஃபிளக்ஸி ஃப்யூயல், ஹைபிரிட் என மற்ற தொழிற்நுட்பங்களும் வளர்ந்து வருகிறது. மக்கள் எந்த தொழிற்நுட்பத்தை நோக்கி நகர இருக்கின்றனர். எது மக்களின் தேவையை நிறைவேற்றும், என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்காகவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தன் தடத்தைப் பதிக்க வேண்டும் எனக் குறைந்தது ஒரு காரையாவது தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டனர். டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் எல்லாம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் என்ற நம்பிக்கையில் அதில் அதிகமான முதலீடுகளைச் செய்துள்ளது. அந்த கார்களை வெற்றி பெற வைக்கத் தேவையான வசதிகளை தற்போது செய்து வருகிறது.

ஆனால் கார் விஷயத்தில் மக்கள் எளிதில் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறிவிடுவார்களா என்றால் சந்தேகம் தான். ஆனால் இரு சக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர்களில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல 3சக்கர வாகன சந்தையிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு கூடுகிறது. ஆனால் கார்களில் எலெக்ட்ரிக் செக்ண்மெண்டில் விற்பனை பெரிய அளவில் இல்லை.

இதற்கு முக்கியமான காரணம் விலை தான் கூறப்படுகிறது ஸ்கூட்டர்களில் கிட்டத்தட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வந்துவிட்டது. ஆனால் கார்களில் பெட்ரோல் காரை விட எலெக்ட்ரிக் கார்களின் விலை இரு மடங்களாக இருந்து வருகிறது. இதனால் காரணமாகவும் மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் விரும்புவதில்லை.

The post 2025ல் வருகிறதா மாருதியின் எலக்ட்ரிக் கார்? first appeared on .

]]>