Matter https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:02:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வந்தது ஏரா எலக்ட்ரிக் பைக்! https://www.91mobiles.com/tamil/matter-launches-aera-e-bike-officially-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=matter-launches-aera-e-bike-officially-in-india Thu, 02 Mar 2023 13:04:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6186 குஜராத்தைச் சேர்ந்த மேட்டர் (Matter) எனும் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. ஏரா (Aera) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இ-பைக் பற்றிய முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மேட்டர் (Matter). இது ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. […]

The post கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வந்தது ஏரா எலக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>

Highlights

  • குஜராத்தைச் சேர்ந்த மேட்டர் (Matter) எனும் நிறுவனம் ஏரா (Aera) எனும் பெயரில் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்து இருக்கிறது.
  • இதன் உயர்நிலை ட்ரிம்மான 6000 பிளஸ், ஓர் முழு சார்ஜில் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும்.

குஜராத்தைச் சேர்ந்த மேட்டர் (Matter) எனும் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. ஏரா (Aera) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இ-பைக் பற்றிய முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மேட்டர் (Matter). இது ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதுவே இந்திய இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக அதன் புதிய எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது.

 

4 வேரியண்ட்கள்

நான்கு விதமான ட்ரிம்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். 4000, 5000, 5000 பிளஸ் மற்றும் 6000 பிளஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரேஞ்ஜ் திறன் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மைலேஜ்

இதன் உயர்நிலை ட்ரிம்மான 6000 பிளஸ், ஓர் முழு சார்ஜில் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும். மற்ற வேறியண்டுகளின் ரேஞ்ஜ் திறன் 125 கிமீ மட்டுமே ஆகும். ஆனால், இது இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்காது. மேட்டார் ஏரா இதேபோல், 4000 ட்ரிம்மின் விற்பனையும் இன்னும் தொடங்கப்படவில்லை. 5000 மற்றும் 5000 பிளஸ் ஆகியவற்றின் விற்பனை மட்டுமே இப்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சில தினங்களில் 4000 மற்றும் 6000 பிளஸ் ஆகிய ட்ரிம்களுக்கும் விற்பனை பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

விலை

மேட்டர் நிறுவனம் 5000 தேர்விற்கு 1,43,999 ரூபாயை விலையாக நிர்ணயம் செய்து இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 5000 பிளஸ்-க்கு 1,53,999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

வடிவமைப்பு

மேட்டர் ஏரா ஓர் நேக்கட் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். மேட்டார் ஏரா இந்திய சந்தையில் இந்த ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதற்கு பல்சர் இருசக்கர வாகன மாடலே முக்கிய சான்று. இதன் நேக்கட் வெர்ஷன்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகம். இத்தகைய வரவேற்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே மேட்டர் நிறுவனம் ஏரா-வை நேக்கட் ஸ்டைலில் உருவாக்கி இருக்கிறது. மேலும், இதனை தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் குறி வைத்தும் மேட்டர் உருவாக்கி இருக்கின்றது. அதாவது, ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இதை மேட்டர் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் தோற்றம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் மற்றும் ஹார்னெட் 2.0 உள்ளிட்ட மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

 

தொழிற்நுட்பம்

மேட்டார் ஏரா எலெக்ட்ரிக் பைக்கில் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மேட்டர் ஏராவில் வழங்கப்பட்டிருக்கும் 7.0 அங்குல முழு டிஜிட்டல் எல்சிடி திரை மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இது 4ஜி இணைப்பு வசதிக் கொண்டது. இத்துடன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இ பைக்கை லாக் மற்றும் அன்லாக் செய்ய உதவும். இதுமட்டுமின்றி, லைவ் டிராக்கிங் தகவல், வாகனத்தின் ஆரோக்கியம் மற்றும் ஜியோஃபென்சிங் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் இது வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேட்டர் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-லேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்போதே விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

வசதிகள்

இதனை சாவியில்லாமல் பன்படுத்திக் கொள்ள முடியும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் லிக்யூடு கூல்டு மோட்டார் ஆகும். இத்துடன், பெட்ரோல் டூ-வீலர்களில் வழங்கப்படுவதைப் போல வேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பு வசதிகளாக லிக்யூடு கூல்டு பேட்டரி பேக், 3பின் 5ஆம்ப் சார்ஜர், டபுள் கிரேடில் சேஸிஸ் மற்றும் இணைப்பு – இன்டலிஜென்ட் அம்சம் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பாதுகாப்பான ரைடிங் அனுபவத்திற்காக இ-பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏரோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்திலானவை ஆகும். ஆகையால், மின்சார செலவு மிகவும் சிக்கனமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக்கின் அழகிய தோற்றத்திற்கு இந்த எல்இடி லைட்டுகளும் ஓர் காரணம் ஆகும். இத்துடன், பெட்ரோல் டூவீலர்களில் காணப்படுவதைப் போல எஞ்ஜின் குவார்ட், ஸ்பிளிட் டைப் இருக்கைகள், பில்லியன் ரைடருக்கான கிராப் ஹேண்டில் உள்ளிட்டவையும் ஏராவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றத்திலும் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற அதிக வாய்ப்புள்ளது.

 

The post கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வந்தது ஏரா எலக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>
வந்துருச்சு! கியர் வச்ச எலக்ட்ரிக் பைக்! https://www.91mobiles.com/tamil/matter-energy-revealed-electric-motorcycle/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=matter-energy-revealed-electric-motorcycle Tue, 22 Nov 2022 07:23:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3801 மேட்டர் எனெர்ஜி நிறுவனம் எக்கசக்க சிறப்பம்சங்களுடன், இது இந்திய தயாரிப்புதானா ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஓர் எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்தபடி இருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாம் ஏற்கனவே அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி சில புதிய வாகன தயாரிப்பாளர்களும்கூட மின் வாகனங்களைக் களமிறக்குவதில் தீவிரமாக […]

The post வந்துருச்சு! கியர் வச்ச எலக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>

மேட்டர் எனெர்ஜி நிறுவனம் எக்கசக்க சிறப்பம்சங்களுடன், இது இந்திய தயாரிப்புதானா ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஓர் எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்தபடி இருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாம் ஏற்கனவே அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி சில புதிய வாகன தயாரிப்பாளர்களும்கூட மின் வாகனங்களைக் களமிறக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அகமதாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் புதிய மின் வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் வெகுவிரைவில் அதிசயக்கத்தக்க அம்சங்கள் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது. மேட்டர் எனும் பெயர் கொண்ட அந்நிறுவனம், அதன் முதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் (நவம்பர் 21) அந்த புதிய மின்சாரை பைக்கை வெளியீடு செய்தது.

இந்த மின்சார பைக்கை மேட்டர் நிறுவனம் கியர் வசதியுடன் உருவாக்கியிருக்கின்றது. இதுவே, இந்தியாவில் கியர்பாக்ஸ் வசதியுன் உருவாக்கப்பட்ட முதல் மின்சார பைக்காகும். இது இந்தியர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக வித்தியாசமான மற்றும் நவீன வசதிகளை விரும்பும் மின்சார இருசக்கர வாகன பிரியர்களை இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

4 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளும் இந்த மின்சார பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், ஏபிஎஸ், லிக்யூடு கூல்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 5.0 kWh பேட்டரி பேக் உள்ளிட்டவை மேட்டர் நிறுவனம் உருவாக்கியிருக்கும் மின்சார பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ முதல் 150 கிமீ வரையில் பயணிக்க முடியும்.

இதுமட்டுமின்றி, சாவியில்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் வசதி, 7.0 அங்குல தொடுதிரை திரை போன்ற அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய அம்சமாக 7.0 அங்குல அளவில் வழங்கப்பட்டிருக்கும் எல்சிடி திரை உள்ளது. இந்த திரை திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவல், செல்போனுக்கு வரும் அலர்டுகள் ஆகியவற்றை காண்பிக்கும் வசதிக் கொண்டதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி, இந்த திரையின் வாயிலாக இசையை கேட்டு மகிழும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மின்சார பைக்கை தனித்துவமாக வடிவமைத்து இருக்கிறது.

நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ஸ்டைலிலேயே எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் கேடிஎம் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக இருக்குமோ நினைக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூர்மையான முகப்பகுதி, ஸ்பிளிட் இருக்கை அமைப்பு, உயரமான க்ளிப்-ஆன் ஹண்டில் பார் மற்றும் ஸ்பிளிட் கிராப் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் பைக்கிற்கு வித்தியாசமான தோற்றத்தை வழங்குகிறது.

மேட்டர் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் டெலிவரி பணிகள் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். ஆனால், இதன் விலை என்ன என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டார்க் க்ரடோஸ் ஆர் மற்றும் ஓபென் ரோர் உள்ளிட்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும். விரைவில் இதன் விலை பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வந்துருச்சு! கியர் வச்ச எலக்ட்ரிக் பைக்! first appeared on .

]]>