mobile safety https://www.91mobiles.com/tamil Tue, 25 Apr 2023 07:10:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கேரளாவில் கேம் விளையாடும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு https://www.91mobiles.com/tamil/eight-year-old-dies-kerala-after-mobile-phone-explodes-while-playing-game/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=eight-year-old-dies-kerala-after-mobile-phone-explodes-while-playing-game Tue, 25 Apr 2023 07:10:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7720   கேரளாவின் திருச்சூரில் ஏப்ரல் 24 திங்கட்கிழமை எட்டு வயது சிறுமி ஒருவர் கேம் விளையாடிக் கொண்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறியதால் உயிரிழந்தார். இவர் பட்டிப்பரம்பைச் சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்பதும்,  திருவில்வாமலையில் உள்ள கிறிஸ்ட் நியூ லைஃப் பள்ளியில் அவர் 3 ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு மத்தியிலும், அவர் இறந்தார். சிறுமி மொபைலில் சார்ஜ் போட்டபடியே விளையாடிக் கொண்டு இருந்ததாகத்  தகவல்கள் […]

The post கேரளாவில் கேம் விளையாடும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு first appeared on .

]]>

Highlights

  • சிறுமி கேம் விளையாடும் போது மொபைலை சார்ஜ் செய்தபடியே விளையாடி இருக்கிறார்
  • மூன்று வருடத்திற்கு முன்பு வாங்கிய அந்த மொபைலில் பேட்டரியும் மாற்றப்பட்டுள்ளது.
  • சிறுமிக்கு இந்த வெடிப்பில் முகம் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன

 

கேரளாவின் திருச்சூரில் ஏப்ரல் 24 திங்கட்கிழமை எட்டு வயது சிறுமி ஒருவர் கேம் விளையாடிக் கொண்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறியதால் உயிரிழந்தார். இவர் பட்டிப்பரம்பைச் சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்பதும்,  திருவில்வாமலையில் உள்ள கிறிஸ்ட் நியூ லைஃப் பள்ளியில் அவர் 3 ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு மத்தியிலும், அவர் இறந்தார். சிறுமி மொபைலில் சார்ஜ் போட்டபடியே விளையாடிக் கொண்டு இருந்ததாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. பழையனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் குழு, இந்த சம்பவத்தைப் பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் தடயவியல் குழுவும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 

இந்த போன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டதாகவும், அதன் பேட்டரி கடந்த ஆண்டு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்தபோது ஆதித்யஸ்ரீ தனது பாட்டியுடன் இருந்திருக்கிறார்.  இந்த விபத்தில் குழந்தையின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

மொபைல் போன் வெடிப்பது இது முதல் நிகழ்வு அல்ல. நமது 91மொபைல்ஸ் அறிக்கையின்படி, சமீபத்தில் பீகாரில் ஒரு தொலைபேசி படுக்கையில் வைக்கப்பட்டிருந்தபோது வெடித்தது. அந்த போன் பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மொஹதிநகரில் வசிக்கும் சஞ்சீவ் ராஜா என்பவருக்கு சொந்தமானது. சார்ஜருடன் இணைக்கப்படாத போதும் போன் வெடித்ததாக சஞ்சீவ் கூறினார்.

 

மொபைல் வெடிப்பு சம்பவங்களைத் தவிர்க்க மனதில் கொள்ள வேண்டியவை..

 

  • ஃபோன் சார்ஜ் ஆகும் போது அதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக கேமிங், வீடியோ பார்ப்பது போன்ற பேட்டரி அதிகம் தேவைப்படும் செயல்களை செய்ய வேண்டாம்.
  • பேட்டரி சூடாவதற்கு முக்கிய காரணம்.. வெப்பம் தான். எனவே ஜீன்ஸ் போன்ற இறுக்கமான பேண்ட் பாக்கெட், தலையணை, போர்வைக்கு அடியில் வைப்பது, அதிக உஷ்னமான இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • தீவிர வெளிப்புற வெப்பநிலையில் தொலைபேசியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • எப்போதும் நிறுவனத்தின் ஒரிஜினல் அல்லது தரமான, நல்ல பேட்டரியை மட்டும் உபயோகிக்கவும்.
  • மொபைல் நிறுவனத்தால் வழங்கப்பட்ட கேபிள்கள் மற்றும் சார்ஜரைப் பயன்படுத்தவும்.
  • இரவு முழுவதும், அல்லது தொடர்ச்சியாக சார்ஜிங் செய்வதைத் தவிர்க்கவும்.

The post கேரளாவில் கேம் விளையாடும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு first appeared on .

]]>
மொபைல்களுக்கு மீண்டும் வரும் ரிமூவபிள் பேட்டரி! https://www.91mobiles.com/tamil/smartphones-may-again-get-removable-batteries-with-easy-replaceable-to-hit-market/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=smartphones-may-again-get-removable-batteries-with-easy-replaceable-to-hit-market Fri, 23 Dec 2022 09:00:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4518 காலத்திற்கும் தொழிற்நுட்பத்திற்கும் ஏற்றவாறு ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் இப்போது மிகவும் அரிதானதாக மாறிவிட்டது. இதேபோல், சில வருடங்களுக்கு முன்புவரை ஸ்மார்ட்போன்கள் (smartphones) நீக்கக்கூடிய பேட்டரிகளுடன் (replaceble battery) வந்தன. மீண்டும் ரீபிளேசபிள் பேட்டரி? நீக்கக்கூடிய பேட்டரிகளில் (removable smartphone battery) இருக்கும் பெரும் நன்மையே, உங்கள் போனில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதை உடனே நீங்களே கழட்டி மாற்றக்கூடியதாக இருந்தது. இதுபோன்ற செயல்களை எல்லாம் நீங்கள் […]

The post மொபைல்களுக்கு மீண்டும் வரும் ரிமூவபிள் பேட்டரி! first appeared on .

]]>

காலத்திற்கும் தொழிற்நுட்பத்திற்கும் ஏற்றவாறு ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் இப்போது மிகவும் அரிதானதாக மாறிவிட்டது. இதேபோல், சில வருடங்களுக்கு முன்புவரை ஸ்மார்ட்போன்கள் (smartphones) நீக்கக்கூடிய பேட்டரிகளுடன் (replaceble battery) வந்தன.

மீண்டும் ரீபிளேசபிள் பேட்டரி?

நீக்கக்கூடிய பேட்டரிகளில் (removable smartphone battery) இருக்கும் பெரும் நன்மையே, உங்கள் போனில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதை உடனே நீங்களே கழட்டி மாற்றக்கூடியதாக இருந்தது. இதுபோன்ற செயல்களை எல்லாம் நீங்கள் இப்போது இருக்கும் ஸ்மார்ட்போன்களில் செய்திட முடியாது. இப்போதும் கூட, நீக்கக் கூடிய பேட்டரி கொண்ட அம்சம் ஒரு சில மாடல்களில் மட்டுமே அரிதாகக் காணப்படுகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் இப்போது கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் இன்-பில்ட் பேட்டரிகளுடன் (in-built smartphone battery) மட்டுமே வருகின்றன.

கட்டாய சட்டம்!

இவற்றை நாம் கழட்டி மாற்றம் செய்ய முடியாது. இது பல சிக்கல்களை உருவாக்குகிறது என்பதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் காரணமாக இது விரைவில் மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், ஐரோப்பிய யூனியன், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை எதிர்காலத்தில் சார்ஜ் செய்ய USB Type C போர்ட்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களுக்கான உலகளாவிய தரநிலைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியது.

இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், குபெர்டினோவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு இந்த உத்தரவுக்கு இணங்க டிசம்பர் 28, 2024 வரை அவகாசம் உள்ளது. இப்போது யூனியன், மாற்றக்கூடிய ஸ்மார்ட்போன் பேட்டரி பேக்குகளை (removable smartphone battery back) மீண்டும் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. இப்படி மாற்றம் செய்வதனால் சில நன்மை மற்றும் தீமைகள் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு போன்கள் ஆரம்ப நாட்களில் மாற்றக்கூடிய பேட்டரியுடன் வந்தன. இருப்பினும், சில மேம்படுத்தல் காரணமாக இந்த முறை கைவிடப்பட்டது.

எதனால் கைவிடப்பட்டது ?

OEM-கள் அதிக சக்தி மற்றும் உபகரணங்களைச் சிறிய பிரேம்களில் அடைப்பதற்கு முன்பு இந்த முறை ஏற்றதாக இருந்தது. ஆனால், இந்த முறை கைவிடப்பட்ட பிறகு தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களில் மிக இறுக்கமான சீல்கள் மூலம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் தூசி ரெசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கப்பெற்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாற்றக்கூடிய பேட்டரியை வைத்திருப்பது மொபைல் ஆயுள் காலத்திற்கு எதிராக வேலை செய்தது என்று கூறப்படுகிறது.

அன்றைய நாட்களில், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் பழைய (old) அல்லது செயல் இழந்த பேட்டரியை (dead battery) மாற்றுவதற்கு கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. கூடுதல் பேட்டரியை ஆன்லைனில் ஆர்டர் (online order) செய்து அவர்களே மாற்றம் செய்துகொள்ளும் எளிய வழி இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை, ஒரு பேட்டரியை மாற்ற நீங்கள் சர்வீஸ் சென்டர் (smartphone service center) செல்ல வேண்டியதுள்ளது. சில நேரங்களில் பேக் பேனல்களையும் (back panel) பேட்டரி உடன் சேர்த்து மற்ற வேண்டியதுள்ளது. இதனால், கூடுதல் பணம் செலவாகிறது. ஐரோப்பாவின் நடவடிக்கை மூலம் அதிக நன்மை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அதிக தீமைகளைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது என்பதனால், இந்த சட்டத்தை அமல்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post மொபைல்களுக்கு மீண்டும் வரும் ரிமூவபிள் பேட்டரி! first appeared on .

]]>
ப்ளூபக்கிங் உங்க மொபைலைத் தாக்கினால் என்ன ஆகும்? https://www.91mobiles.com/tamil/what-is-bluebugging-how-hackers-get-access-to-your-phone-via-bluetooth-how-to-avoid-this-risk/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=what-is-bluebugging-how-hackers-get-access-to-your-phone-via-bluetooth-how-to-avoid-this-risk Fri, 02 Dec 2022 09:31:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4052 ப்ளூபக்கிங் (Bluebugging) என்கிற வார்த்தையை நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லை என்றால், ஸ்மார்ட்போன் தொடர்பான ஒரு முக்கியமான ஆபத்தை பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்! ப்ளூபக்கிங் என்றால் என்ன? இதனால் உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் ஏற்படப்போகும் ஆபத்துகள் என்ன? அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்ய கூடாது? பார்க்கலாம். ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth Connectivity), வயர்லெஸ் இயர்பட்ஸ் (Wireless Earbuds) போன்ற புதிய கண்டுபிடிப்புகளால் 3.5மிமீ ஆடியோ ஜாக் […]

The post ப்ளூபக்கிங் உங்க மொபைலைத் தாக்கினால் என்ன ஆகும்? first appeared on .

]]>

ப்ளூபக்கிங் (Bluebugging) என்கிற வார்த்தையை நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லை என்றால், ஸ்மார்ட்போன் தொடர்பான ஒரு முக்கியமான ஆபத்தை பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

ப்ளூபக்கிங் என்றால் என்ன? இதனால் உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் ஏற்படப்போகும் ஆபத்துகள் என்ன? அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்ய கூடாது? பார்க்கலாம்.

ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth Connectivity), வயர்லெஸ் இயர்பட்ஸ் (Wireless Earbuds) போன்ற புதிய கண்டுபிடிப்புகளால் 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வயர்டு ஹெட்போன்ஸ் / இயர்போன்ஸ் போன்றவைகளின் தேவைகள் குறைந்த வண்ணம் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், தற்போது வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருப்பதில்லை. அதாவது மொபைல் நிறுவனங்கள் ஆனது, வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்ஸை தழுவும்படி நம்மை எல்லாம் “மறைமுகமாக” கட்டாயப்படுத்துகின்றன என்றே கூறலாம்!

இயர்பட்ஸ், இயர்போன்ஸ், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் பேண்ட், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஏசி, ஸ்மார்ட் வாஷிங் மெஷின் என கிட்டத்தட்ட எல்லாமே ப்ளூடூத் வழியாகத்தான் கனெக்ட் செய்யப்பட வேண்டும் என்கிற சூழ்நிலைகள் ஆனது – ஏதாவது ஒரு வழியில் – ப்ளூடூத்தை பயன்படுத்தியே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தையும் உருவாக்கி விடுகிறது!
அந்த மாதிரியான சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தின் கீழ்.. உள்ளே நுழைந்துள்ள ஒரு புதிய பிரச்சனை தான் – ப்ளூபக்கிங்!

Bluebugging என்றால் என்ன?

ப்ளூபக்கிங் என்பது ப்ளூஜாக்கிங் (Bluejacking) அல்லது ப்ளூஸ்நார்ஃபிங் (Bluesnarfing) என்றும் அழைக்கப்படும் ஒரு ஹைஜாக்கிங் நுட்பம் (Highjacking technique) ஆகும்.
உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத் ஆனது ஆன் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில், உங்களுக்கும் ஒரு ஹேக்கருக்கும் இடையே உள்ள தூரம் 10 மீட்டருக்குள் இருக்கும் பட்சத்தில், அந்த ஹேக்கரால் ஃபோர்ஸ் பேரிங் டெக்னாலஜியை (Force pairing technology) பயன்படுத்த முடியும்! அதாவது ப்ளூடூத் வழியாக உங்கள் ஸ்மார்ட்போனில் வலுக்கட்டாயமாக நுழைய முடியும். அதுதான் ப்ளூபக்கிங் எனப்படுகிறது!

ஹேக்கர்.. என்ன செய்யலாம்?

ஃபோர்ஸ் பேரிங் டெக்னாலஜி வழியாக உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் நுழையும் ஒரு ஹேக்கரால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எதை வேண்டுமானாலும் அணுக முடியும். அதாவது தனிப்பட்ட வீடியோக்கள் / புகைப்படங்கள் முதல் அதிகாரப்பூர்வமான கார்ப்பரேட் ரகசியங்கள் வரை எல்லாவற்றையும் அணுக முடியும்.

அதுமட்டுமின்றி அவர்கள் உங்களை பின்தொடர விரும்பினால் அல்லது உங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு ட்ராக்கிங் ஃபார்ம்வேரை கூட இன்ஸ்டால் செய்ய முடியும்; உங்களை 24 மணிநேரமும் உளவு பார்க்க முடியும்!

ப்ளூபக்கிங்கிலிருந்து தப்பிக்க..

01. உங்கள் ஸ்மார்ட்போனிற்கு வரும் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச்களை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம்; உடனே பயன்படுத்திக்கொள்ளவும்!

02. முடிந்தவரை பப்ளிக் வைஃபைகளை தவிர்க்கவும்

03. ப்ளூடூத் வழியாக, அறியப்படாத டிவைஸில் இருந்து மெசேஜ்களையோ அல்லது ஃபைல்களையோ பெறுவதற்கான கோரிக்கையை பெற்றால், அதை உடனே நிராகரித்துவிட்டு செல்லவும்.

04. ஒவ்வொரு முறையும், பப்ளிக் வயர்லெஸ் இண்டர்நெட் கனெக்ஷனை பயன்படுத்திய பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனை ரீபூட் செய்வதும் கூட நல்ல பழக்கம் தான்.

05. ஹாட்ஸ்பாட் ஷேரிங் அல்லது ப்ளூடூத் கனெக்ஷனில் உங்களுடைய தனிப்பட்ட பெயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

06. உங்களிடம் ஆன்டி-வைரஸ் ஆப் இருப்பதையும், நீங்கள் அடிக்கடி சந்தேகத்திற்கிடமான ஆப்களை களைவதற்க்கான ஸ்கேன்னிங்காய் செய்வதையும் உறுதிபடுத்திக்கொள்ளவும்.

07. பப்ளிக் இண்டர்நெட் சர்வீஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, வர்த்தக வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்யவோ அல்லது ஆன்லைனில் நிதி பரிவர்த்தனைகளை செய்யவோ கூடாது

08. உங்கள் ஸ்மார்ட்போனுடன் என்னென்ன டிவைஸ்கள், எத்தனை டிவைஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அடிக்கடி சரிபார்க்கவும்; உடன் உங்கள் ப்ளூடூத் கனெக்ஷன்களையும் அடிக்கடி கண்காணிக்கவும்

09. பாஸ்வேர்ட் அல்லது முக்கியமான டேட்டாக்களை ஷேர் செய்ய ப்ளூடூத்தை பயன்படுத்த வேண்டாம்!

The post ப்ளூபக்கிங் உங்க மொபைலைத் தாக்கினால் என்ன ஆகும்? first appeared on .

]]>
மொபைல் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போகுதா? https://www.91mobiles.com/tamil/major-reasons-behind-why-your-mobile-phone-battery-draining-very-fast-and-how-to-stop-it/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=major-reasons-behind-why-your-mobile-phone-battery-draining-very-fast-and-how-to-stop-it Tue, 11 Oct 2022 07:30:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2915 ‘எவ்வளவு சார்ஜ் போட்டாலும் மொபைல்ல சார்ஜ் நிற்கிறதே இல்ல’ இது நாம அடிக்கடி கேக்குற வார்த்தைகள். ஒரு மொபைல் போனின் பேட்டரி சீக்கிரமாக காலி ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய 7 காரணங்கள் உள்ளன! தெரிந்தோ தெரியாமலோ நாமெல்லாம் செய்யும் தவறுகள் என்னென்ன? அதை சரி செய்வது எப்படி? பார்க்கலாம்! 01. டிஸ்பிளே ஒரு மொபைல் போனின் பேட்டரி வேகமாக ‘ட்ரை’ ஆவதற்கு.. மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று – […]

The post மொபைல் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போகுதா? first appeared on .

]]>

‘எவ்வளவு சார்ஜ் போட்டாலும் மொபைல்ல சார்ஜ் நிற்கிறதே இல்ல’ இது நாம அடிக்கடி கேக்குற வார்த்தைகள். ஒரு மொபைல் போனின் பேட்டரி சீக்கிரமாக காலி ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய 7 காரணங்கள் உள்ளன! தெரிந்தோ தெரியாமலோ நாமெல்லாம் செய்யும் தவறுகள் என்னென்ன? அதை சரி செய்வது எப்படி? பார்க்கலாம்!

01. டிஸ்பிளே

ஒரு மொபைல் போனின் பேட்டரி வேகமாக ‘ட்ரை’ ஆவதற்கு.. மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று – அதிகப்படியான டிஸ்பிளே ப்ரைட்னஸ்! ப்ரைட்னஸை அதிகபட்சமாக வைத்திருப்பது வசதியாக தோன்றலாம்; குறிப்பாக நீங்கள் சூரிய வெளிச்சத்தின் கீழ் இருக்கும்போது, ஆனால் இது உங்கள் பேட்டரியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறக்க வேண்டாம்! டிஸ்பிளேவை ஹை-ப்ரைட்னஸில் வைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், அதை உடனே மாற்றிக்கொள்ளவும். முடிந்தால், ஆட்டோ ப்ரைட்னஸ் விருப்பத்தை எனேபிள் செய்யவும். மொபைல் செட்டிங்ஸ் மூலம் இதைச் செய்யலாம். இது உட்புற மற்றும் வெளிப்புற ஒளி வேறுபாடுகளை தானாகவே கண்டறிந்து அதற்கேற்றஜ்படி ப்ரைட்னஸை சரி செய்து, முடிந்த வரை உங்கள் பேட்டரியை சேமிக்கும்!

02. பேக் கிரவுண்ட் செயலிகள்

நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் கூட சில ஆப்கள், பேக்கிரவுண்டில் வேலை செய்துகொண்டே தான் இருக்கும்! எடுத்துக்காட்டிற்கு விபிஎன், ஆன்டி-வைரஸ், ஹெல்த் மற்றும் காலெண்டர் தொடர்பான ஆப்கள் எப்போதுமே ஆக்டிவ் ஆகவே இருக்கும்! பேக்கிரவுண்டில் செயல்படும் ஆப்கள் ஆனது, உங்களின் தலையீடு இல்லாமலேயே உங்களுக்கான வேலைகளை செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே போல உங்கள் போனின் பேட்டரியை தாறுமாறாக “குடிக்கும்” என்பதும் உண்மை. எனவே முடிந்தவரை பேக்கிரவுண்டில் செயல்படும் ஆப்களை – மொபைல் செட்டிங்ஸ் வழியாக – முடக்கலாம். முடிந்தால் தேவை இல்லாத ஆப்களை அன்இன்ஸ்டால் கூட செய்யலாம்.

3. பிக்சர்-இன்-பிக்சர்

உங்களில் பலருக்கும் பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) என்றால் என்ன என்று தெரிந்து இருக்கும். ஒருவேளை அறியாதோர்களுக்கு – வேறொரு ஆப்பில் இருந்து, எடுத்துக்காட்டிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறாமலேயே யூட்யூப் வீடியோவை பார்ப்பீர்கள் அல்லவா? அதுதான் பிஐபி (பிக்சர்-இன்-பிக்சர்) மோட் ஆகும். இந்த வசதியின் பின்னணியில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால்.. இது உங்கள் போன் பேட்டரியை வேகமாக காலி செய்யும்! உங்கள் மொபைல் செட்டிங்ஸ் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்களில் இருந்து பிக்சர்-இன்-பிக்ச்சர் மோட்-ஐ முடக்க முடியும் என்பதால்.. பெரிய அளவில் PIP mode-இன் தேவை இல்லாதவர்கள் அதை டிஸேபிள் செய்யலாம்!

4. கனெக்டெட்!

நம்மில் பலரும்.. இரவு நேரங்களில் கூட மொபைல் டேட்டாவை அல்லது வைஃபை கனெக்ஷனை ஆப் / டிஸ்கனெக்ட் செய்யாமல்.. 24 மணி நேரமும் ஆன்லைனில் / இண்டர்நெட்டில் இருக்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம். உங்கள் போன் 24 மணி நேரமும் வைஃபை அல்லது மொபைல் டேட்டாவுடன் கனெக்ட் ஆகி இருக்கும் பட்சத்தில், அது உங்கள் மொபைலின் பேட்டரியை கணிசமாக குறைக்கும். ஏனென்றால், நீங்கள் தூங்கிவிட்டாலும் கூட, உங்கள் மொபைலால் ஒய்வுஎடுக்க முடியாது. தொடர்ச்சியான நோட்டிபிக்கேஷன்ஸ், அலெர்ட்ஸ், பேக்கிரவுண்ட் அப்டேட்ஸ் மற்றும் பலவற்றை அது சந்திக்க நேரிடும்! எனவே அவ்வப்போது.. உங்கள் போனை ‘டிஸ்கனெக்ட்’ செய்யுங்கள்!

5. பேட்டரியும் முக்கியம்

சில நேரங்களில், இது உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதற்கு பின்னால் ஆப்களோ அல்லது செட்டிங்ஸோ இருக்காது; அந்த போனின் பேட்டரியே முக்கிய காரணமாக இருக்கலாம்! அதாவது உங்கள் மொபைலின் பேட்டரி பழையதாகி இருக்கலாம். வருடங்கள் செல்லச் செல்ல, உங்கள் பேட்டரி பலவீனம் அடையலாம்; முன்பு இருந்ததை போல நன்றாக செயல்படாமல் போகலாம்! சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு (ஸ்மார்ட்போன் மாடலைப் பொறுத்து), உங்கள் பேட்டரி அதன் ஒரிஜினல் திறனை இழக்கலாம்; விரைவாக காலி ஆகலாம்! இதிலிருந்து தப்பிக்க, நமக்கிருக்கும் ஒரே வழி.. பேட்டரியை மாற்றுவதே ஆகும். ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதை விட இது மிகவும் செலவு குறைந்தது.

6. லொக்கேஷன்

கூகுள் மேப்ஸ் உட்பட உங்கள் லொக்கேஷனை (Location) கண்காணிக்கக்கூடிய ஏராளமான ஆப்கள் உள்ளன. அதுபோன்ற ஆப்களை நேரடியாக பயன்படுத்தும் போது மட்டுமே, அது உங்களின் இருப்பிட தகவல்களை கண்காணிக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் எப்போதும் அப்படி இருக்காது! இருப்பிடம் தொடர்பான பெரும்பாலான ஆப்கள், பேக்கிரவுண்டில்.. நிலையான முறையில் கண்காணிப்புகளை நிகழ்த்தும். அது உங்கள் மொபைலின் பேட்டரி லைஃப்-ஐ கண்டிப்பாக பாதிக்கும். ஆகவே, அவசியமற்ற நேரங்களில், மொபைல் செட்டிங்ஸ் வழியாக லொக்கேஷன் ட்ராக்கிங்-ஐ டிஸேபிள் செய்து விடவும்!

7. அறிவிப்புகள்

மொபைலில் ஒரு புதிய ஆப்பை இன்ஸ்டால் செய்யும் போது, அதன் நோட்டிபிக்கேஷன் செட்டிங்ஸ் தானாகவே ஆக்டிவேட் ஆகும். அப்படியாக, அவசியமே இல்லாமல் உங்களுக்கு கிடைக்கும் நோட்டிபிக்கேஷன் ஆனது பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட, தன்னால் முடிந்த அளவிலான பேட்டரி தின்னும்! இதனைத் தடுக்க, தேவை இல்லாத ஆப்களுக்கான நோட்டிபிக்கேஷன்களை டிஸேபிள் செய்யலாம். இவற்றைச் செய்தால் மொபைலின் பேட்டரி தாராளமாக அதிக நேரத்திற்கு நிற்கும்.

The post மொபைல் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போகுதா? first appeared on .

]]>
மொபைல்போனில் செய்யும் 6 தவறுகள்! https://www.91mobiles.com/tamil/6-common-and-biggest-mistakes-to-avoid-by-every-smartphone-user/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6-common-and-biggest-mistakes-to-avoid-by-every-smartphone-user Mon, 19 Sep 2022 08:49:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2419 ஆயிரங்களில் செலவழித்து நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போனில் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் செய்யும் 6 தவறுகள் உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்! 01. எல்லா சார்ஜரும் ஒண்ணு இல்ல நம்மில் பலரும், சந்தையில் கிடைக்கும் எல்லா சார்ஜர்களுமே ஒரே மாதிரியானவை என்கிற தவறான கருத்தைக் கொண்டுள்ளோம். உங்கள் ஸ்மார்ட்போனுடன் வந்த, குறிப்பிட்ட பிராண்டின் சார்ஜரை பயன்படுத்தாமல், கையில் கிடைக்கும் எந்தவொரு சார்ஜரையும் எடுத்து பயன்படுத்தினால்.. ஒருகட்டத்தில் (அதிக பட்சமாக) உங்கள் ஸ்மார்ட்போன் தீப்பிடிக்கலாம் […]

The post மொபைல்போனில் செய்யும் 6 தவறுகள்! first appeared on .

]]>

ஆயிரங்களில் செலவழித்து நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போனில் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் செய்யும் 6 தவறுகள் உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்!

01. எல்லா சார்ஜரும் ஒண்ணு இல்ல

நம்மில் பலரும், சந்தையில் கிடைக்கும் எல்லா சார்ஜர்களுமே ஒரே மாதிரியானவை என்கிற தவறான கருத்தைக் கொண்டுள்ளோம். உங்கள் ஸ்மார்ட்போனுடன் வந்த, குறிப்பிட்ட பிராண்டின் சார்ஜரை பயன்படுத்தாமல், கையில் கிடைக்கும் எந்தவொரு சார்ஜரையும் எடுத்து பயன்படுத்தினால்.. ஒருகட்டத்தில் (அதிக பட்சமாக) உங்கள் ஸ்மார்ட்போன் தீப்பிடிக்கலாம் அல்லது ஷார்ட் சர்க்யூட் போன்ற ஆபத்துகளை சந்திக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் பாதிப்படையலாம். ஏனேனில், ஒவ்வொரு போனுக்கும் அதன் மின்னோட்ட அளவு மாறுபடும். எனவே எப்போதுமே, உங்கள் ஸ்மார்ட்போனுடன் வரும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்தவும், இல்லையேல், உங்கள் மொபைலுக்கேற்ற அளவீடுகளோடு வரும் நம்பகமான பிராண்டுகளின் சார்ஜர்களை பயன்படுத்தவும்.

02. கண்ட கண்ட ஆப்களை இன்ஸ்டால் செய்வது!

சிலர் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு குறிப்பிட்ட ஆப்-ஐ கண்டுபிடிக்க முடியாதபோது, அதேபோன்ற பிற ஆப்களை இன்ஸ்டால் / டவுன்லோட் செய்து பயன்படுத்துவார்கள். கூகுளும் சரி, நாங்களும் சரி, அதிகாரப்பூர்வமற்ற சோர்ஸ்களில் இருந்து கிடைக்கும் ஆப்களையும், மூன்றாம் தரப்பு ஆப்களையும் ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டோம்! ஏனெனில், மூன்றாம் தரப்பில் இருந்து கிடைக்கும் ஆப்கள் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் வைரஸ்கள், ஸ்பைவேர்கள் மற்றும் மால்வேர்களை கொண்டு வரலாம் அதன் பிறகு உங்களின் தனிப்பட்ட தகவல், பாஸ்வேர்ட்கள் மற்றும் வங்கி விவரங்கள் என எதற்குமே பாதுகாப்பு இருக்காது! எனவே எப்போதுமே அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து, நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள ஆப்களை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்!

03. ஓஎஸ் அப்டேட் & செக்யூரிட்டி பேட்ச்

பெரும்பாலான மொபைல் பிராண்டுகள் அவ்வப்போது லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. மால்வேர்கள் மற்றும் அது தொடர்பான பிற ஆபத்துக்களிலிருந்து உங்கள் போனை பாதுகாக்கவும், மேலும் உங்கள் ஸ்மார்ட்போனை “தடுமாற்றம்” இல்லாமல் இயங்க வைக்கவும், லேட்டஸ்ட் அப்டேட்கள் மிகவும் முக்கியம்! அவைகளை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம்; புறக்கணிக்கவும் கூடாது!

04. ஆப் அப்டேட்டும் முக்கியம்

உங்கள் ஸ்மார்ட்போன் சீராகவும், பாதுகாப்பாகவும் இயங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களுக்கு எப்போதெல்லாம் அப்டேட் கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் அப்டேட் செய்யவும்! ஆப்களுக்கு கிடைக்கும் அப்டேட்ஸ் ஆனது யூசர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், புதிதாகக் கண்டறியப்பட்ட “பாதிப்புகளையும்” சரி செய்யும் என்பதை மறக்க வேண்டாம்!

05. பப்ளிக் வைஃபை

உண்மையில் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் – ஒரு வரம்; அதே சமயம் – அது ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமும் கூட! ஏனெனில் உங்களை போலவே பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகளை ஹேக்கர்களாலும் அணுக முடியும். அதுமட்டுமின்றி, பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை அவர்களால் மிகவும் எளிதாக பார்க்கவோ, திருடவோ முடியும்! நீங்கள் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால், இன்டர்நெட் உடன் கனெக்ட் ஆக, நீங்களொரு VPN-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். விபிஎன் எனப்படும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகள் (Virtual Private Networks) ஆனது, பப்ளிக் நெட்வொர்க்குகளில் கூட (நீங்கள் நுழையும்) இணையதளங்களை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் ஒரு எளிமையான தீர்வு ஆகும். இருப்பினும், முடிந்தவரை மொபைல் டேட்டாவை மட்டுமே பயன்படுத்துங்கள்!

06. பேக் கவர் மற்றும் டேம்பர் கேஸ்

புத்தம் புதிய ஸ்மார்ட்போனை கீழே போட்டு உடைத்தவர்களிடம் கேளுங்கள் – பேக் கவர் அல்லது மொபைல் கேஸின் முக்கியத்துவம் என்ன என்று? இது ஒரு சிறிய தவறு தான்.. ஆனால் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்த வல்லது என்பது தெரிந்தும் கூட நம்மில் சிலர் பேக் கவர் அல்லது மொபைல் கேஸை புறக்கணிக்கிறோம்! இரண்டாவது நீங்கள் வாங்கும் பேக் கவர் அல்லது டேம்பர் கேஸின் தரத்திலும் கூட அதிக கவனம் செலுத்த வேண்டும். பார்க்க ஸ்டைல் ஆக இருக்கிறது என்பதற்காக மட்டமான தயாரிப்பை வாங்க வேண்டாம்.

The post மொபைல்போனில் செய்யும் 6 தவறுகள்! first appeared on .

]]>