moto E13 https://www.91mobiles.com/tamil Thu, 09 Feb 2023 06:28:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பழங்குடியின மொழியில் ரூ.6,999 விலையில் வெளியாகும் மோட்டரோலா போன்! https://www.91mobiles.com/tamil/first-phone-to-support-endangered-indigenous-languages-moto-e13-launched-in-india-for-just-rs-6999/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=first-phone-to-support-endangered-indigenous-languages-moto-e13-launched-in-india-for-just-rs-6999 Thu, 09 Feb 2023 06:28:51 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5686 ரூ.7,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால்.. நிச்சயமாக இல்லை தான். ஆனால் அந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலாவை சேர்ந்தது என்று கூறினால், நிச்சயம் அது ஒரு பெரிய விஷயம் தான்! ஏனென்றால் ரூ.7000 க்குள் கிடைக்கும் மொபைல் பிரிவை, டெக்னோ, இன்ஃபினிக்ஸ், ரெட்மி (Redmi) மற்றும் ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களே கைப்பற்றி வைத்துள்ளன. இந்நிலையில்  மோட்டோரோலா (Motorola), தன் பங்கிற்கு ஒரு புதிய மொபைலை களமிறக்கி உள்ளது! லெனோவாவுக்கு […]

The post பழங்குடியின மொழியில் ரூ.6,999 விலையில் வெளியாகும் மோட்டரோலா போன்! first appeared on .

]]>

Highlights

  • மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ13 என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த மொபைல் ரூ.7000 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.

ரூ.7,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால்.. நிச்சயமாக இல்லை தான். ஆனால் அந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலாவை சேர்ந்தது என்று கூறினால், நிச்சயம் அது ஒரு பெரிய விஷயம் தான்! ஏனென்றால் ரூ.7000 க்குள் கிடைக்கும் மொபைல் பிரிவை, டெக்னோ, இன்ஃபினிக்ஸ், ரெட்மி (Redmi) மற்றும் ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களே கைப்பற்றி வைத்துள்ளன. இந்நிலையில்  மோட்டோரோலா (Motorola), தன் பங்கிற்கு ஒரு புதிய மொபைலை களமிறக்கி உள்ளது!

லெனோவாவுக்கு (Lenovo) சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ13 என்கிற புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. லைட்-வெயிட் டிஸைனுடன் வரும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளதா? இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்? எந்த வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படும்? விரிவாக பார்க்கலாம்

 

வேரியண்ட் & விலை

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 2ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களாகும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 2ஐபி ரேம் ஆப்ஷன் ரூ.6,999 க்கும், 4ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட் என மொத்தம் 3 நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

விற்பனை

மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போனை பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart)  வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படும்.

 

அறிமுக சலுகைகள்

இந்த போனுக்கு சில அறிமுகச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சலுகைகளானது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்களொரு ஜியோ பயனராக இருந்தால், மோட்டோ இ13 ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.700 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ரூ.2,500 மதிப்புள்ள பிரத்யேக சலுகைகளையும் பெறுவீர்கள்.

 

 

வாங்கலாமா?

ரூ.6,999 க்கு Moto E13 ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ? இந்த கேள்விக்கு பொத்தாம் பொதுவாக பதில் கூறி விட முடியாது. மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி விரிவாக அறிந்த பின்னர், உங்களுக்கு என்ன தேவை என்பதற்கு ஏற்பவே..வாங்கலாமா? வேண்டாமா என்கிற தீர்மானத்திற்கு வர முடியும்.

Moto E13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

  • 6.5 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே
  • 720×1600 பிக்சல் ரெசல்யூஷன்
  • 20:9 ரேஷியோ
  • 84% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
  • ஸ்பிளாஷ்-ரெசிஸ்டண்ட் டிற்கான ஐபி52 ரேட்டிங்
  • ஆக்டா கோர் யூனிசாக் T606 சிப்செட்
  • டூயல் சிம் கார்டு ஆதரவு
  • 1டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு
  • 4ஜிபி வரை ரேம்
  • 64ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்
  • 13எம்பி சிங்கிள் ரியர் கேமரா
  • 5எம்பி செல்ஃபி கேமரா
  • 10W சார்ஜிங் ஆதரவு
  • 5000mAh பேட்டரி

 

பழங்குடி மொழிகளுக்கு மரியாதை

இந்தியாவில் அழிந்து வரும் பழங்குடி மொழிகளான காங்ரி (Kangri) மற்றும் குவி (Kuvi) போன்றவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தின் கீழ் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் மேற்கூறிய இரண்டு மொழிகளுக்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

The post பழங்குடியின மொழியில் ரூ.6,999 விலையில் வெளியாகும் மோட்டரோலா போன்! first appeared on .

]]>
விரைவில் வெளியாகிறது மோட்டரோலாவின் பட்ஜெட்போன்.. மோட்டோ E13 https://www.91mobiles.com/tamil/moto-e13-smartphone-will-be-launched-in-india-on-february-8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-e13-smartphone-will-be-launched-in-india-on-february-8 Fri, 03 Feb 2023 05:00:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5523 மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மான வெளியிட்ட தகவல்களில், இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 8-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.   டிஸ்ப்ளே மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எச்டி […]

The post விரைவில் வெளியாகிறது மோட்டரோலாவின் பட்ஜெட்போன்.. மோட்டோ E13 first appeared on .

]]>

Highlights

  • மோட்டரோலா நிறுவனம் கடந்த வாரம் ஐரோப்பாவில் மோட்டோ இ13 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
  • தற்போது இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மான வெளியிட்ட தகவல்களில், இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 8-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 

டிஸ்ப்ளே

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கூடவே 720×1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.

 

சிப்செட்

இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் Unisoc டி606 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இது ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சிப்செட் வசதிக்குப் பதிலாக மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

மெமரி

மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 (Go Edition) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

கேமரா

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் முன்பக்கத்தில் 5எம்பி கேமராவை கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

பேட்டரி

மோட்டோ இ13 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரைவக் கொண்டுள்ளது . எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி போன்களுக்கு தான் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த மோட்டோ இ13 போன் 5ஜி ஆதரவுடன் வெளிவந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

 

விலை

மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ இ13 போன் ரூ.10.000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

 

The post விரைவில் வெளியாகிறது மோட்டரோலாவின் பட்ஜெட்போன்.. மோட்டோ E13 first appeared on .

]]>