moto e40 https://www.91mobiles.com/tamil Fri, 02 Dec 2022 05:32:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000mAh பேட்டரி, 4 கேமரா வசதியோடு ரூ.8,299க்கு மோட்டோ இ40 https://www.91mobiles.com/tamil/new-moto-e40-smartphone-has-a-silent-price-cut-this-is-the-new-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-moto-e40-smartphone-has-a-silent-price-cut-this-is-the-new-price Fri, 02 Dec 2022 05:32:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4039 மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ40 எனும் ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பழைய, புதிய விலைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம். மோட்டோ இ40 முன்பு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்பட்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் தற்போது நடைபெறும் Flipkart Black Friday Sale எனும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.8,299-விலைக்கு கிடைக்கிறது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்ப்ளே மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல மேக்ஸ் விஷன் […]

The post 5000mAh பேட்டரி, 4 கேமரா வசதியோடு ரூ.8,299க்கு மோட்டோ இ40 first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ40 எனும் ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பழைய, புதிய விலைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ இ40

முன்பு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்பட்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் தற்போது நடைபெறும் Flipkart Black Friday Sale எனும் சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.8,299-விலைக்கு கிடைக்கிறது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இருக்கிறது. மேலும் 720×1,600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இந்த போனில் இருக்கின்றன.

பிராசஸர்

புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T700 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன். இதனால் இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

மெமரி

இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டு இருக்கிறது. இதுதவிர கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. அதாவது நீங்கள் மைக்ரோ SD மெமரி கார்டை பயன்படுத்த அதற்கான ஸ்லாட் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

கேமரா

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ40 போன். குறிப்பாக பின்புற கேமராக்கள் போர்ட்ரெய்ட் மோட், பனோரமா, ஃபேஸ் பியூட்டி, எச்டிஆர் நைட் விஷன், மேக்ரோ விஷன் மற்றும் ப்ரோ மோட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகின்றன.

பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ40 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த மோட்டோ போன்.

கனெக்டிவிட்டி

இந்த 4ஜி போனில், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. 5000mAh பேட்டரி, 4 கேமராக்கள், பாஸ்ட் சார்ஜிங் என பல சிறப்பு அம்சங்கள் பட்ஜெட் விலையிலேயே கிடைக்கிறது. இது தவிர இப்போது ரூ 1200 வரை விலை குறைப்புச் சலுகையில் கிடைப்பதால் குறைந்த விலையில் ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போனை வாங்க நினைப்பவர்கள் உடனே ப்ளிப்கார்ட் தளத்திற்குச் சென்று இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

The post 5000mAh பேட்டரி, 4 கேமரா வசதியோடு ரூ.8,299க்கு மோட்டோ இ40 first appeared on .

]]>