Moto X40 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 09:00:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஜென் 2 ப்ராஸசர், 50MP கேமராவுடன் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகிறதா மோடோ X40? https://www.91mobiles.com/tamil/moto-x40-smartphone-with-snapdragon-gen-2-chipset-to-be-launched-on-december-15/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-x40-smartphone-with-snapdragon-gen-2-chipset-to-be-launched-on-december-15 Fri, 09 Dec 2022 07:07:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4202 புதிய மோட்டோ எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 15-ம் தேதி மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் எனத் தெரிய வந்துள்ளது. முதலில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகலாம் என்றும், அதன்பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கிறது. 5ஜி ஆதரவு, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனின் […]

The post ஜென் 2 ப்ராஸசர், 50MP கேமராவுடன் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகிறதா மோடோ X40? first appeared on .

]]>

புதிய மோட்டோ எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 15-ம் தேதி மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் எனத் தெரிய வந்துள்ளது. முதலில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகலாம் என்றும், அதன்பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கிறது. 5ஜி ஆதரவு, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்

டிஸ்பிளே

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 அங்குல Full HD Plus டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் வெளிவர இருக்கிறது.

சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் மோட்டோ எக்ஸ்40 ஒரு 5ஜி போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

மெமரி

8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். கூடவே இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதுதவிர செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கும். இதோடு ஒரு LED ப்ளாஷ் ஒன்றும் பின்பக்கத்தில் இருக்கிறது.

பாஸ்ட் சார்ஜிங்

மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாக் இருக்கிறது.

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அதேபோல் ஒன்பிளஸ் 5ஜி போன்களுக்க இந்த மோட்டோ டஃப் கொடுக்கும் என்றே கூறலாம்.

விலை

இது ப்ரீமியம் வகையைச் சேர்ந்த மொபைல் ஆகும். இதன் விலை, எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய எந்த விவரங்களும் இதுவரை வெளியாக வில்லை.

The post ஜென் 2 ப்ராஸசர், 50MP கேமராவுடன் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகிறதா மோடோ X40? first appeared on .

]]>
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் தயாராகிறதா மோட்டோ X40? இணையத்தில் கசிந்த தகவல் https://www.91mobiles.com/tamil/moto-x40-with-snapdragon-8-gen2-could-launch-by-the-end-of-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-x40-with-snapdragon-8-gen2-could-launch-by-the-end-of-2022 Tue, 18 Oct 2022 09:21:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3109 மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மோட்டோ X30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ எனும் பெயரில் விற்பனைக்கு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் […]

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் தயாராகிறதா மோட்டோ X40? இணையத்தில் கசிந்த தகவல் first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மோட்டோ X30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ எனும் பெயரில் விற்பனைக்கு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் எவை என்ற விவரங்களை தெரிவித்து இருக்கிறது.

பிராசஸர்

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் மோட்டோ X40 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 9 ஜென் 2 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ X40 பெறும் என்றும் தகவல் வெிளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதன் விவரங்களும் 3சி வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ X30 ஸ்மார்ட்போனிலும் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்பை போன்றே இந்த ஆண்டும் மோட்டோ X40 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், இது பற்றி மோட்டோரோலா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

முந்தைய மோட்டோ X30 மாடலில் 6.7 இன்ச் OLED FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 9 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்கள், 60MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

5ஜி அப்டேட்

இதனிடையே மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்குவது பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ (SA), ஏர்டெல் மற்றும் வி (NSA) 5ஜி மோட்களை தனது 5ஜி ஸ்மார்ட்போன்களில் மோட்டோரோலா வழங்க இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் தனது வலைதளத்தில் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி வசதியை வழங்குவது பற்றி இதுவரை எந்த தகவலையும் தனது வலைதளத்தில் தெரிவிக்கவில்லை. எனினும், மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 30 பியுஷன் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த வாரமே 5ஜி அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலா அறிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் வாரங்களில் மற்ற மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் வழங்கப்படும். நவம்பர் 2022 மாதத்தின் முதல் வாரத்திற்குள் அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்க மோட்டோரோலா திட்டமிட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் அதிக 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மோட்டோரோலா விளங்குகிறது.

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் தயாராகிறதா மோட்டோ X40? இணையத்தில் கசிந்த தகவல் first appeared on .

]]>