moto https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 09:00:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் தயாராகிறதா மோட்டோ X40? இணையத்தில் கசிந்த தகவல் https://www.91mobiles.com/tamil/moto-x40-with-snapdragon-8-gen2-could-launch-by-the-end-of-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-x40-with-snapdragon-8-gen2-could-launch-by-the-end-of-2022 Tue, 18 Oct 2022 09:21:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3109 மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மோட்டோ X30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ எனும் பெயரில் விற்பனைக்கு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் […]

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் தயாராகிறதா மோட்டோ X40? இணையத்தில் கசிந்த தகவல் first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மோட்டோ X30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ எனும் பெயரில் விற்பனைக்கு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் எவை என்ற விவரங்களை தெரிவித்து இருக்கிறது.

பிராசஸர்

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் மோட்டோ X40 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 9 ஜென் 2 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ X40 பெறும் என்றும் தகவல் வெிளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதன் விவரங்களும் 3சி வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ X30 ஸ்மார்ட்போனிலும் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்பை போன்றே இந்த ஆண்டும் மோட்டோ X40 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், இது பற்றி மோட்டோரோலா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

முந்தைய மோட்டோ X30 மாடலில் 6.7 இன்ச் OLED FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 9 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்கள், 60MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

5ஜி அப்டேட்

இதனிடையே மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்குவது பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ (SA), ஏர்டெல் மற்றும் வி (NSA) 5ஜி மோட்களை தனது 5ஜி ஸ்மார்ட்போன்களில் மோட்டோரோலா வழங்க இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் தனது வலைதளத்தில் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி வசதியை வழங்குவது பற்றி இதுவரை எந்த தகவலையும் தனது வலைதளத்தில் தெரிவிக்கவில்லை. எனினும், மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 30 பியுஷன் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த வாரமே 5ஜி அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலா அறிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் வாரங்களில் மற்ற மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் வழங்கப்படும். நவம்பர் 2022 மாதத்தின் முதல் வாரத்திற்குள் அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்க மோட்டோரோலா திட்டமிட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் அதிக 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மோட்டோரோலா விளங்குகிறது.

The post ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் தயாராகிறதா மோட்டோ X40? இணையத்தில் கசிந்த தகவல் first appeared on .

]]>
நாளை அறிமுகமாகும் மோட்டரோலாவின் பட்ஜெட்போன் மோட்டோ இ32 https://www.91mobiles.com/tamil/moto-e32-smartphone-will-be-launched-in-india-on-october-7-specifications-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-e32-smartphone-will-be-launched-in-india-on-october-7-specifications-price Thu, 06 Oct 2022 11:04:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2822 மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் நாளை (அக்டோபர் 7) புதிய மோட்டோ இ32 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஒரு 4ஜி போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. டிஸ்ப்ளே புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவர இருக்கிறது. அதேபோல் இந்த போன் 720×1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த […]

The post நாளை அறிமுகமாகும் மோட்டரோலாவின் பட்ஜெட்போன் மோட்டோ இ32 first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் நாளை (அக்டோபர் 7) புதிய மோட்டோ இ32 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஒரு 4ஜி போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்ப்ளே

புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவர இருக்கிறது. அதேபோல் இந்த போன் 720×1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்படும்.

சிப்செட்

புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு நன்றாக இருக்கும். இந்த சிப்செட் சிறந்த செயல்திறனைக் கொடுக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.

கேமரா

மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. இதுதவிர முன்புறத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ32.

மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன். மேலும் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள மெமரி நீட்டிப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு மைக்ரோ SD கார்டை பயன்படுத்தி இந்த மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதற்கென மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் இதில் வழங்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரி

இந்த மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.

கனெக்டிவிட்டி

மோட்டோ இ32 ஸ்மார்ட்போன், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த புதிய மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ரூ.12,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

The post நாளை அறிமுகமாகும் மோட்டரோலாவின் பட்ஜெட்போன் மோட்டோ இ32 first appeared on .

]]>
108MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Moto G72 https://www.91mobiles.com/tamil/moto-g72-with-108-megapixel-triple-cameras-launched-in-india-specifications-price-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-g72-with-108-megapixel-triple-cameras-launched-in-india-specifications-price-and-more Tue, 04 Oct 2022 07:56:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2769 பட்ஜெட் விலை, தனித்துவமான வடிவமைப்பு, அட்டகாசமான கேமரா, கேமிங் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவில் Moto G72 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை & சலுகை 6ஜிபி LPDDR4x வகை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையின் மூலம் இந்த போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த சலுகை எப்படி கிடைக்கும் என்றால், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.3,000 மற்றும் தேர்வு செய்யப்பட்டவங்கி […]

The post 108MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Moto G72 first appeared on .

]]>

பட்ஜெட் விலை, தனித்துவமான வடிவமைப்பு, அட்டகாசமான கேமரா, கேமிங் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவில் Moto G72 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை & சலுகை

6ஜிபி LPDDR4x வகை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையின் மூலம் இந்த போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த சலுகை எப்படி கிடைக்கும் என்றால், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.3,000 மற்றும் தேர்வு செய்யப்பட்டவங்கி கார்டுகளை பயன்படுத்தி இதை வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. மேலும் இந்த அறிமுக சலுகை சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

அம்சங்கள்

6.6 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Meteorite Gray மற்றும் Polar Blue நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலில், Dolby Atmos அம்சத்துடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் இருக்கின்றன.

சிப்செட்

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உள்ளது. இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள ஹீலியோ ஜி99 சிப்செட் கேமிங் பயன்பாட்டுக்கு அருமையாக இருக்கும். கூடுதலாக 3 வருடத்திற்கான செக்யூரிட்டி அப்டேட்டுகளை வழங்குவதாக மோடோ தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

கேமரா

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்புறத்தில் 16எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் பல சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேட்டரி

புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது

கனெக்டிவிட்டி

இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். இதன் எடை 166 கிராம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன்.

The post 108MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Moto G72 first appeared on .

]]>