motorola edge 30 neo https://www.91mobiles.com/tamil Wed, 14 Sep 2022 07:11:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மோட்டரோலாவிடம் இருந்து இன்னும் இரண்டு மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/motorola-edge-30-fusion-edge-30-neo-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-edge-30-fusion-edge-30-neo-launched Wed, 14 Sep 2022 07:11:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2292 மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 சீரிஸின் கீழ் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அது மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா, எட்ஜ் 30 ஃப்யூஷன் மற்றும் எட்ஜ் 30 நியோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் என்பதை உறுதியாக கூறலாம். காரணம் இந்த ஸ்மார்ட்போனில் பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை இயக்கும் Snapdragon 8+ Gen 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலைப் பற்றி முந்தைய கட்டுரையில் […]

The post மோட்டரோலாவிடம் இருந்து இன்னும் இரண்டு மொபைல்கள் first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 சீரிஸின் கீழ் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அது மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா, எட்ஜ் 30 ஃப்யூஷன் மற்றும் எட்ஜ் 30 நியோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் என்பதை உறுதியாக கூறலாம். காரணம் இந்த ஸ்மார்ட்போனில் பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை இயக்கும் Snapdragon 8+ Gen 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலைப் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இப்போது மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo ஆகிய பிற இரண்டு ஸ்மார்ட்போன்களும் ப்ரீமியம் ரகம் இல்லை என குறிப்பிட முடியாது. காரணம் இதன் விலை அப்படி இருக்கிறது. எட்ஜ் 30 அல்ட்ரா அளவிலான ப்ரீமியம் அம்சங்கள் இதில் இல்லை என்றாலும் பொதுவான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான அம்சங்கள் இதில் இருக்கிறது.

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo விலை

Motorola Edge 30 Fusion, Edge 30 Neo ஆகிய ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எட்ஜ் 30 ஃப்யூஷன் சோலார் கோல்ட் (Solar Gold), காஸ்மிக் க்ரே (Cosmic Gray) என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 599 யூரோக்கள் (தோராயமாக ரூ. 48,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எட்ஜ் 30 நியோ ஆனது வெரி பெரி, ப்ளாக் ஓனிக்ஸ், ஐஸ் பேலஸ் மற்றும் அக்வா ஃபோம் (Aqua Foam, Ice Palace, Black Onyx and Veri Peri) என 4 நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என குறிப்பிடலாம். காரணம் இதன் விலை 369 யூரோக்கள் (தோராயமாக ரூ.29,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எட்ஜ் 30 ஃப்யூஷன் சிறப்பம்சங்கள்

Motorola Edge 30 Fusion ஆனது 6.55 அங்குல P-OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 1100 நிட்ஸ் பிரகாசம், பி3 வண்ண வரம்பு, எச்டிஆர் 10+ ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கின்றன. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் ஃபேஸ் அன்லாக் (inface unlock) அம்சம் மற்றும் அண்டர் டிஸ்ப்ளே (under display) கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது.

கேமரா

எட்ஜ் 30 ஃப்யூஷன் ஆனது ஸ்னாப்டிராகன் 888+ SoC மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் கூடிய 50 எம்பி பிரதான கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த ஸ்மார்ட்போனானது 4400 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் சிம் ஆதரவு, 5G, Wi-Fi 802.11ax, ப்ளூடூத் 5.2, GPS, NFC மற்றும் USB-C ஆகிய ஆதரவுகள் இதில் இருக்கிறது. வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்புக்கு என IP52 மதிப்பீடு மற்றும் Dolby Atmos ஆதரவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் இருக்கிறது.

எட்ஜ் 30 நியோ சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனானது 6.28 அங்குல P-OLED டிஸ்ப்ளே மற்றும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. 240Hz டச் விகிதத்துடன், 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

4020mAh பேட்டரி ஆதரவுடன் கூடிய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு ஆதரவுக்கு என IP52 மதிப்பீடு இதில் இருக்கிறது. 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவும் இருக்கிறது.

The post மோட்டரோலாவிடம் இருந்து இன்னும் இரண்டு மொபைல்கள் first appeared on .

]]>
செப்டம்பரில் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 நியோ! https://www.91mobiles.com/tamil/motorola-edge-30-neo-is-coming-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-edge-30-neo-is-coming-soon Thu, 01 Sep 2022 16:14:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2001 மோட்டோரோலா நிறுவனம் செப்டம்பர் முதல் வாரத்தில் மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறங்கள் இந்த போன் அக்வா ஃபோம் (Aqua Foam), பிளாக் ஓனிக்ஸ் (Black Onyx), ஐஸ் பேலஸ் (Ice Palace) மற்றும் வெரி பெரி (Very Peri) ஆகிய நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோரோலா எட்ஜ் […]

The post செப்டம்பரில் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 நியோ! first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனம் செப்டம்பர் முதல் வாரத்தில் மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறங்கள்

இந்த போன் அக்வா ஃபோம் (Aqua Foam), பிளாக் ஓனிக்ஸ் (Black Onyx), ஐஸ் பேலஸ் (Ice Palace) மற்றும் வெரி பெரி (Very Peri) ஆகிய நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கேமரா

மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி கேமரா உட்பட பின்பக்கத்தில் இரட்டைக் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இத்துடன் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகமாக இருக்கிறது.

வால்யூம் ராக்கர்ஸ்

குறிப்பாக இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி இருக்கிறது மோட்டோரோலா நிறுவனம்.

சிப்செட்

இந்த போனில் சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

அம்சங்கள்

6.28 அங்குல pOLEDயுடன் கூடிய FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அம்சமும் இருக்கும். 8ஜிபி ரேம், 256ஜி ஸ்டோரேஜ், 4020 எம்ஏஎச் பேட்டரி, 30W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் வெளிவர இருக்கிறது. மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு அறிமுகம் செய்த மோட்டோ ஜி42 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

மோட்டோ ஜி42

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.4-அங்குல OLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் செயல்திறன் மிக அருமையாகஇருக்கும். அதேபோல் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் இதில் உள்ளன. 5000 எம்ஏஎச் பேட்டரி 5000 எம்ஏஎச் பேட்டரி My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரிஉள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஷ் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

The post செப்டம்பரில் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 நியோ! first appeared on .

]]>