narzo 50i https://www.91mobiles.com/tamil Wed, 07 Sep 2022 14:17:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விரைவில் இந்தியாவிற்கு வருகிறது ரியல்மி நார்ஸோ 50i https://www.91mobiles.com/tamil/new-realme-narzo-50i-prime-smartphone-launching-soon-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-realme-narzo-50i-prime-smartphone-launching-soon-in-india Wed, 07 Sep 2022 14:17:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2134 கடந்த ஜூன் மாதம் உலக சந்தைகளில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் இந்தியாவில் அறிமுகமானால் அதன் விற்பனை அமேசான் தளத்தின் மூலம் நடக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். நிறங்கள் இந்தியாவில் இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் டார்க் ப்ளூ மற்றும் மின்ட் […]

The post விரைவில் இந்தியாவிற்கு வருகிறது ரியல்மி நார்ஸோ 50i first appeared on .

]]>

கடந்த ஜூன் மாதம் உலக சந்தைகளில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் இந்தியாவில் அறிமுகமானால் அதன் விற்பனை அமேசான் தளத்தின் மூலம் நடக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நிறங்கள்

இந்தியாவில் இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் டார்க் ப்ளூ மற்றும் மின்ட் க்ரீன் நிறங்களில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

டிஸ்பிளே

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் 6.5 அங்குல HD+ LCD டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராசஸர்

இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் Unisoc T612 பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதள ஆதரவுடன் அறிமுகமாகும்.

சேமிப்புத்திறன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது அதாவது micro SD card மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கேமரா

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் பின்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஒவ்வொரு கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

கனெக்டிவிட்டி

வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த போனின் எடை 182 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.7500-க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post விரைவில் இந்தியாவிற்கு வருகிறது ரியல்மி நார்ஸோ 50i first appeared on .

]]>