Netflix India https://www.91mobiles.com/tamil Tue, 24 Jan 2023 12:11:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நெட்ஃப்ளிக்ஸ்: பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பை உறுதி செய்த புதிய நிர்வாக அதிகாரிகள் https://www.91mobiles.com/tamil/netflix-new-ceo-confirms-everyone-want-to-pay-extra-who-sharing-password/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=netflix-new-ceo-confirms-everyone-want-to-pay-extra-who-sharing-password Tue, 24 Jan 2023 12:17:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5323 பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை முன்னதாகவே பல நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நாடுகளிலும் விரிவு செய்யப்பட்டு மார்ச் 2023க்குள் முழுமையாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் பலரும் இதற்கு தயாராகி வருகின்றனர். இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், பயனர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் […]

The post நெட்ஃப்ளிக்ஸ்: பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பை உறுதி செய்த புதிய நிர்வாக அதிகாரிகள் first appeared on .

]]>

Highlights

  • Netflix முன்னாள் சிஇஓ ரீட் ஹேஸ்டங்ஸ் கடந்த ஆண்டே பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை குறித்து உறுதி செய்தார்.
  • இதையடுத்து தற்போது புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகளான (CEO) கிரெக் பீட்டர் மற்றும் டெட் சரண்டோஸ் இதுகுறித்த கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை முன்னதாகவே பல நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நாடுகளிலும் விரிவு செய்யப்பட்டு மார்ச் 2023க்குள் முழுமையாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் பலரும் இதற்கு தயாராகி வருகின்றனர். இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், பயனர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் விளம்பர ஆதரவு சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தது.

 

வருவாய் வீழ்ச்சி

வருவாயில் வீழ்ச்சியை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ் அதை அதிகரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. நெட்ஃபிளிக்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ், பாஸ்வேர்ட் பகிர்வு விருப்பம் படிப்படியாக அனைவருக்கும் முடிவுக்கு வரும் என கடந்த ஆண்டே அறிவித்தார். இந்த நிலையில் தற்போது புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாண்டோஸ் ஆகியோர் ப்ளூபெர்க் இடம் அளித்த ஒரு நேர்காணலில் நெட்ஃபிளிக்ஸ் கடவுச்சொல் பகிர்வு விருப்பம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் முடிவடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

 

எதிர்பார்ப்பு

எனவே நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்த நண்பர்கள் அல்லது பிறரை நம்பி இருக்கும் இந்தியர்கள், இனி தளத்தை பயன்படுத்த விரைவில் பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. Netflix சேவைக்கு பணம் செலுத்தாமல் தளத்தை பயன்படுத்த பிறரை நம்பி இருக்கும் பயனர்கள் விரைவில் பணம் செலுத்தத் தொடங்குவார்கள் என பீட்டர்ஸ் கூறினார். பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கையில் சிஇஓக்கள், இந்தியா போன்ற நாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 15-20 மில்லியன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கின்றனர்.

 

புதிய வழிகள்

Netflix நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வழிகளை முயற்சி செய்து வருகிறது. அதில் ஒன்று தான் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை ஆகும். நெட்ஃபிளிக்ஸ் தங்கள் பயனர்கள் கடவுச்சொல்லை பகிர்வதை தடுப்பதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. தற்போது நிறுவனம் விரைவில் இதை அனைவருக்கும் செயல்படுத்த இருக்கிறது. தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வரும் நெட்ஃபிளிக்ஸ் இதை முடிவுக்கு கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. பயனர்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை பகிர்ந்தால் நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை நண்பர்களுடனோ அல்லது வேறு ஒருவரிடமோ பகிர்ந்தால் அந்த நபர் உங்கள் சுயவிவரத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

 

எவ்வளவு கட்டணம்?

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு குறித்து நிறுவனம் கோஸ்டாரிகா, சிலி, பெரு மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோதனை செய்தது. அங்கு பாஸ்வேர்ட் பகிரும் நபர்களிடம் $3 (தோராயமாக ரூ.250) வசூலிக்கிறது. இந்தியாவில் ஒரு பகிர்வுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. IP முகவரிகள், சாதன ஐடிகள் மற்றும் கணக்கு செயல்பாடு மூலம் இந்த பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட இருக்கிறது. அறிமுகமான புது ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமான புது ரீசார்ஜ் திட்டங்கள் மறுபுறம் பயனர்கள் இந்த நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என விளம்பரத்துடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது. Basic with Ads திட்டங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு முதல் ஐந்து விளம்பரங்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு விளம்பரங்களும் 15 முதல் 30 வினாடிகள் நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. உலகளாவிய விளம்பர திட்டங்களுக்கு என நெட்பிளிக்ஸ் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 

கட்டுப்பாடுகள்

திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் 720p வீடியோ தரத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் வரையறுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் இந்த திட்டத்தில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாத நிகழ்ச்சிகள் லாக் (பூட்டு) ஐகான் உடன் காட்டப்படும். அதேபோல் ஆப்பிள் டிவி உள்ளிட்ட சில சாதனங்களில் விளம்பர அடுக்கு திட்டங்கள் வேலை செய்யாது எனவும் கூறப்படுகிறது. விளம்பர ரீசார்ஜ் திட்ட விலை விளம்பர ரீசார்ஜ் திட்ட விலை இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டிஸ்னி ப்ளஸ் இன் விளம்பர அடுக்கு ரீசார்ஜ் திட்டம் $7.99 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்ட விலை $6.99 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நெட்பிளிக்ஸ் திட்டத்தின் விலையை விட டிஸ்னி ப்ளஸ் விலை $1 அதிகம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்டத்தின் விலை மாறுபடுகிறது.

 

The post நெட்ஃப்ளிக்ஸ்: பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பை உறுதி செய்த புதிய நிர்வாக அதிகாரிகள் first appeared on .

]]>
விளம்பரங்களோடு குறைந்த கட்டணத்தில் வருகிறது நெட்ஃபிளிக்ஸ் https://www.91mobiles.com/tamil/netflix-plans-low-price-ad-based-plans-available-soon-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=netflix-plans-low-price-ad-based-plans-available-soon-in-india Thu, 08 Sep 2022 10:58:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2163 Netflix புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் விளம்பர சந்தா திட்டங்களை வெளியிட இருக்கிறது. பயனர்களை கவரும் விதமாக இந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விளம்பர திட்டங்கள் வெளியிடப்பட இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் இன் விளம்பர திட்டங்கள் பிற ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களுடன் போட்டியை ஏற்படுத்தம் என எதிரிபார்க்கப்படுகிறது. சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு Netflix இன் விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் அமெரிக்க விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த […]

The post விளம்பரங்களோடு குறைந்த கட்டணத்தில் வருகிறது நெட்ஃபிளிக்ஸ் first appeared on .

]]>

Netflix புதிய சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் விளம்பர சந்தா திட்டங்களை வெளியிட இருக்கிறது. பயனர்களை கவரும் விதமாக இந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விளம்பர திட்டங்கள் வெளியிடப்பட இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் இன் விளம்பர திட்டங்கள் பிற ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களுடன் போட்டியை ஏற்படுத்தம் என எதிரிபார்க்கப்படுகிறது.

சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

Netflix இன் விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் அமெரிக்க விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த புதிய விளம்பர திட்டத்தின் மூலம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதோடு நெட்ஃபிளிக்ஸ் இன் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் விலை

Netflix இன் விளம்பர அடிப்படையிலான திட்டங்களின் விலை என்னவாக இருக்கும் என்பதை இத்தகவல் தெளிவுப்படுத்தியுள்ளது. Netflix விளம்பர அடிப்படையிலான திட்டங்களுக்கு மாதத்திற்கு USD 7 முதல் USD 9 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.559 முதல் ரூ.719 ஆகும்.

தற்போதுவரை அமெரிக்காவில் நெட்ஃபிளிக்ஸ் 1 மாத திட்டத்திற்கான விலை USD 9.99 (சுமார் ரூ.799), USD 15.49 (சுமார் ரூ.1,239), மற்றும் USD 19.99 (சுமார் ரூ.1,599) என வசூலிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை விலை இந்த அளவிற்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரூ.100க்கும் குறைவாக இருக்க வாய்ப்பு

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை மொபைல் திட்டம் ரூ.149 என வசூலிக்கப்படுகிறது. எனவே நெட்ஃபிளிக்ஸ் விளம்பர திட்டங்கள் விலை ரூ.100க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளம்பர திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவு விலை Netflix திட்டங்கள்

இந்தியாவை பொறுத்தவரை Netflix இன் சந்தா திட்டம் ரூ.149 முதல் தொடங்குகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் இன் சந்தா திட்டங்கள் விலை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதோடு குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் டிடிஎச் ரீசார்ஜ் திட்டங்களில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை Netflix திட்டங்களின் விலை விரிவாக பார்க்கலாம்.

ரூ.149 திட்டம்

Netflix வழங்கும் இந்த திட்டமானது மொபைல் அல்லது டேப்லெட்டுக்கான சந்தா திட்டமாகும். 480p ஸ்ட்ரீமிங் வீடியோ தர ஆதரவு இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு சாதனத்திற்கான அணுகல் மட்டுமே கிடைக்கும்.

ரூ.199 திட்டம்

ரூ.199 திட்டமானது அடிப்படை சந்தா திட்டமாகும். இந்த திட்டத்தில் 480 பிக்சல் தீர்மானம் வழங்கப்படுகிறது. மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் டிவி உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் இந்த திட்டத்தை இயக்க முடியும்.

ரூ.499 திட்டம்

ரூ.499 திட்டமானது நிறுவனத்தின் சிறந்த ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது. 1080P தீர்மானம் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை போன், டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் டிவி உள்ளிட்ட சாதனங்களில் இயக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஸ்ட்ரீமிங் செய்ய இந்த திட்டம் அனுமதிக்கிறது.

ரூ.649 திட்டம்

ரூ.649 திட்டத்தை போன், டேப்லெட், கணினி அல்லது டிவி உள்ளிட்ட அனைத்திலும் இயக்கலாம். 4K HDR ஸ்ட்ரீமிங் வீடியோ தரத்தை இதில் பெறலாம். நிறுவனத்தின் ப்ரீமியம் சந்தா திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை ஒரு நேரத்தில் நான்கு சாதனங்களில் இயக்கலாம். உயர்திறன் வீடியோ தரத்தை விரும்பும் பயனர்களுக்கு இது மலிவு விலை திட்டமாக இருக்கிறது.

The post விளம்பரங்களோடு குறைந்த கட்டணத்தில் வருகிறது நெட்ஃபிளிக்ஸ் first appeared on .

]]>