nokia x30 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:43:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் வெளியாகிறதா நோக்கியாவின் பட்ஜெட் போன் நோக்கியா X30 5G? https://www.91mobiles.com/tamil/hmd-global-to-launch-nokia-x30-smartphone-in-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hmd-global-to-launch-nokia-x30-smartphone-in-india-soon Fri, 10 Feb 2023 06:01:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5713 நோக்கியா X30 5G எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணைத் தலைவர் Sanmeet Kochhar தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நோக்கியா 5ஜி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது விரைவில் நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று […]

The post இந்தியாவில் வெளியாகிறதா நோக்கியாவின் பட்ஜெட் போன் நோக்கியா X30 5G? first appeared on .

]]>

Highlights

  • நோக்கியா விரைவில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • இது நோக்கியா X30 5G என்ற பெயரில் வெளியாகலாம்.

நோக்கியா X30 5G

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணைத் தலைவர் Sanmeet Kochhar தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நோக்கியா 5ஜி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது விரைவில் நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

டிஸ்பிளே

நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ஆனது 6.43 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

சிப்செட்

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் இருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

 

மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். குறிப்பாக மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் மற்றும் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

கேமரா

நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

 

பேட்டரி & சார்ஜிங்

நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

 

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, எனஎப்சி, ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல். அதேபோல் இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த நோக்கியா போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

The post இந்தியாவில் வெளியாகிறதா நோக்கியாவின் பட்ஜெட் போன் நோக்கியா X30 5G? first appeared on .

]]>
மூன்று போன்களை களம் இறக்கியது நோக்கியா! https://www.91mobiles.com/tamil/nokia-launched-3-smartphones-nokia-x30-5g-g60-5g-c13-price-and-specs-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nokia-launched-3-smartphones-nokia-x30-5g-g60-5g-c13-price-and-specs-details Fri, 02 Sep 2022 05:37:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2006 Nokia நிறுவனம் நோக்கியா X30 5G, G60 5G, C31 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பட்ஜெட், மிட்-ரேன்ஜ், ப்ரீமியம் என வெவ்வேறு விலைப் பிரிவில் வெளியாகி இருக்கின்றன. Nokia X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31 நோக்கியா நிறுவனம் X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31 ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது. இதில் Nokia X30 5G மற்றும் G60 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் […]

The post மூன்று போன்களை களம் இறக்கியது நோக்கியா! first appeared on .

]]>

  • Nokia நிறுவனம் நோக்கியா X30 5G, G60 5G, C31 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இவை பட்ஜெட், மிட்-ரேன்ஜ், ப்ரீமியம் என வெவ்வேறு விலைப் பிரிவில் வெளியாகி இருக்கின்றன.

Nokia X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31

நோக்கியா நிறுவனம் X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31 ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது. இதில் Nokia X30 5G மற்றும் G60 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 695 என்ற ஒரே செயலியில் இயக்கப்படுகின்றன.

3 ஆண்டுகளுக்கான முக்கிய OS மேம்படுத்தல்கள் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என நோக்கியா உறுதியளித்துள்ளது.
உலகளவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது.

Nokia X30 5G

Nokia X30 5G ஸ்மார்ட்போனானது Cloudy Blue மற்றும் Ice White என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 529 EUR (தோராயமாக ரூ.42,200) ஆக இருக்கிறது.

Nokia G60 5G

Nokia G60 5G ஸ்மார்ட்போனானது Pure Black மற்றும் Ice Grey என்ற வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை 319 EUR (தோராயமாக ரூ.25,400) ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Nokia C31

Nokia C31 ஸ்மார்ட்போனானது Mint, Charcoal மற்றும் Cyan என மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது. 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்களில் அறிமுகமாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை 239 EUR (தோராயமாக ரூ.19,000) ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Nokia X30 5G சிறப்பம்சங்கள்

  • 6.43 அங்குல முழு HD+ AMOLED டிஸ்ப்ளே
  • 90Hz ரெஃப்ரஷிங் ரேட், 700 nits உச்ச பிரகாசம்
  • கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
  • ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G SoC
  • 8GB ரேம், 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு
  • 50 எம்பி ஆட்டோ ஃபோகஸ் OIS, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என டூயர் ரியர் கேமரா
  • முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா
  • 4200mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

Nokia G60 5G சிறப்பம்சங்கள்

  • 6.58 அங்குல FHD+ LCD டிஸ்ப்ளே
  • 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 1080×2400 பிக்சல்கள் தீர்மானம்
  • ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC ஆதரவு
  • 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
  • 50 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா
  • 8 எம்பி செல்பி கேமரா
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
  • 4500 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • பவர் பட்டன் கைரேகை ஸ்கேனர்

Nokia C31 சிறப்பம்சங்கள்

  • 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே
  • Octa-Core Unisoc SC9863A1 சிப்செட்
  • 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
  • 13 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா
  • 5 எம்பி செல்பி கேமரா
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
  • 5050 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங்

The post மூன்று போன்களை களம் இறக்கியது நோக்கியா! first appeared on .

]]>