Nord N20 SE https://www.91mobiles.com/tamil Tue, 07 Mar 2023 13:35:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அமேசான் தளத்தில் இருந்து ஒன்ப்ளஸ் நோர்ட் என்20 எஸ்இ போன் நீக்கப்பட காரணம் என்ன? https://www.91mobiles.com/tamil/better-to-avoid-buy-oneplus-nord-n20-se-under-amazon-or-flipkart-offer-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=better-to-avoid-buy-oneplus-nord-n20-se-under-amazon-or-flipkart-offer-price Wed, 23 Nov 2022 07:28:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3831 ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord N20 SE எனும் ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் சலுகை விலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பட்டியலிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அமேசான் தளத்தில் இருந்து ஒன்ப்ளஸ் நோர்ட் என்20 எஸ்இ போன் நீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் Flipkart தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து […]

The post அமேசான் தளத்தில் இருந்து ஒன்ப்ளஸ் நோர்ட் என்20 எஸ்இ போன் நீக்கப்பட காரணம் என்ன? first appeared on .

]]>

ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord N20 SE எனும் ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் சலுகை விலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பட்டியலிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அமேசான் தளத்தில் இருந்து ஒன்ப்ளஸ் நோர்ட் என்20 எஸ்இ போன் நீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் Flipkart தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் இந்நிறுவனத்தின் சில போன்களுக்கு நல்ல வரவேற்பு இல்லை என்பது தான் உண்மை. பல பிரச்சனை அதாவது இந்நிறுவனத்தின் நோர்ட் ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களுக்கு முன்பு பல பிரச்சனைகளைச் சந்தித்தன. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் சில ஸ்மர்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் அவற்றில் தரமான அம்சங்கள் இல்லை என்பது மக்களின் கருத்து.

பிராண்ட் உத்தரவாதம்

இதுபற்றி கூறிய டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானில் உள்ள OnePlus Nord N20 SE போன் பிராண்டால் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் பிராண்ட் உத்தரவாதமும் இல்லை என்று கூறுகிறார். குறிப்பாக யூனிட்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படுவதாக அவர் கூறுகிறார். brand warranty இல்லாமல் ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ போனை வாங்குவது நல்லது அல்ல.

அதேபோல் இந்த ஒன்பிளஸ் போன் இந்தியாவில் OPPO A77 4G (ரீபிராண்ட்) ஆக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒப்போ ஏ77 4ஜி போனில் உள்ள அதே அம்சங்கள் ஒன்பிளஸ் நோர்ட் எஸ்20 எஸ்இ போனில் உள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் எஸ்20 எஸ்இ போன் ரூ.14,250-விலையில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 6.56 அங்குல டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ மாடல்.

சிப்செட்

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. OxygenOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது .

கேமரா

அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

The post அமேசான் தளத்தில் இருந்து ஒன்ப்ளஸ் நோர்ட் என்20 எஸ்இ போன் நீக்கப்பட காரணம் என்ன? first appeared on .

]]>