note 11se https://www.91mobiles.com/tamil Wed, 31 Aug 2022 17:39:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 64MP குவாட் கேமராவுடன் விற்பனைக்கு வந்தது ரெட்மி நோட் 11SE https://www.91mobiles.com/tamil/redmi-note-11se-with-a-64mp-quad-rear-camera-setup-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-11se-with-a-64mp-quad-rear-camera-setup-launched Wed, 31 Aug 2022 06:30:00 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1932 ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸரைக் கொண்டிருக்கிறது. ரெட்மி ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 அங்குல 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், ARM மாலி-G76 MC4 GPU, வழங்கப்பட்டு […]

The post 64MP குவாட் கேமராவுடன் விற்பனைக்கு வந்தது ரெட்மி நோட் 11SE first appeared on .

]]>

  • ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸரைக் கொண்டிருக்கிறது.

ரெட்மி ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 அங்குல 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், ARM மாலி-G76 MC4 GPU, வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா என குவாட் கேமரா சென்சார்கள், 13MP இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரியையும் கொண்டு இருக்கிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதை கொண்டு பேட்டரியை முப்பது நிமிடங்களில் 54 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் IP53 தர ஸ்பிலாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.0, டூயல் ஸ்பீக்கர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5, போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் தண்டர் பர்பில், காஸ்மிக் வைட், ஸ்பேஸ் பிளாக் மற்றும் பைபிராஸ்ட் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவங்க இருக்கிறது.

இந்நிலையில், ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அடுத்த வாரமே இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனின் ரீபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

விலை

சர்வதேச சந்தையில் இதே ஸ்மார்ட்போன் ரெட்மி 10 5ஜி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்தியாவில் புதிய ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அம்சங்கள்

ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலில் 6.58 அங்குல் IPS LCD 1080×2048 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த MIUI 13 கொண்டிருக்கும். இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

The post 64MP குவாட் கேமராவுடன் விற்பனைக்கு வந்தது ரெட்மி நோட் 11SE first appeared on .

]]>
விரைவில் இந்தியாவுக்கு வருகிறது ரெட்மி நோட் 11 SE https://www.91mobiles.com/tamil/redmi-note-11-se-might-launch-in-india-as-a-rebranded-redmi-note-10s/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-11-se-might-launch-in-india-as-a-rebranded-redmi-note-10s Wed, 03 Aug 2022 11:47:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1337 இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ் மிகவும் பிரபலமாகி வருகிறது. விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் புது ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி, நோட் 11T 5ஜி மற்றும் பல்வேறு மாடல்கள் நோட் 11 சீரிசில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், மற்றும் ஓரு ஸ்மார்ட்போனினை ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகம் செய்ய ஷாவ்மி திட்டமிட்டு வருவதாக […]

The post விரைவில் இந்தியாவுக்கு வருகிறது ரெட்மி நோட் 11 SE first appeared on .

]]>

  • இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ் மிகவும் பிரபலமாகி வருகிறது.
  • விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் புது ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி, நோட் 11T 5ஜி மற்றும் பல்வேறு மாடல்கள் நோட் 11 சீரிசில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், மற்றும் ஓரு ஸ்மார்ட்போனினை ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகம் செய்ய ஷாவ்மி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 SE எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிரபல டிப்ஸ்டரான கேபர் சிபெக் ரெட்ம் நோட் 11 SE பெயர் அடங்கிய புது மாடல் விவரங்களை MIUI குறியீடுகளில் கண்டறிந்துள்ளார்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கானது என்றும் இது சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

MIUI குறியீடுகளின் படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10S மாடலின் ரீபிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் சில நாடுகளில் போக்கோ M5S எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில், இந்த மாடல் விவரங்கள் பல்வேறு சான்று அளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. இத்தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ரெட்மி நோட் 11 SE மாடலில் ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்களே வழங்கப்படலாம்.

அந்த வகையில், இந்த போன் 60Hz ரிப்ரெஷ் ரேட் (refresh rate) உடைய 6.43 அங்குல FHD ப்ளஸ் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். அதிகபட்சமாக 1100 nits வெளிச்சத்தைக் கொண்டிருக்கும். பாதுகாப்புக்காக Corning Gorilla Glass 3 பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ G95 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு இருக்கும், 8GB RAM, 128GB சேமிப்புத்திறன் வழங்கப்படும். இதன் சேமிப்புத்திறனை micro SD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் என மூன்று 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இதன் மூலம் 4K@30fs வீடியோ எடுக்கலாம். முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கும். இதன்மூலம் 1080@30fs வீடியோ எடுக்க முடியும். இந்த மொபைலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI 13 கொண்டு இருக்கும்.

பக்கவாட்டில் finger print scanner வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.1, WiFi, Type C 2.0 போன்ற பல வசதிகள் வழங்கப்பட்டிருக்கும்.

The post விரைவில் இந்தியாவுக்கு வருகிறது ரெட்மி நோட் 11 SE first appeared on .

]]>