noth phone 1 lite https://www.91mobiles.com/tamil Mon, 01 Aug 2022 05:31:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Nothing நிறுவனத்திடம் இருந்து பட்ஜெட் போன் வருகிறதா? https://www.91mobiles.com/tamil/nothing-could-soon-launch-a-lite-version-model-of-its-new-phone-named-nothing-lite-phone-1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=nothing-could-soon-launch-a-lite-version-model-of-its-new-phone-named-nothing-lite-phone-1 Mon, 01 Aug 2022 05:28:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1228 Nothing நிறுவனம் இப்போது, புதிதாக அதனுடைய 2வது ஸ்மார்ட்போன் மாடலை சைலெண்டாக உருவாக்கி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 1 டிவைஸ் உலகளவில் பெரியளவு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, நிறுவனம் இப்போது பட்ஜெட் செக்மென்ட்டிலும் கால் பதிக்க இருப்பதாகத் தெரிகிறது. Apple, OnePlus, Oppo, Vivo போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அவர்களுக்கான லைட் வெர்ஷன் மாடல்களை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இப்போது Nothing நிறுவனமும் கூட்டு […]

The post Nothing நிறுவனத்திடம் இருந்து பட்ஜெட் போன் வருகிறதா? first appeared on .

]]>

Nothing நிறுவனம் இப்போது, புதிதாக அதனுடைய 2வது ஸ்மார்ட்போன் மாடலை சைலெண்டாக உருவாக்கி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 1 டிவைஸ் உலகளவில் பெரியளவு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, நிறுவனம் இப்போது பட்ஜெட் செக்மென்ட்டிலும் கால் பதிக்க இருப்பதாகத் தெரிகிறது.
Apple, OnePlus, Oppo, Vivo போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அவர்களுக்கான லைட் வெர்ஷன் மாடல்களை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இப்போது Nothing நிறுவனமும் கூட்டு சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய லைட் வெர்ஷன் மாடலை நிறுவனம் நத்திங் லைட் போன் 1 (Nothing Lite Phone 1) என்ற பெயரில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Lite Phone 1 டிவைஸில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள Nothing Lite Phone 1, நத்திங் போன் 1ல் வழங்கப்பட அதே டிஸ்பிளே, ப்ராசஸர் மற்றும் கேமராக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லைட் வெர்ஷன் நத்திங் போனில் இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருக்கும் என்று சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது.

Nothing Lite Phone 1 டிவைஸ் ஒரு சாதாரண ட்ரான்ஸ்பரென்ட் கண்ணாடி உடன், பின்புற LED லைட் இல்லாமலும், க்ளைஃப் (Glyph) இன்டர்பேஸ் அம்சமும் இல்லாமல் வெளிவரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இந்த லைட் வெர்ஷன் மாடலில் இடம் பெறாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், லைட் வெர்ஷன் டிவைஸ் 42W சார்ஜரைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நத்திங் லைட் போன் 1 சாதனம், 33W சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கும் என்று சமீபத்திய லீக் தகவல் தெரிவிக்கிறது.

இந்த Nothing Lite Phone 1 ரூ. 24,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த லைட் வெர்ஷன் மாடல்கள் என்ன ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வெளிவரும் என்பது குறித்த ஆதாரங்கள் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் பட்ஜெட் விலையில் ஒரு 6 ஜிபி/128 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் மாடலுடன் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த லைட் வெர்ஷன் நத்திங் போன் டிவைஸ் ரூ.24,999 என்ற விலையில் தொடங்கும் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, வரவிருக்கும் இந்த புதிய போன் சற்று பெரிய 5000mAh பேட்டரியுடன் வரும் என்று சில ஆதாரங்கள் கூறியுள்ளன. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் (1) இல் இருப்பது போன்று 6.55′ அங்குல முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் வெளிவரக்கூடும். இதிலும் 50 மெகாபிக்சல் கொண்ட டூயல் கேமராக்கள் இடம்பெறும். போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

நிச்சயமாக, நத்திங் லைட் வெர்ஷன் போனும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ‘நத்திங் ஓஎஸ்’ இடைமுகத்தில் இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. நத்திங் நிறுவனம் குறைந்த விலையில் அதன் லைட் வெர்ஷன் போன்களை விற்பனை செய்யுமென்றால், கட்டாயமாக அதன் விற்பனை இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தை ஒட்டி தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இருப்பினும், Nothing Lite Phone 1 பற்றி நிறுவனத்திடம் கேட்டபோது, அத்தகைய ஒரு திட்டம் இல்லை என்று கூறியதாக டெக் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

The post Nothing நிறுவனத்திடம் இருந்து பட்ஜெட் போன் வருகிறதா? first appeared on .

]]>