okaya https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:40:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்த மாதத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஒகாயா https://www.91mobiles.com/tamil/okaya-ev-faast-f2f-launched-in-india-at-rs-83999/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=okaya-ev-faast-f2f-launched-in-india-at-rs-83999 Wed, 22 Feb 2023 08:14:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6002 ஒகாயா நிறுவனம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தரமான புதுமு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஃபாஸ்ட் எஃப்2எஃப் (Faast F2F) எனும் மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 83,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் இந்தியாவில் களமிறங்கும் ஒகாயாவின் இரண்டாவது தயாரிப்பு இது ஆகும்   Okaya Faast F2F இம்மாதம் பத்தாம் தேதி நிறுவனம் ஃபாஸ்ட் […]

The post இந்த மாதத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஒகாயா first appeared on .

]]>

Highlights

  • ஒகாயா நிறுவனம் அதன் ஃபாஸ்ட் எஃப்2எஃப் (Faast F2F) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
  • இதற்கு அறிமுக விலையாக ரூ. 83,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஒகாயா நிறுவனம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தரமான புதுமு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஃபாஸ்ட் எஃப்2எஃப் (Faast F2F) எனும் மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 83,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் இந்தியாவில் களமிறங்கும் ஒகாயாவின் இரண்டாவது தயாரிப்பு இது ஆகும்

 

Okaya Faast F2F

இம்மாதம் பத்தாம் தேதி நிறுவனம் ஃபாஸ்ட் எஃப்3 (Okaya Faast F3) எனும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தது. இதனைத் தொடர்ந்தே இப்போது நிறுவனம் மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான எஃப்2எஃப் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

பேட்டரி & மைலேஜ்

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் விபரம் இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 60V 36Ah (2.2 kWh) லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன், 800W BLDC ஹப் மோட்டாரும் மிக சிறந்த வேக திறனுக்காக ஒகாயா ஃபாஸ்ட் எஃப்2எஃப் ஸ்கூட்டரில் பயன்படுத்தி இருக்காங்க. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இந்த மோட்டார் மற்றும் பேட்டரி பேக் ஆகிய இரண்டிற்கும் இரண்டு ஆண்டுகள் வாரண்டியை ஒகாயா நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இலக்கு

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்ப பெண்கள், மாணவர்கள்தான் இலக்கு இந்த வாகனத்தை மாணவர்கள், இளம் தலைமுறையினர்கள், குடும்ப பெண்கள் மற்றும் தினசரி அலுவலகம் சென்று வருபவர்கள் உள்ளிட்டோரைக் கருத்தில் கொண்டே ஒகாயா உருவாக்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அனைவரும் நுகர கூடிய மிகக் குறைவான விலையையும் அந்நிறுவனம் நிர்ணயம் செய்து இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் கருவிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

 

அம்சங்கள்

அந்தவகையில், இந்தியாவின் கரடு, முரடான சாலையை சமாளிக்க ஏதுவாக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, ரிமோட் வசதிக் கொண்ட சாவி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மிகவும் ஸ்டைலான டிஆர்எல்கள் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் எட்ஜியான தோற்றம் கொண்ட வால் பகுதி லைட் உள்ளிட்டவையும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், ட்யூப் லெஸ் டயரும் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பள்ளம் மேடுகள் நிறைந்த சாலையை சமாளிக்கும் பொருட்டே இந்த வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் வழங்கப்பட்டு உள்ளது. இது, சிறந்த ரேஞ்ஜ் திறனுக்கு வழிவகுக்கும் வகையில் நல்ல கிரிப் தன்மையுடன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

சார்ஜிங் நேரம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரைடிங் மோட் விபரம் இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மோட்களே வழங்கப்பட்டு உள்ளன.

 

விற்பனையகங்கள்

ஒகாயா நிறுவனத்திற்கு சொந்தமாக தற்போது நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து ஷோரூம்களிலும் புதிய ஒகாயா ஃபாஸ்ட் எஃப்2எஃப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ள முடியும். நிற தேர்வை பொருத்தவரை, மெட்டாலிக் பிளாக் (Metallic Black) மெட்டாலிக் சையன் (Metallic Cyan) மேட் கிரீன் (Matte Green) மெட்டாலிக் கிரே (Metallic Grey) மெட்டாலிக் சில்வர் (Metallic Silver) மெட்டாலிக் ஒயிட் (Metallic White) ஆறு விதமான நிற தேர்வுகளில் எஃப்2எஃப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகி இருக்கிறது.

 

The post இந்த மாதத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஒகாயா first appeared on .

]]>
ஒகாவா நிறுவனத்தின் 6வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகிறதா ஃபாஸ்ட் எஃப்3? https://www.91mobiles.com/tamil/okaya-ev-launches-new-electric-scooter-feb-10/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=okaya-ev-launches-new-electric-scooter-feb-10 Tue, 07 Feb 2023 11:48:20 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5615 இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா-வும் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவில் ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப்2பி, ஃபாஸ்ட் எஃப்2டி, ஃப்ரீடம் மற்றும் கிளாசிக் பிளஸ் என ஐந்து விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் வரிசையிலேயே புதிதாக மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஒகாயா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு […]

The post ஒகாவா நிறுவனத்தின் 6வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகிறதா ஃபாஸ்ட் எஃப்3? first appeared on .

]]>

Highlights

  • ஒகாயா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கிறது.
  • இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் படத்தையும் அது வெளியிட்டு உள்ளது.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா-வும் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவில் ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப்2பி, ஃபாஸ்ட் எஃப்2டி, ஃப்ரீடம் மற்றும் கிளாசிக் பிளஸ் என ஐந்து விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இவற்றின் வரிசையிலேயே புதிதாக மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஒகாயா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. டீசர் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒகாயா நிறுவனம், வருகின்ற 10 தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

விலை

இந்த தகவலை நிறுவனம் அதன் சமூக வலைதள பக்க பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபாஸ்ட் எஃப்3 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதையும் அது உறுதி செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக 1 லட்சத்து 13 ஆயிரத்து 999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல முக்கிய விபரங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

 

மோட்டார்

வருகைக்கு முன்னரே அதன் மின் வாகன பிரியர்களை ஈர்க்கும் பொருட்டு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் மின் வாகன பிரியர்கள் அல்லாதோரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்றே கூறலாம். காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிக திறன் வெளிப்பாடாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1200 வாட் மின் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. இது 2500 வாட் வரையில் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

ரேஞ்ச்

இதுதவிர டூயல் பேட்டரி ஆப்ஷனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும். 3.5 kWh லித்தியம் அயன் எல்எஃப்பி பேட்டரிகளே வழங்கப்பட்டிருக்கும். பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஸ்விட்சிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவே ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 உருவாகி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் ஃபுல் சார்ஜில் 140 கிமீ முதல் 160 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பேட்டரி

இந்நிறுவனத்தின் மற்றுமொரு டூயல் பேட்டரி செட்-அப் கொண்ட வாகனமான ஃபாஸ்ட் எஃப்4 இதே ரேஞ்ஜைய வழங்குகின்றது. இதில், 72V 30Ah எல்எஃப்பி பேட்டரி பேக்கையே நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இதனுடன் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வசதிகள்

இது தவிர ஆன்டி தெஃப்ட் அலாரம், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் புதுமுக ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் அதன் மின் வாகன தயாரிப்புகளின் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிற நிதி நிறுவனங்களுடன் இணைந்து தன்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களைக் குறைவான விலையிலும், வட்டி விகிதத்திலும் அது விற்பனைச் செய்து வருகின்றது.

 

நிதியுதவி

பஜாஜ் பின்சர்வ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முன்னணி வங்கிகளுடன் இதற்காக ஒகாயா கூட்டணியை வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி இன்னும் சில வங்கிகளுடன் ஒகாயா இணைந்த வண்ணம் உள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நிதியுதவி கிடைக்கம் விதமாக இந்த இணைப்பை அது மேற்கொண்டு வருகின்றது. நிறுவனம் தற்போது விற்பனையகங்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றது.

 

வளர்ச்சி

2021 வரை 225க்கும் குறைவாக இருந்த விற்பனை மையங்களின் எண்ணிக்கை தற்போது 5500-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்தும் பணியையும் ஒகாயா மேற்கொண்டு வருகின்றது. வாடிக்கையாளர்களைக் கவர புதுமுக வாகனங்கள் மட்டுமே போதாது, புதிய ஷோரூம்களும் தேவை என்பதை உணர்ந்து அது விற்பனையகங்களை விரிவாக்கம் செய்து வருகிறது.

The post ஒகாவா நிறுவனத்தின் 6வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகிறதா ஃபாஸ்ட் எஃப்3? first appeared on .

]]>
சலுகைகளுடன் அறிமுகமானது ஒகாயாவின் இரண்டு பட்ஜெட்விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் https://www.91mobiles.com/tamil/okaya-announces-special-gift-scheme-due-to-diwali/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=okaya-announces-special-gift-scheme-due-to-diwali Fri, 21 Oct 2022 05:09:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3158 இந்த தீபாவளி பண்டிகையில் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா இவி (Okaya EV) வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக குறைந்த விலை இ-ஸ்கூட்டரையும், சிறப்பு பரிசு திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஒகாயா இவி (Okaya EV) அதன் புகழ்பெற்ற ஃபாஸ்ட் (Fasst) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் இரு புதிய வேரியண்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய வேரியண்டுகள் எஃப்2பி (Fasst F2B) மற்றும் எஃப்2டி (Fasst F2T) ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் […]

The post சலுகைகளுடன் அறிமுகமானது ஒகாயாவின் இரண்டு பட்ஜெட்விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் first appeared on .

]]>

இந்த தீபாவளி பண்டிகையில் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா இவி (Okaya EV) வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக குறைந்த விலை இ-ஸ்கூட்டரையும், சிறப்பு பரிசு திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஒகாயா இவி (Okaya EV) அதன் புகழ்பெற்ற ஃபாஸ்ட் (Fasst) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் இரு புதிய வேரியண்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய வேரியண்டுகள் எஃப்2பி (Fasst F2B) மற்றும் எஃப்2டி (Fasst F2T) ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஃபாஸ்ட் எஃப்4 வேரியண்டுடன் இந்த இரு புதிய வேரியண்டுகளும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, தற்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பலர் புதிய இருசக்கர வாகனங்களுக்கு தள்ளுபடி வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதையடுத்து ஒகாயா நிறுவனமும் இரு புதுமுக வேரியண்டுகளை அதன் ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் சிறப்பு பரிசு திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

கார், மடிக்கணினி, டிவி, செல்போன், வெள்ளி நாணயம் மற்றும் பரிசு தொகை போன்றவற்றை வழங்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த சிறப்பு பரிசு திட்டம் வரும் 31 அக்டோபர் வரையில் நடைமுறையில் இருக்கும். இதன் அறிமுக எஃப்2பி வேரியண்டின் விலை ரூ. 89,999 எனவும், எஃப்2டி வேரியண்டிற்கு ரூ. 84,999 எனவும் விலையை நிர்ணயித்துள்ளது ஒகாயா நிறுவனம்.

இந்நிலையில், முன்னதாக ரூ. 89,999 விற்பனைக்குக் கிடைத்து வந்த எஃப்4 வேரியண்டின் விலையை நிறுவனம் தற்போது ரூ. 1.09 லட்சமாக உயர்த்தியிருக்கின்றது. இந்த விலையேற்றம் முன்னதாகவே செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒகாயா நிறுவனம் எஃப்4 வேரியண்டைக் காட்டிலும் எஃப்2பி மற்றும் எஃப்2டி வேரியண்டுகளில் குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக்கையே பயன்படுத்தியிருக்கின்றது.

இரண்டிலும் 2.2 kWh LFP பேட்டரி பேக்கையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 70 முதல் 80கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இதேபோல், மோட்டார் விஷயத்திலும் இரண்டு வேரியண்டுகளிலும் 2000 வாட் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இதே திறனை வெளியேற்றக் கூடியதாகவே ஃபாஸ்ட் எஃப்4 இருக்கின்றது. ஆனால், இதில் 4.4 kWh LFP பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 140 முதல் 160 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இந்த அதிக ரேஞ்ஜ் திறனின் காரணத்தின் காரணத்தினாலேயே ஃபாஸ்ட் எஃப்4 அதிக விலையைக் கொண்டதாக இருக்கிறது.

இதைவிட சற்று குறைவான விலையில் மின் வாகன பிரியர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ஒகாயா நிறுவனம் ஃபாஸ்ட் மாடலில் இரு புதிய வேரியண்டுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. நிறுவனத்தின் இந்த தயாரிப்புகளை பஜாஜ் பின்சர்வ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முன்னணி வங்கிகளின் கடன் திட்டத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி இன்னும் சில வங்கிகளுடன் ஒகாயா இணைந்துள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நிதியுதவி கிடைக்கம் விதமாக இந்த இணைப்பை அது மேற்கொண்டிருக்கின்றது. நிறுவனம் தற்போது விற்பனையகங்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றது.
2021 வரை 225க்கும் குறைவாக இருந்த விற்பனையகங்கள் தற்போது 550க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. இந்த அனைத்து ஷோரூம்களிலும் இந்த புதிய வேரியண்டுகள் உட்பட இதன் மற்ற வாகனங்களையும் வாங்க முடியும்.

The post சலுகைகளுடன் அறிமுகமானது ஒகாயாவின் இரண்டு பட்ஜெட்விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் first appeared on .

]]>