oneplus 10 pro https://www.91mobiles.com/tamil Thu, 15 Dec 2022 08:07:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2022ன் சக்திவாய்ந்த டாப் 10 மொபைல்கள்! https://www.91mobiles.com/tamil/top-10-most-powerful-smartphone-models-ranking-in-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-10-most-powerful-smartphone-models-ranking-in-2022 Thu, 15 Dec 2022 08:07:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4313 டாப் 10 2022 ஆம் ஆண்டின் டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன்களைப் (Top 10 Most Powerful Smartphone Models 2022) பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதில் சுவாரசியம் என்னவென்றால், இதில் மிகவும் சக்தி வாய்ந்த போன்களாக பட்டியலில் முன்னிலையில் உள்ளவை அதிகம் விற்பனையாகாத மாடல்கள் தான். காரணம், இவை விலை அதிகம் என்பது ஒரு பக்கம் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிராண்ட்களை (smartphones brand) மக்கள் அதிகம் கவனிக்கவில்லை என்று சொல்லலாம். இவை […]

The post 2022ன் சக்திவாய்ந்த டாப் 10 மொபைல்கள்! first appeared on .

]]>
டாப் 10

2022 ஆம் ஆண்டின் டாப் 10 பவர்புல் ஸ்மார்ட்போன்களைப் (Top 10 Most Powerful Smartphone Models 2022) பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதில் சுவாரசியம் என்னவென்றால், இதில் மிகவும் சக்தி வாய்ந்த போன்களாக பட்டியலில் முன்னிலையில் உள்ளவை அதிகம் விற்பனையாகாத மாடல்கள் தான். காரணம், இவை விலை அதிகம் என்பது ஒரு பக்கம் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிராண்ட்களை (smartphones brand) மக்கள் அதிகம் கவனிக்கவில்லை என்று சொல்லலாம். இவை தான் இந்த 2022 ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த பவர்புல் மான்ஸ்டர்கள்.

10. Xiaomi 12 Pro 5G

இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி மற்றும் சிறந்த டிஸ்பிளேவை வழங்கியுள்ளதினால் டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் இடம்பிடித்துள்ளது. இது தவிர இதன் பிராசஸர் மற்றும் கேமரா அம்சமும் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

09. iQOO 9T 5G

இந்த iQOO 9T 5G சாதனம் அதிக மதிப்பெண்களை இதன் சிறந்த பிராசஸருக்காக (Best processor smartphone) வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இதன் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி அம்சங்களும் சிறந்த மதிப்பெண்களை வாங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9வது இடத்தில் இடம்பிடித்துள்ளது.

08. Motorola Edge 30 Ultra

இந்த Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி ஆயுள் (Best battery smartphone) அம்சத்தில் மார்க்கை குவித்துள்ளது. இது தவிர சிறந்த டிஸ்பிளே மற்றும் சிறந்த கேமரா அம்சத்தை வழங்கிய சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக இந்த மாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது 8வது இடத்தை பிடித்துள்ளது.

07. Samsung Galaxy Z Fold 4

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமான Samsung Galaxy Z Fold 4 டிவைஸ் நமது பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இது மிகப்பெரிய டிஸ்பிளே மற்றும் பிராசஸர் தரத்தில் அதிக மதிப்பெண்களை பெற்று இந்த பெஸ்ட் போல்டபில் ஸ்மார்ட்போன் (Best Foldable Smartphone) சாதனமாக இடம்பிடித்துள்ளது.

06. Black Shark 5 Pro

மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்கள் என்று பார்க்கையில் இந்த Black Shark 5 Pro அதிகப்படியான AnTuTU மதிப்பெண்களுடன் 6வது இடத்தில் கெத்தாக நிற்கிறது. சிறந்த சிப்செட் மற்றும் தரமான தயாரிப்பிற்காக இந்த ஸ்மார்ட்போன் அதிக மதிப்பெண்களை குவித்துள்ளது. இது பெஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன் (Best gaming smartphone) மாடலாகவும் இடப்பிடித்துள்ளது.

05. Oppo Find X5 Pro

சிறந்த கேமரா (Best camera smartphone).. சிறந்த டிஸ்பிளே (Best display smartphone).. சிறந்த டிசைன் என்று பல ரவுண்ட்களில் (Best All Rounder Smartphone) அதிக மதிப்பெண்களை பெற்று Oppo Find X5 Pro ஸ்மார்ட்போன் 5வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதன் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால் பலர் இந்த போனை வாங்க தவறிவிட்டார்கள்

04. OnePlus 10 Pro

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் தரமான கேமரா அம்சங்களுடன் அதிகப்படியான ரசிகர் மதிப்பெண்களை பெற்றுள்ளது. இந்த டிவைஸ் 4வது இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இதன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பிந்திய வாடிக்கையாளர் சேவையும் சிறப்பாக அமைந்துள்ளது.

03. Asus ROG 6

இந்த ஸ்மார்ட்போனை 3வது இடத்தில் இருப்பது பலருக்கும் வியப்பாக இருக்க கூடும். ஆனால், இந்த 2022 ஆம் ஆண்டின் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் பட்டியலில் (Best Performance Smartphone) அதிகப்படியான AnTuTu மதிப்பினை பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சிப்செட், சிறந்த பெர்பார்மென்ஸ், சிறந்த கேமரா மாற்று பேட்டரி என்று ஆல்ரவுண்டராக இது டிவைஸ் முன்னிலையில் உள்ளது. புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.!

02. Google Pixel 7 Pro

வழக்கம் போல் Apple மற்றும் Google இடையிலான போட்டியில் சிறந்த யூசர் அனுபவத்தை (Best User Experience Smartphone) வழங்கி, டிசைனில் மட்டும் சொதப்பிய காரணத்தினால் Google Pixel 7 Pro இந்த பட்டியலில் 2வது இடத்திற்கு சென்றுவிட்டது. ஆப்பிள் போன் உடன் ஒப்பிடுகையில் இதன் டிசைன் மிகவும் பெரிதாகவும், அதிக கணம் கொண்டதாகவும் அமைந்துவிட்டது.

01. Apple iPhone 14 Pro Max

சிறந்த டிசைன் (Best design smartphone), சிறந்த பாதுகாப்பு, சிறந்த டிஸ்பிளே சிறந்த கேமரா மற்றும் சிறந்த வயர்லெஸ் சார்ஜிங் என்று எல்லா ரவுண்டிலும் வெற்றி பெற்று Apple iPhone 14 Pro Max முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது. வழக்கம் போல ஆப்பிள் டிசைன் சிம்பிள் ஆக அமைக்கப்பட்டு மக்களின் ஈர்ப்பை பெற்று அதிக மதிப்பெண்களை லுக் பிரிவிலும் திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களை தவறவிட்ட போன்கள்!

இந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் போக, இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களும் மிக நெருக்கமான போட்டியில் 10 இடங்களை தவறவிட்டுள்ளன. இருப்பினும், இந்த மாடல்களுடன் நேரடி போட்டியில் களமிறங்கிய Asus ZenFone 9, Mi 12T Pro, Red Magic 7, Vivo X80, Samsung S22 Ultra, Xiaomi 12S Ultra, Sony Xperia 1 IV, Motorola G82, Samsung Galaxy Z Flip 4 ஆகிய மாடல்களும் சிறந்த பவர்புல் அம்சங்களுடன் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2022ன் சக்திவாய்ந்த டாப் 10 மொபைல்கள்! first appeared on .

]]>
ஒன் ப்ளஸ் போன் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. https://www.91mobiles.com/tamil/new-smartphone-2022-oneplus-11-pro-expected-launch-this-year-end-powered-by-snapdragon-8-gen-2-soc/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-smartphone-2022-oneplus-11-pro-expected-launch-this-year-end-powered-by-snapdragon-8-gen-2-soc Fri, 09 Sep 2022 13:47:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2208 ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 10T ஆனது ஒரு மாதத்திற்கு முன்பு தான் – ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் மற்றும் ‘மின்னல் வேக” பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகமானது. ஆனால் 10டி மாடலின் பாஸ்ட் சார்ஜிங்கை விட வேகமானது எது தெரியுமா? ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன் அறிமுகங்கள் தான்! ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும், அதுவும் இந்த 2022 ஆம் ஆண்டுக்குள்ளேயே வெளியாகும் என்கிற […]

The post ஒன் ப்ளஸ் போன் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. first appeared on .

]]>

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 10T ஆனது ஒரு மாதத்திற்கு முன்பு தான் – ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் மற்றும் ‘மின்னல் வேக” பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகமானது. ஆனால் 10டி மாடலின் பாஸ்ட் சார்ஜிங்கை விட வேகமானது எது தெரியுமா? ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன் அறிமுகங்கள் தான்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும், அதுவும் இந்த 2022 ஆம் ஆண்டுக்குள்ளேயே வெளியாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10டி போன்ற மாடல்களை வாங்காமல் அடுத்த மாடலுக்காக காத்திருக்கலாமா? வேண்டாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒன்ப்ளஸ்ஸின் அடுத்த மாடல்.. கண்டிப்பாக OnePlus 10 ஆக இருக்காது! ஏனெனில் இந்த 2022-லேயே அறிமுகமாகும் என்று கூறப்படும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon 8 Gen 2 SoC-ஐ பேக் செய்யும் என்பது போல் தெரிகிறது! ஆக வரப்போகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக ப்ரோ மாடலாகத்தான் இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 10 மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை.

ஏனென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 11 சீரீஸ் மாடல்களை சற்றே முன்னதாக அறிமுகம் செய்வதில், அதிக ஆர்வம் காட்டுவது போல் தெரிகிறது; அதுவும் Snapdragon 8 Gen 2 உடன்! ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் 10 மாடலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தால், நீங்கள் ஏமாற்றம் அடைய அதிக வாய்ப்பு இருக்கிறது!

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றும் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழியாக கிடைத்த தகவலின்படி, இந்நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 11 ப்ரோ என்று அழைக்கப்படலாம் மற்றும் அது நவம்பர் மாதத்திலேயே கூட அறிமுகம் செய்யப்படலாம். ஆக ஒன்பிளஸ் 10 ப்ரோ அல்லது ஒன்பிளஸ் 10டி போன்ற மாடல்களை வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இருந்தாலும் கூட, கொஞ்சம் பொறுமை காக்கவும்; எதிர்பார்க்கப்படுவது போல ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடல் ஆனது, இந்த ஆண்டே அறிமுகமானால், பேசாமல் அதையே வாங்கி விடலாம் அல்லவா?

அப்படி என்றால்அப்போ OnePlus 10T சுமாரான போன்-ஆ? இல்லவே இல்லை! 10-க்கு 8 மதிப்பெண்கள் வாங்கும் அளவிற்கு OnePlus 10T ஒரு வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தான். இருந்தாலும் கூட, அதில் சில குறைகளும் உள்ளன. ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் கேமரா குவாலிட்டி சராசரியாகவே உள்ளது. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங், ஐபி ரேட்டிங், eSIM ஆதரவு போன்றவைகளும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்களொரு தீவிரமான ஒன்பிளஸ் ரசிகர்/ ரசிகை என்றால் 10டி மாடலில், அலெர்ட் ஸ்லைடரை கண்டிப்பாக ‘மிஸ்’ செய்வீர்கள்!

அதேசமயம் விமர்சகர்களால் கூட OnePlus 10T ஸ்மார்ட்போனின் “வேகமான” பெர்ஃபார்மென்ஸ், பிரகாசமான டிஸ்பிளே, எக்கச்சக்கமான ரேம் மற்றும் ஸ்டோரேஜை பாராட்டாமல் இருக்க முடியாது! போதாக்குறைக்கு இது நல்ல பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனாகவும் உள்ளது; கூடவே சூப்பர்-குவிக் சார்ஜிங் ஆதரவு வேற! ஒட்டுமொத்தமாக 10டி மாடலை “கொடுக்குற காசுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போன்” என்றே கூறலாம்!

The post ஒன் ப்ளஸ் போன் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. first appeared on .

]]>
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 விலைக்குறைப்பு! https://www.91mobiles.com/tamil/latest-2022-flagship-smartphone-oneplus-10-pro-get-rs-5000-price-cut-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=latest-2022-flagship-smartphone-oneplus-10-pro-get-rs-5000-price-cut-in-india Wed, 17 Aug 2022 09:47:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1666 இந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? விலை குறைப்புக்கு பின்னரும் கூட இதை நம்பி வாங்கலாமா? அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன?பார்க்கலாம்! ஒன்பிளஸின் 2022 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமான OnePlus 10 Pro மாடல் தான் ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. ஆம்! இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த இரண்டுமே ரூ.5,000 என்கிற […]

The post ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 விலைக்குறைப்பு! first appeared on .

]]>

இந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? விலை குறைப்புக்கு பின்னரும் கூட இதை நம்பி வாங்கலாமா? அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன?பார்க்கலாம்!

ஒன்பிளஸின் 2022 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமான OnePlus 10 Pro மாடல் தான் ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. ஆம்! இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த இரண்டுமே ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

OnePlus 10 Pro பழைய விலை vs புதிய விலை

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது – அது 8GB+128GB மற்றும் 12GB+256GB ஆகும். முன்னதாக 8ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.66,999 க்கும் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.71,999 க்கும் விற்பனையாகி வந்தது. இனி விலைக் குறைப்புக்கு பிறகு – முறையே ரூ.61,999 மற்றும் ரூ.66,999 க்கும் விற்பனை செய்யப்படும். இது வல்கானிக் பிளாக் மற்றும் எமரால்டு ஃபாரஸ்ட் என்கிற 2 நிறத் தேர்வுகளில் கிடைக்கும்.

சலுகைகள்

இருக்கிறது! OnePlus 10 Pro-வை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்குவதாக இருந்தால், 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.6,000 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ மூலமாகவும் வாங்கலாம். இவை தவிர ஒன்பிளஸ் அப்கிரேட் புரோகிராமின் (upgraded program) கீழ் ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடல் ஆனது முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 9 ப்ரோவை விட மிகவும் தேவையான மேம்படுத்தல்களை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். எப்படி பார்த்தாலும் இது ஒரு நல்ல, தரமான ஸ்மார்ட்போன் தான். OnePlus 9 Pro உடன் ஒப்பிடும்போது, OnePlus 10 Pro 5G ஆனது வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட பெரிய பேட்டரி, சற்றே அதிக திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, அதிக 5G பேண்டுகளுடன் கூடிய சக்திவாய்ந்த சிப்செட், சிறந்த செல்ஃபி கேமரா மற்றும் அழகான வடிவமைப்பை பெற்று இருக்கிறது.

எல்லாவற்றை விட முக்கியமாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் ஐபோன் 13 மாடலின் பேஸிக் வேரியண்ட்-ஐ விட ஒன்பிளஸ் 10 ப்ரோவின் டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை குறைவாக உள்ளது (இப்போது இன்னும் குறைவு).

முக்கிய அம்சங்கள்

  • 6.7 அங்குல Quad HD+ Fluid AMOLED டிஸ்ப்ளே (120Hz)
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 12
  • ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
  • 48MP மெயின் + 50MP அல்ட்ரா-வைட் + 8MP டெலிஃபோட்டோ
  • 32MP செல்ஃபி கேமரா
  • 80W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 50 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
  • 5000mAh பேட்டரி.

The post ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 விலைக்குறைப்பு! first appeared on .

]]>