oneplus Z2 https://www.91mobiles.com/tamil Tue, 21 Feb 2023 05:24:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஒன்பிளஸ் 11R 5ஜி மொபைலை முன்பதிவு செய்தால் ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் இலவசம்! https://www.91mobiles.com/tamil/oneplus-11r-5g-pre-order-starts-in-india-from-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oneplus-11r-5g-pre-order-starts-in-india-from-today Tue, 21 Feb 2023 05:06:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5949 ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை தொடர்ந்து, மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனின் முன்பதிவும் இன்று துவங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முன்.. இது மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போனை எங்கே முன்பதிவு செய்வது? ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இதை முன்பதிவு செய்யும் போது கிடைக்கும் சலுகைகள் என்ன […]

The post ஒன்பிளஸ் 11R 5ஜி மொபைலை முன்பதிவு செய்தால் ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் இலவசம்! first appeared on .

]]>

Highlights

  • ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) போனின் முன்பதிவு இன்று (21.02.2023) துவங்கி இருக்கிறது.
  • இந்த போனை முன்பதிவு செய்யும் போது ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை தொடர்ந்து, மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனின் முன்பதிவும் இன்று துவங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முன்.. இது மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போனை எங்கே முன்பதிவு செய்வது? ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இதை முன்பதிவு செய்யும் போது கிடைக்கும் சலுகைகள் என்ன என்பதைப்  பார்க்கலாம்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியன்று அறிமுகமான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மாடலானது, ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை போல ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அல்ல. ஆனாலும் கூட இது சில நல்ல அம்சங்களுடன் வரும் ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

உங்களால் ஒன்பிளஸ் 11 5ஜி போன்ற பிளாக்ஷிப் ஸ்மாட்போனை வாங்க முடியாது என்றால், அதைவிட விலை குறைவான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மாடலானது நிச்சயம் ஒரு நல்ல தேர்வாகவே இருக்கும்!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி அம்சங்கள்

  • இது எச்டிஆர்10 பிளஸ், 2772×1240 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
  • இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 1 SoC) மூலம் இயக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மற்றும் பல ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் தான் உள்ளது.
  • இது 16ஜிபி வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.
  • இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜென்ஓஎஸ் 13 (OxygenOS 13) உடன் வருகிறது.
  • இது 100W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது
  • கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.
  • இது 4K 60fps வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. செல்ஃபிகளுக்காக இதில் 16எம்பி சென்சார் உள்ளது.

விலை மற்றும் ப்ரீ-ஆர்டர் விவரங்கள்

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கேலக்டிக் சில்வர் மற்றும் சோனிக் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் வெளியாகியுள்ளது. மேலும் இது இரண்டு ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் கீழ் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

பேஸிக் மாடலான 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும், ஹை-எண்ட் மாடலான 16ஜிபி+256ஜிபி ஆப்ஷன் ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த மொபைலை அமேசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்ததளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் ஒன்பிளஸ் வலைத்தளம் வழியாக முன்பதிவு செய்ய முடியும்.

 

சலுகை

ஒன்பிளஸ் நிறுவனம் அசத்தலான முன்பதிவு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறையில் ஒன்பிளஸ் 11R வாங்குவோருக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி

ஒன்பிளஸ் 11R 5ஜி மாடலை வாங்கும் சிட்டி வங்கி பயனர்களும் ரூ. 1000 தள்ளுபடி பெறலாம்
முன்னணி கிரெடிட் கார்டு மூலம் ஒன்பிளஸ் வலைத்தளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் அமேசானில் ஒன்பிளஸ் 11 வாங்குவோருக்கு அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது
ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் தங்களது சாதனங்களில் இருந்தபடி ஒன்பிளஸ் வலைத்தளம் அல்லது ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மூலம் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

The post ஒன்பிளஸ் 11R 5ஜி மொபைலை முன்பதிவு செய்தால் ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் இலவசம்! first appeared on .

]]>