ookla https://www.91mobiles.com/tamil Wed, 21 Dec 2022 07:17:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இணைய வேகத்தில் இந்தியாவிற்கு எந்த இடம்? https://www.91mobiles.com/tamil/ookla-internet-speedtest-global-index-for-november-2022-got-released/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ookla-internet-speedtest-global-index-for-november-2022-got-released Wed, 21 Dec 2022 07:17:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4447 இணையவேகத்தைப் பொருத்தவரை இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பது வெளியாகி இருக்கிறது. நெட்வொர்க் இன்டெலிஜென்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி இன்சைட்களை (network intelligence and connectivity insights) வழங்கும் நிறுவனமான Ookla மூலம் நவம்பர் 2022-க்கான இன்டர்நெட் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் (Internet Speedtest Global Index) இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பீட்டெஸ்ட் ரேங்கிங் (Speedtest ranking) பட்டியலில் இந்தியா என்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம். Ookla’s Speedtest Global Index என்றால் என்ன? Ookla’s Speedtest […]

The post இணைய வேகத்தில் இந்தியாவிற்கு எந்த இடம்? first appeared on .

]]>

இணையவேகத்தைப் பொருத்தவரை இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பது வெளியாகி இருக்கிறது. நெட்வொர்க் இன்டெலிஜென்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி இன்சைட்களை (network intelligence and connectivity insights) வழங்கும் நிறுவனமான Ookla மூலம் நவம்பர் 2022-க்கான இன்டர்நெட் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் (Internet Speedtest Global Index) இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பீட்டெஸ்ட் ரேங்கிங் (Speedtest ranking) பட்டியலில் இந்தியா என்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம்.

Ookla’s Speedtest Global Index என்றால் என்ன?

Ookla’s Speedtest Global Index ஆனது மாதாந்திர அடிப்படையில் உலகம் முழுவதும் மொபைல் மற்றும் நிலையான பிராட்பேண்ட் வேகத்தைத் தரவரிசைப்படுத்துகிறது. உலகளாவிய குறியீட்டிற்கான தரவு ஒவ்வொரு மாதமும் ஸ்பீட்டெஸ்ட்டைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் இணைய செயல்திறனைச் சோதிக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் சோதனைகளில் இருந்து வருகிறது. நிலையான பிராட்பேண்ட், மொபைல் வைஃபை முடிவுகளும் இதில் அடங்கும்.

இந்தியாவின் இடம்

நவம்பர் 2022-க்கான புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை Ookla தற்போது வெளியிட்டுள்ளது. ஓக்லாவின் கூற்றுப்படி, நவம்பர் மாதத்தில், இந்தியா 18.26 Mbps சராசரி மொபைல் பதிவிறக்க வேகத்தைப் (median mobile download speed) பதிவு செய்துள்ளது. இது கடந்த அக்டோபர் 2022 இல் பதிவு செய்யப்பட்ட 16.50 Mbps ஐ விட சிறந்தது. இதன் மூலம், இந்தியா அதன் உலகளாவிய தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இதன் மூலம், இந்தியா 113 இடத்தில் இருந்து 105 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த சராசரி நிலையான பிராட்பேண்ட் வேகத்தில் (median fixed broadband speed) உலக அளவில் தரவரிசையில் இந்தியா ஒரு இடத்தைக் குறைத்து, அக்டோபரில் 79வது இடத்தில் இருந்து இப்போது 80வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. நிலையான சராசரி பதிவிறக்க வேகத்தில் இந்தியாவின் செயல்திறன் அக்டோபரில் 48.78 ஆக இருந்து நவம்பரில் 49.09 Mbps ஆக சிறிது அதிகரித்துள்ளது.

முதல் இடம்

நவம்பர் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸின் (Speedtest global index) படி, உலகளாவிய சராசரி மொபைல் வேகத்திற்கான தரவரிசையில் கத்தார் முன்னணியில் 1வது இடத்தில் உள்ளது. அதேசமயம், செனகல் உலகளவில் தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறியுள்ளது. நிலையான பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில், சிலி முதலிடத்தில் உள்ளது. மேலும் பாலஸ்தீனம் மற்றும் பூட்டான் உலகளவு தரவரிசையில் 14 இடங்களை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா & சீனாவுக்கு எந்த இடம்?

இந்தியாவில் 5G அக்டோபரில் அறிமுகமானது, அக்டோபரில் மொபைல் மற்றும் நிலையான பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில் இந்தியா 13 நகரங்களில் அதிக பட்சமாக பதிவு செய்தது. இந்தியா அதிக சராசரி மொபைல் பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது செப்டம்பரில் 13.87 Mbps இலிருந்து அக்டோபரில் 16.50 Mbps வரை உயர்ந்துள்ளது. ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) இரண்டும் அக்டோபர் 2022 இல் இந்தியாவில் 5G சேவையை அறிமுகம் செய்தன. இந்த இரு நிறுவனங்களும் நாடு முழுவதும் தங்கள் தடத்தைச் சீராக வளர்த்து வருகின்றன. ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) நாடு முழுவதும் சுமார் 13 நகரங்களில் கிடைக்கிறது. இந்த 5ஜி பட்டியலில் சிம்லா சமீபத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) சேவை தற்போது பீட்டாவின் கீழ் கிடைக்கிறது. பீட்டா 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. அடுத்த காலாண்டிற்குள் இந்த 2 நிறுவனங்களும் இன்னும் அதிகமான இடங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.

இறுதியில், நவம்பர் மாத புள்ளிகளை வைத்து பார்க்கையில் இந்தியா உலக தரவரிசையில், மொபைல் பதிவிறக்க வேகத்தின் அடிப்படையில் 105 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் சீன 6வது இடத்திலும், பாக்கிஸ்தான் 114வது இடத்திலும் உள்ளது. அதேபோல், பிராட்பேண்ட் வேகத்தின் உலக அளவு தரவரிசையில் இந்தியா 80வது இடத்திலும், சீனா 2வது இடத்திலும் மற்றும் பாக்கிஸ்தான் 150வது இடத்திலும் உள்ளது.

The post இணைய வேகத்தில் இந்தியாவிற்கு எந்த இடம்? first appeared on .

]]>
ஜியோ Vs ஏர்டெல் – 5ஜி வேகத்துல எது பெஸ்ட்? https://www.91mobiles.com/tamil/latest-speed-test-report-from-ookla-says-jio-5g-download-speed-is-far-better-than-airtel-5g-plus/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=latest-speed-test-report-from-ookla-says-jio-5g-download-speed-is-far-better-than-airtel-5g-plus Fri, 11 Nov 2022 05:16:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3547 ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் வேகத்தை பரிசோதித்துப் பார்த்ததில் வெளியான தகவல்கள் சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு ரிலையன்ஸ் ஜியோ (Realiance Jio) வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களும் கூட கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை, சமீபத்திய ஓக்லா ரிப்போர்ட் (OOKLA Report) வழியாக அம்பலமாகி உள்ளது! அதென்ன உண்மை? அதென்ன ரிப்போர்ட்? ஓக்லா என்றால் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்! ஓக்லா என்றால் என்ன? ஓக்லா […]

The post ஜியோ Vs ஏர்டெல் – 5ஜி வேகத்துல எது பெஸ்ட்? first appeared on .

]]>

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் வேகத்தை பரிசோதித்துப் பார்த்ததில் வெளியான தகவல்கள் சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு ரிலையன்ஸ் ஜியோ (Realiance Jio) வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களும் கூட கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை, சமீபத்திய ஓக்லா ரிப்போர்ட் (OOKLA Report) வழியாக அம்பலமாகி உள்ளது! அதென்ன உண்மை? அதென்ன ரிப்போர்ட்? ஓக்லா என்றால் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஓக்லா என்றால் என்ன?

ஓக்லா (Ookla) என்பது கனெக்ஷன் டேட்டா ரேட் (Connection data rate) மற்றும் லேடன்சி (Latency) போன்ற இன்டர்நெட் அக்சஸ் பெர்ஃபார்மென்ஸ் மெட்ரிக்ஸை (Internet access performance metrics) “இலவசமாக” பகுப்பாய்வு செய்யும் ஒரு இணைய சேவை (Web Service ) ஆகும். ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் – இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களின் உண்மையான இன்டர்நெட் வேகம் தொடர்பான தரவுகளை புட்டுப்புட்டு வைக்கும் “ஒரு டெலிகாம் வில்லன்” என்றால் – அது ஓக்லா தான்!

ஏர்டெல் வேகம் என்ன?

சமீபத்தில் வெளியான ஓக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய கையோடு, ஏர்டெல் யூசர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்றே கூறலாம்! ஏனென்றால் லேட்டஸ்ட் ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது, ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி வேகத்துடன் ஒப்பிடும் போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி வேகமானது மிகவும் சிறப்பாக உள்ளது என்கிற உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது!

ஸ்பீட் டெஸ்ட்

வெளியான ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையின்படி, சி-பேண்டைப் பயன்படுத்தும் போது ஜியோ 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகம் – 606.53Mbps மற்றும் 875.26Mbps வரை இருந்தது. அதேசமயம் ஏர்டெல் 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகமானது 365.48 Mbps – 716.85 Mbps-ஐ மட்டுமே அடைய முடிந்தது. அதனை தொடர்ந்து ஓக்லாவானது, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்தது.

4 முக்கிய நகரங்களில் கிடைத்த சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்த போதிலும் கூட ஏர்டெல் நிறுவனமானது பின்னடைவைத்தான் சந்தித்துள்ளது. ஜியோவும் ஏர்டெல்லும் என்ன அளவிலானா சராசரி 5ஜி வேகத்தை பதிவு செய்துள்ளது என்கிற விவரங்கள் இதோ:

டெல்லியில் – 600Mbps (ஜியோ) 197.98Mbps (ஏர்டெல்)
மும்பையில் – 514.38Mbps (ஜியோ) 271.01Mbps (ஏர்டெல்)
கொல்கத்தாவில் – 482.02Mbps (ஜியோ) 33.83Mbps (ஏர்டெல்)
வாரணாசியில் – 485.22Mbps (ஜியோ) 516.57Mbps (ஏர்டெல்)

ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது, வாரணாசியை தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் ஜியோ தான் சிறந்த 5ஜி பதிவிறக்க வேகத்தை கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

காரணம் என்ன?

நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது ஜியோ வாங்கிய அதிக ஸ்பெக்ட்ரம் தான் இதற்கு காரணம்! அதனால் தான் ஜியோவின் 5ஜி வேகம் மிகவும் சிறப்பாக உள்ளது அதுமட்டுமின்றி, 700MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைக் கொண்ட ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ மட்டும் தான்!

ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் சி-பேண்ட்டை மட்டுமே கொண்டுள்ளனர்! இதனால், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் செயல்திறன் ஒப்பீட்டளவில் சற்றே குறைவானதாக இருக்கும்! எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 700MHz என்பது லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஆகும், இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உட்புற சிக்னல் ஊடுருவலை (indoor signal penetration) குறைக்கிறது. எனவே, ஜியோ நிறுவனம் சி-பேண்டைப் பயன்படுத்தும் போது, அதன் செயல்திறன் நன்றாக இருக்கும்.

The post ஜியோ Vs ஏர்டெல் – 5ஜி வேகத்துல எது பெஸ்ட்? first appeared on .

]]>