Oppo A15s https://www.91mobiles.com/tamil Fri, 02 Sep 2022 08:32:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ1500 தள்ளுபடியில் ஒரு பட்ஜெட் போன்! https://www.91mobiles.com/tamil/price-cut-alert-best-budget-smartphone-oppo-a15s-now-available-under-rs-10000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=price-cut-alert-best-budget-smartphone-oppo-a15s-now-available-under-rs-10000 Fri, 02 Sep 2022 08:32:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2018 கனமான ஸ்மார்ட்போன் இம்சையில் இருந்து விடுபட உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று மொபைல் கேஸை கழட்டி போடலாம். அல்லது மிகவும் லேசான ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கலாம்! அப்படி ஒரு போன் இருக்கா? இருக்கிறது! Oppo நிறுவனத்திடம் ஸ்லிம் அன்ட் ஸ்லீக் டிசைனில் வெறும் 175 கிராம் எடையுடன் வரும், ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தற்போது அந்த ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு சலுகையும் கிடைக்கிறது. அதென்ன மாடல்? […]

The post ரூ1500 தள்ளுபடியில் ஒரு பட்ஜெட் போன்! first appeared on .

]]>

கனமான ஸ்மார்ட்போன் இம்சையில் இருந்து விடுபட உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று மொபைல் கேஸை கழட்டி போடலாம். அல்லது மிகவும் லேசான ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கலாம்! அப்படி ஒரு போன் இருக்கா? இருக்கிறது!

Oppo நிறுவனத்திடம் ஸ்லிம் அன்ட் ஸ்லீக் டிசைனில் வெறும் 175 கிராம் எடையுடன் வரும், ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தற்போது அந்த ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு சலுகையும் கிடைக்கிறது.

அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்! அதுதான் Oppo A15s ஸ்மார்ட்போன்! சமீபத்தில் ஒப்போவின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன Oppo A96 மாடலின் விலையை குறைத்த கையோடு, இந்நிறுவனம் அதன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ15எஸ் மாடலின் விலையையும் குறைத்து இருக்கிறது.

ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன், கடந்த 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது ரூ.1,500 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது!

பழைய விலை Vs புதிய விலை

ஒப்போ 15s ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது: ஒன்று – 4GB + 64GB; மற்றொன்று 4GB + 128GB. இந்த இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் முறையே ரூ.11,490 மற்றும் ரூ.12,490 க்கு கிடைத்தன. ஆனால் ரூ.1,500 என்கிற விலைக் குறைப்பிற்கு பின்னர், 64ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.9,990 க்கும், 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.10,990 க்கும் விற்கப்படுகிறது. இந்த புதிய விலை ஒப்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Amazon ஆகிய இரண்டிலுமே இருக்கிறது!

அம்சங்கள்

ஒப்போ ஏ15எஸ் ஆனது விலைக்கு ஏற்ற ஸ்மார்ட்போனா? இல்லையா? என்பதை புரிந்துகொள்ள, முதலில் நாம் அதன் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளலாம். பட்ஜெட் விலையில் வரும் ஒப்போ ஏ15எஸ் ஆனது MediaTek Helio P35 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 60Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.52 அங்குல அளவிலான HD+ டிஸ்பிளே, வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேமராக்கள்

ஒப்போ A15s ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 13MP மெயின் (f/2.2) கேமரா + 2MP மேக்ரோ (f/2.4) சென்சார் + 2MP டெப்த் (f/2.4) சென்சார் உள்ளன. இதன் ரியர் கேமராவானது, கலர் பில்டர் மோட், பனோரமா மோட், டைம்லேப்ஸ் மோட் போன்ற கேமரா மோட்களையும் வழங்குகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 5MP செல்ஃபி (f/2.4) கேமரா உள்ளது. இது AI பியூடிப்பை வசதியைக் கொண்டுள்ளது!

இயங்குதளம் & பேட்டரி

ஒப்போ ஏ 15எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ColorOS 7.2-இன் கீழ் இயங்குகிறது. இதில் 4100mAh பேட்டரி இருக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, Oppo A15s-இன் எடை 175 கிராம் ஆகும். மேற்கண்ட அம்சங்களின் வழியாக உங்களுக்கு எதெல்லாம் போதும்; எதெல்லாம் போதாது என்கிற முடிவுக்கு வந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

The post ரூ1500 தள்ளுபடியில் ஒரு பட்ஜெட் போன்! first appeared on .

]]>