Oppo A56s https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 13:00:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000mAh பேட்டரியோடு ரூ.13,300 விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த ஒப்போ! https://www.91mobiles.com/tamil/oppo-launched-a-5g-smartphone-for-rs-13-300/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-launched-a-5g-smartphone-for-rs-13-300 Wed, 11 Jan 2023 05:09:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4868 ஒப்போ நிறுவனம் Oppo A56s என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 2021 இல் அறிமுகம் செய்யப்பட்ட Oppo A56 5G ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போனில் உயர் ரெஃப்ரஷிங் ரேட், டைமன்சிட்டி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உடனான பெரிய எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம். டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் 6.56 அங்குல எல்சிடி HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் […]

The post 5000mAh பேட்டரியோடு ரூ.13,300 விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த ஒப்போ! first appeared on .

]]>

ஒப்போ நிறுவனம் Oppo A56s என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 2021 இல் அறிமுகம் செய்யப்பட்ட Oppo A56 5G ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போனில் உயர் ரெஃப்ரஷிங் ரேட், டைமன்சிட்டி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உடனான பெரிய எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.56 அங்குல எல்சிடி HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 269ppi பிக்சல் அடர்த்தி மற்றும் NTSC வண்ண வரம்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 600 nits உச்ச பிரகாச வரம்பைக் கொண்டுள்ளது. Oppo A56s ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் டிஸ்ப்ளே வாட்டர் டிராப் நாட்ச் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

சிப்செட்

Oppo A56s ஸ்மார்ட்போனானது 5ஜி திறன் ஆதரவு கொண்ட ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது 6nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களைக் கொண்டிருக்கிறது இந்த Oppo A56s ஸ்மார்ட்போன். இது தவிர இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மைக்ரோ SDஐ வாங்கிப் பொருத்தி மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கேமரா

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, Oppo A56s ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 16MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி கேமரா இடம்பெற்று இருக்கிறது.

கனெக்டிவிட்டி

மொபைலின் பாதுகாப்பு அம்சத்துக்கு இதன் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் சிம், மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் என பல இணைப்பு ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

பேட்டரி

10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.

விலை

இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1099 (தோராயமாக ரூ.13,300) எனவும் 8 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1299 (தோராயமாக ரூ.15,650) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய அறிமுகம்

Oppo A56s ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. ஒப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக திட்டத்தை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒப்போவின் இந்த புதிய 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்யும்பட்சத்தில் நல்ல வரவேற்பை பெற வாய்ப்புள்ளது.

The post 5000mAh பேட்டரியோடு ரூ.13,300 விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த ஒப்போ! first appeared on .

]]>