oppo A77s https://www.91mobiles.com/tamil Fri, 07 Oct 2022 07:31:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சிறந்த அம்சங்களுடன் வெளியானது ஒப்போ A77s https://www.91mobiles.com/tamil/oppo-a77s-launched-in-india-with-8gb-ram-5000mah-battery-price-offers/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-a77s-launched-in-india-with-8gb-ram-5000mah-battery-price-offers Fri, 07 Oct 2022 07:31:24 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2846 இந்தியாவில் Oppo A77s என்ற மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை Oppo நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் சன்செட் ஆரஞ்ச் மற்றும் ஸ்டாரி பளாக் என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். Oppo A77s Oppo A77s ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் வசதியைக் கொண்டிருக்கிறது. […]

The post சிறந்த அம்சங்களுடன் வெளியானது ஒப்போ A77s first appeared on .

]]>

இந்தியாவில் Oppo A77s என்ற மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை Oppo நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் சன்செட் ஆரஞ்ச் மற்றும் ஸ்டாரி பளாக் என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Oppo A77s

Oppo A77s ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் வசதியைக் கொண்டிருக்கிறது. இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.56 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 50 MP AI டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 5000 mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை இன்று முதல் (அக்டோபர் 7) வாங்க முடியும்.

விலை

புதிதாக அறிமுகமாகி இருக்கும் Oppo A77s ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வெளியாகி இருக்கிறது. இது ரூ.17,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. அக்டோபர் 7 (இன்று) முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேஷ்பேக் சலுகை

Oppo A77s ஸ்மார்ட்போனை 10 சதவீத கேஷ்பேக் சலுகை உடன் வாங்கலாம். இதற்கு தகுதியான கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் குறித்த விவரத்தை விற்பனையின் போது நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

Oppo A77s ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயங்கும். இதில் டூயல் நானோ சிம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.56 அங்குல எச்டி+ (720×1,612 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது. மிட் ரேன்ஜ் விலைக்கேற்ற பக்கா சிப்செட் இதுவாகும்.

கேமரா

Oppo A77s ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமராவும் 2 எம்பி மோனோக்ரோம் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.

சேமிப்புத்திறன்

இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி சேமிப்புத்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை இன்னும் அதிகரித்துக் கொள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

கனெக்டிவிட்டி

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வெர்ஷன் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவு இருக்கிறது.

சார்ஜிங்

Oppo A77s ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இடம்பெற்றுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட்போனில் மிட் ரேன்ஜ் போனுக்கு தேவையான அனைத்து அம்சமும் இருக்கிறது.

The post சிறந்த அம்சங்களுடன் வெளியானது ஒப்போ A77s first appeared on .

]]>