oppo f21s pro https://www.91mobiles.com/tamil Thu, 15 Sep 2022 11:49:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மைக்ரோ லென்ஸ் கேமராவோடு வெளியாகி இருக்கிறது Oppo F21s pro https://www.91mobiles.com/tamil/oppo-f21s-pro-series-launched-in-india-price-specifications-sale-details-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-f21s-pro-series-launched-in-india-price-specifications-sale-details-revealed Thu, 15 Sep 2022 11:49:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2347 ஒப்போவில் இருந்து இன்று வெளியான இரண்டு போன்களில் ஒன்று Oppo f21s pro. இது ஒரு 4ஜி போனாக வெளியாகி இருக்கிறது. இதிலுள்ள அம்சங்கள், விலை விவரங்களைப் பார்க்கலாம். கேமரா Oppo f21s pro மொபைலின் சிறப்பு அம்சமாக கேமராக்களைச் சொல்லலாம். இதன் பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் கொண்ட AI Portrait கேமரா இருக்கிறது. 30 மடங்கு வரை பெரிதாக்கி எடுக்கக்கூடிய ஒரு மைக்ரோ லென்ஸ் இருக்கிறது. கூடவே 2 மெகா பிக்சலுக்கான ஒரு மேக்ரோ கேமரா […]

The post மைக்ரோ லென்ஸ் கேமராவோடு வெளியாகி இருக்கிறது Oppo F21s pro first appeared on .

]]>

ஒப்போவில் இருந்து இன்று வெளியான இரண்டு போன்களில் ஒன்று Oppo f21s pro. இது ஒரு 4ஜி போனாக வெளியாகி இருக்கிறது. இதிலுள்ள அம்சங்கள், விலை விவரங்களைப் பார்க்கலாம்.

கேமரா

Oppo f21s pro மொபைலின் சிறப்பு அம்சமாக கேமராக்களைச் சொல்லலாம். இதன் பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் கொண்ட AI Portrait கேமரா இருக்கிறது. 30 மடங்கு வரை பெரிதாக்கி எடுக்கக்கூடிய ஒரு மைக்ரோ லென்ஸ் இருக்கிறது. கூடவே 2 மெகா பிக்சலுக்கான ஒரு மேக்ரோ கேமரா இருக்கிறது. இவை தவிர இதன் முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது சோனியின் IMX709 என்ற ப்ளாக்‌ஷிப் செல்ஃபி சென்சார் ஆகும். இதன் வழியே குறைவான வெளிச்சத்திலும் தரமான செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முடியும். இதற்கென Selfie HDR என்ற அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது. சிறந்த Bokeh effect உடன் கூடிய Portrait புகைப்படங்களை எடுக்க ‘Bokeh Flare Prtrait’ என்ற அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. கூடவே இதில் ப்ளாஷ் வசதியும் இருக்கிறது. வீடியோவைப் பொருத்தவரை, இருபக்க கேமரா மூலமாகவும் 1080p@30 fps வரையிலான வீடியோவை எடுக்க முடியும்.

அம்சங்கள்

இந்த போன் 6.43 அங்குல FHD+ (2400 x 1080) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. 90Hz refresh rate, 180Hz Touch sampling rate-ஐ கொண்டிருக்கும் இந்த மொபைலின் ஸ்கிரீன் ரேஷியோ 90.80%. கூடவே 409PPI அடர்த்தியோடு அதிகபடசமாக 600nits வரையிலான Brightness உடன் வெளியாகி உள்ளது. இந்த Oppo f21s pro 5G மொபைல் 5ஜி ஆதரவுடன் வருகிறது. இதில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 680 என்றா ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது Adreno 610@1100MHz உடன் வருகிறது. இதில் பிங்கர் ப்ரிண்ட் மற்றும் facial recognition வசதி உள்ளது. இந்த Oppo f21s pro மொபைல் ColorOS 12.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் கேமராக்களைச் சுற்றி இரண்டு ஆர்பிட் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை அழைப்பு வந்தாலோ, அல்லது மேசேஜ்கள் போன்ற நோட்டிபிகேஷன்கள் வந்தாலோ ஒளிரும் படி வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.

ரேம் & சேமிப்புத்திறன்

இந்த Oppo f21s pro மொபைல் 8GB LPDDR4X RAM, 128GB சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இந்த சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். இது தவிர OTG ஆதரவும் இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.1, வைஃபை 5, டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. NFC ஆதரவு இல்லை.

பேட்டரி

182கிராம் எடையுடன் வெளியாகி இருக்கும் இந்த Oppo f21s pro மொபைலில் 4500 mAh பேட்டரி 33W fast charge வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த Oppo f21s pro மொபைல் டான்லைட் கோல்டு (Dawnlight Gold), ஸ்டார்லைட் ப்ளாக் (Starlight Black) ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத் திறனுடன் வெளியாகி இருக்கும் இந்த Oppo f21s pro மொபைலின் விலை ரூ22,999 ஆகும்.

The post மைக்ரோ லென்ஸ் கேமராவோடு வெளியாகி இருக்கிறது Oppo F21s pro first appeared on .

]]>
ஒப்போ F21s pro உடன் பண்டிகையை கொண்டாடுங்கள் https://www.91mobiles.com/tamil/oppo-will-introduce-new-oppo-f21s-pro-budget-phone-in-india-during-the-coming-festive-season/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-will-introduce-new-oppo-f21s-pro-budget-phone-in-india-during-the-coming-festive-season Sat, 10 Sep 2022 07:15:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2219 இந்த வருடத்திற்கான பண்டிகை காலம் நெருங்கிவிட்டதைத் தொடர்ந்து, இப்போதே பல சலுகைகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. குறிப்பாக, பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டம் தீட்டிவருகின்றன. அந்த வரிசையில், இப்போது OPPO நிறுவனம் OPPO F21s Pro என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது சீன பிராண்ட்டான ஒப்போ, இந்த புதிய ஸ்மார்ட்போனின் டீஸர்களை சில சிறப்பம்ச தகவல்களுடன் வெளியிட்டுள்ளது. Oppo F21s […]

The post ஒப்போ F21s pro உடன் பண்டிகையை கொண்டாடுங்கள் first appeared on .

]]>

இந்த வருடத்திற்கான பண்டிகை காலம் நெருங்கிவிட்டதைத் தொடர்ந்து, இப்போதே பல சலுகைகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. குறிப்பாக, பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டம் தீட்டிவருகின்றன. அந்த வரிசையில், இப்போது OPPO நிறுவனம் OPPO F21s Pro என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது

சீன பிராண்ட்டான ஒப்போ, இந்த புதிய ஸ்மார்ட்போனின் டீஸர்களை சில சிறப்பம்ச தகவல்களுடன் வெளியிட்டுள்ளது. Oppo F21s Pro இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்ட Oppo F21 மற்றும் F21 Pro உடன் இணையும் புதிய மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு Oppo F19s அறிமுகப்படுத்தப்பட்டதையும் நாம் மறக்க முடியாது.

புதிய OPPO F21s Pro ஆனது Oppo F21 Pro போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஸ்டார்லைட் பிளாக் நிறத்துடன், கிலோவிங் டான்லைட் கோல்டு நிறத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டான்லைட் கோல்ட் வண்ண வேரியண்ட் வெளிச்சத்தில் காண்பிக்கும் போது ஜொலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்போ F21s ப்ரோ டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் உடன் வருகிறது. மேலும் இது பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

இந்த புதிய ஒப்போ F21s ப்ரோ ஸ்மார்ட்போனில் 2MP மைக்ரோஸ்கோபிக் லென்ஸ் மற்றும் 64MP பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான Oppo F21 Pro ஆனது, 90Hz உடன் 6.43 அங்குல AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் உடன் கூடுதலாக 5ஜிபி வரை விரிவாக்கக்கூடியது விர்ச்சுவல் ரேம் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 33W (SUPERVOOC) சார்ஜ்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. Oppo F21s Pro ஆனது Amazon India, நிறுவனத்தின் ஆன்லைன் பார்ட்னர்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளின் மூலம் கிடைக்கும். ஒப்போவிடமிருந்து மிக விரைவில் இந்த மொபைல் குறித்த முழு விவரங்களுடன் அறிமுக தேதி வெளியிடப்படும். கூடவே இதன் விற்பனை தேதியும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பண்டிகையை முன்னிட்டு பல சிறந்த சலுகையும் மாபெரும் தள்ளுபடியை வழங்கும் என்பதனால் புது சாதனங்கள் வாங்க இது தான் சரியான நேரம். உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்க ஐடியா இருந்தால், இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையைத் தவறவிடாதீர்கள்.

The post ஒப்போ F21s pro உடன் பண்டிகையை கொண்டாடுங்கள் first appeared on .

]]>