Oppo find X6 https://www.91mobiles.com/tamil Thu, 16 Mar 2023 10:38:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OPPO Find X6 சீரிஸ் மார்ச் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும் என விளம்பர போஸ்டர் வெளியாகி இருக்கிறது https://www.91mobiles.com/tamil/oppo-find-x6-series-launch-date-confirmed-march-21-in-china/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-find-x6-series-launch-date-confirmed-march-21-in-china Thu, 16 Mar 2023 10:38:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6940   OPPO Find X6 சீரிஸ்ஸ்மார்ட்போன்கள் குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இப்போது ஒப்போ நிறுவனம் இந்த ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. Oppo Find X6 தொடர் அடுத்த மாதம் மார்ச் 21, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று சீனாவின் சோசியல் மீடியா ஹேண்டில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய அறிமுகம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த போன் விரைவில் சீனாவைத் தவிர மற்ற […]

The post OPPO Find X6 சீரிஸ் மார்ச் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும் என விளம்பர போஸ்டர் வெளியாகி இருக்கிறது first appeared on .

]]>

Highlights

  • OPPO Find X6 தொடரின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது
  • இந்த சீரிஸில், OPPO Find X6 மற்றும் Find X6 Pro மாடல்கள் மார்ச் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும்.
  • OPPO விளம்பர போஸ்டரில் இந்த போனின் வடிவமைப்பு காட்டப்பட்டுள்ளது

 

OPPO Find X6 சீரிஸ்ஸ்மார்ட்போன்கள் குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இப்போது ஒப்போ நிறுவனம் இந்த ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. Oppo Find X6 தொடர் அடுத்த மாதம் மார்ச் 21, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று சீனாவின் சோசியல் மீடியா ஹேண்டில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய அறிமுகம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த போன் விரைவில் சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கும் வரும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

 

OPPO Find X6 சீரிஸில் வெளியாகும் போன்கள்

OPPO Find X6 சீரிஸில், OPPO Find X6, OPPO Find X6 Pro மற்றும் OPPO Find X6 Lite மாடல் போன்கள் வரக்கூடும். வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் போது கூடவே OPPO Find X6 சீரிஸ்க்கான விளம்பர போஸ்டர் மற்றும் வீடியோவையும் OPPO வெளியிட்டுள்ளது. இது மொபைலின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

 

மேலே உள்ள விளம்பரத்தில் குறிப்பிடப்படுவது போல், Oppo Find X6 தொடர் சீனாவில் மார்ச் 21 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 14:00 மணிக்கு (காலை 11:30 IST) அறிமுகப்படுத்தப்படும். அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த மொபைலோடு கூடவே, Oppo Pad 2 வரும் என்று நம்பப்படுகிறது. இந்த போஸ்டரில் பெரிஸ்கோப் கேமராவிற்கான ஸ்லாட் தெளிவாகக் காணப்படுகிறது. இது 100x ஜூம் வரை வழங்கக்கூடியது. மேலும், மொபைலின் கேமரா தொகுதியைச் சுற்றி ஒரு பெரிய வளையம் இருக்கும். மொபைலின் பின்புறத்தில் இருக்கும் லெதர் ஃபினிஷிங் தெரிகிறது. இதோடு கூடவே, ஒரு விளம்பர வீடியோவில் கேமரா தொகுதியின் நடுவில் ஹாசல்பிளாட் பிராண்டிங்கின் லோகோ காணப்படுகிறது.

இது தவிர, பிராண்ட் ஒரு விளம்பர வீடியோ மூலம் மொபைலின் ‘நைட் கேமரா’வின் திறன்களை டீஸ் செய்துள்ளது. OPPO Find X6 Pro ஆனது சிறந்த மூன் ஷாட்களை எடுப்பது மட்டுமல்லாமல், ஷாட்டில் உள்ள மற்ற பொருள்கள் மற்றும் மனிதர்களையும் சிறந்த முறையில் படமெடுக்கும்.

 

Oppo Find X6 Pro (கசிந்த) அம்சங்கள்

OPPO Find X6 Pro ஆனது 6.8 அங்குல அளவில் 2K 120Hz புதுப்பிப்பு வீத AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது தவிர, இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வழங்கப்படும். கேமரா விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், 50MP + 50MP + 50MP மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 32MP செல்ஃபி ஸ்னாப்பர் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கடைசியாக, USB டைப்-சி சார்ஜிங் போர்ட்டில் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரியை இந்த மொபைல் கொண்டு இருக்கும்.

The post OPPO Find X6 சீரிஸ் மார்ச் 21 அன்று அறிமுகப்படுத்தப்படும் என விளம்பர போஸ்டர் வெளியாகி இருக்கிறது first appeared on .

]]>
ஒருஅங்குல ஹாசல்பேட் கேமரா சென்சாருடன் வருகிறதா ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 6? https://www.91mobiles.com/tamil/oppo-find-x6-upcoming-flagship-smartphone-spotted-with-hasselblad-branding/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-find-x6-upcoming-flagship-smartphone-spotted-with-hasselblad-branding Fri, 16 Dec 2022 11:12:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4362 கண்ணைக் கவரும் வடிவமைப்பு மற்றும் சுவாரஸ்யமான அம்சங்களை வழங்கும் நோக்கத்துடன், உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான OPPO வரவிருக்கும் அதன் புதிய OPPO Find X6 சீரிஸ் இல் சில அட்டகாசமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த போனின் லீக் படங்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. இந்த  OPPO Find X6 லீக் ரெண்டர் புகைப்படங்கள் மூலம் இதன் தோற்றம், இதில் இருக்கும் சில அம்சங்கள் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட்போன் என்று வந்து விட்டாலே அதன் […]

The post ஒருஅங்குல ஹாசல்பேட் கேமரா சென்சாருடன் வருகிறதா ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 6? first appeared on .

]]>

கண்ணைக் கவரும் வடிவமைப்பு மற்றும் சுவாரஸ்யமான அம்சங்களை வழங்கும் நோக்கத்துடன், உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான OPPO வரவிருக்கும் அதன் புதிய OPPO Find X6 சீரிஸ் இல் சில அட்டகாசமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த போனின் லீக் படங்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. இந்த  OPPO Find X6 லீக் ரெண்டர் புகைப்படங்கள் மூலம் இதன் தோற்றம், இதில் இருக்கும் சில அம்சங்கள் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ளது.

ஸ்மார்ட்போன் என்று வந்து விட்டாலே அதன் வடிவமைப்பிற்கும் அதில் உள்ள அம்சங்களுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக கேமராவுக்கு. எத்தனை மெகா பிக்சல்? அதன் சென்சார் எந்த பிராண்ட், என்னென்ன கேமரா அம்சங்கள் உள்ளன என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டனர்.

அதுபோல், ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு என்று வந்துவிட்டாலே, அது அந்த போனின் ரியர் பேனலில் உள்ள கேமரா பம்ப் இல் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிறிய இடத்தில் மேற்கொள்ளப்படும் சில வித்தியாசமான மாற்றங்கள் மூலம் தான், ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனக்கான ஒரு தனி அடையாளத்தைச் சம்பாதிக்கின்றன. இப்படி சமீபத்தில், தனக்கென்று ஒரு தனி அடையாளத்தைத் தேடிக்கொண்ட ஸ்மார்ட்போன் தான் ஒப்போ ஃபைண்ட் X6.

வடிவமைப்பு

இது முந்தைய OPPO Find X5 தொடரிலிருந்து வேறுபட்ட வடிவமைப்பைப் பெற்றுள்ளது. டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் வழங்கிய ரெண்டரில், பின்புறத்தில் ஒரு பெரிய கேமரா பம்பில் ஹாசல்பிளாட் பிராண்டிங்கை OPPO Find X6 புகைப்படம் காண்பிக்கிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, OPPO Find X6 சாதனம் கிளாஸ் அல்லது செராமிக் கொண்ட வெள்ளை நிற பின்புறத்துடன் கூடிய பிரீமியம் தோற்றமுடைய டிசைனை கொண்டுள்ளது. பின்புறம் ஒரு பளபளப்பான பூச்சு கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இதில் பிரமாண்டமான, செவ்வக கேமரா ஐலேண்ட் உள்ளே, மூன்று கேமராக்களுடன் கூடுதலாக டேப்லெட் வடிவ டூயல் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

தோற்றம்

இது ஒரு பெரிஸ்கோப் லென்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது கேமராவிற்கும், இந்தச் சாதனத்தில் LED ப்ளாஷ் இருக்கும் இடத்திற்கும் இடையே “Powered by MariSilicon” என்று எழுதப்பட்ட வாக்கியங்களை நம்மால் பார்க்க முடிகிறது. கேமரா பம்ப் உடன் இணைக்கப்பட்ட செவ்வகத் தட்டில், “Co-engineered with” என்ற வாக்கியத்துடன் ஹாசல்பிளாட் (Hasselblad) பிராண்டிங் உள்ளது.

கேமரா

OPPO Find X6 ஆனது பிரைமரி கேமரா இடத்தில் 1-இன்ச் கொண்ட 50MP சென்சார், அதற்கு அடுத்ததாக 50MP அல்ட்ரா-வைட் மாட்யூல் மற்றும் 32MP சென்சார் பெரிஸ்கோப் கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 8+ Gen 2 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோ மாடல் 2023 முதல் காலாண்டில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, Hasselblad பிராண்டிங் கேமரா அமைப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக OnePlus திகழ்கிறது. இப்போது வரை OnePlus உடன் கிடைத்த சிறந்த கேமரா அமைப்பு இனி Oppo-விலும் கிடைக்கப் போகிறது. இதனால் கேமரா போன் ரசிகர்களிடையே இந்த மொபைல் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

The post ஒருஅங்குல ஹாசல்பேட் கேமரா சென்சாருடன் வருகிறதா ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 6? first appeared on .

]]>