poco C50 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 04:42:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ. 6249-க்கு 5000mAh பேட்டரியோட வெளியான போக்கோ சி50 https://www.91mobiles.com/tamil/poco-c50-is-now-available-for-rs-6249-as-introductory-price-in-flipkart-offers/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-c50-is-now-available-for-rs-6249-as-introductory-price-in-flipkart-offers Wed, 11 Jan 2023 06:14:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4874 நேற்று (11-01-2023) பகல் 12 மணி அளவில் Flipkart இணையதளத்தில் போக்கோ சி50 (POCO C50) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் Redmi-யின் A1+ ஸ்மார்ட்போனின் ரீ-ப்ராண்டட் (Rebrand) செய்யப்பட்ட மொபைல் ஆகும். டிஸ்பிளே 6.52 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே (IPS LCD Display), 269 பிபிஐ பிக்ஸல் டென்சிட்டி (269ppi Pixel density), 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 400 நீட்ஸ் ஒளிர்வு திறன் (400 nits […]

The post ரூ. 6249-க்கு 5000mAh பேட்டரியோட வெளியான போக்கோ சி50 first appeared on .

]]>

நேற்று (11-01-2023) பகல் 12 மணி அளவில் Flipkart இணையதளத்தில் போக்கோ சி50 (POCO C50) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் Redmi-யின் A1+ ஸ்மார்ட்போனின் ரீ-ப்ராண்டட் (Rebrand) செய்யப்பட்ட மொபைல் ஆகும்.

டிஸ்பிளே

6.52 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே (IPS LCD Display), 269 பிபிஐ பிக்ஸல் டென்சிட்டி (269ppi Pixel density), 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 400 நீட்ஸ் ஒளிர்வு திறன் (400 nits Brightness) ஆகிய அம்சங்கள் கொண்ட HD+ திரையுடன் இந்த போக்கோ சி50 ஸ்மார்ட் போன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் உள்ள செல்ஃபி கேமரா வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop notch) கொண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்தத் திரை 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவுடன் (Contrast Ratio) வருகிறது.

சிப்செட்

ஆண்ட்ராய்டு 12 GO இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போன் குவாட்கோர் மீடியா டெக் ஹீலியோ A22 பிராசசர் (Quadcore MediaTek Helio A22 Processor) கொண்டு செயல்படுகிறது. மேலும், இதில் ஐஎம்ஜி பவர் விஆர் கிராபிக்ஸ் யூனிட்டும் (IMG PowerVR Graphics Unit ) உள்ளது.

மெமரி

இது 3 GB LPDDR4X RAM மற்றும் 32 GB இஎம்எம்சி (eMMC) சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD card) பயன்படுத்தி மேலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதவிர மைக்ரோ எஸ்டி கார்டை பொருத்துவதற்கான பிரத்தியேக ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா

இது 8 MP பிரைமரி கேமரா மற்றும் டெப்த் சென்சார் (Depth sensor) கொண்டு வரும் இந்த போக்கோ சி50 ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ கால் பேசுவதற்கும் ஏதுவாக 5 MP முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இது 10W அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 5000mAh பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட் போன் இயங்குகிறது. சார்ஜிங் செய்வதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வசதியாக மைக்ரோ யுஎஸ்பி போர்ட்டும் (micro USB port) இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

3.5 mm ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சிங்கிள் ஸ்பீக்கர் (Single speaker) கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் பின்பக்கம் கைரேகை ஸ்கேனரும் உள்ளது. ராயல் ப்ளூ (Royal Blue) மற்றும் கண்ட்ரி கிரீன் (Country Green) என்று இரு நிறங்களில் அறிமுகமாகியுள்ள இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும். மிகவும் லைட் வெயிட்டாக (Light weight) அறிமுகம் செய்யப்பட்டுள்ள எந்த ஸ்மார்ட் போனில் டூயல் சிம் (Dual Sim), 4ஜி, 2.4 GHz Wi-Fi, ஜிபிஎஸ் (GPS), கிளோனஸ் (Glonass) மற்றும் பேய்டுவோ (BeiDuo) ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

விலை

இந்த இரண்டு வேரியண்டுகளில் 2 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 6499-க்கும் 3 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 7299-க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக Flipkart இணையதளத்தில் விற்பனையாகி வரும் இந்த ஸ்மார்ட் போன் அறிமுக விலையாக 2 GB RAM கொண்ட வேரியன்ட் ரூ. 6249-க்கும், 3 GB RAM கொண்ட வேரியண்ட் ரூ. 6999-க்கும், விற்பனையாகி வருகிறது.

Realme C30, டெக்னோ பாப் 6 ப்ரோ (Tecno Pop 6 Pro), ரெட்மி 6 (Redmi 6) ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களுக்கு போட்டியாக அறிமுகமாகியுள்ள இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போன் மலிவான விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சலுகை சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்

The post ரூ. 6249-க்கு 5000mAh பேட்டரியோட வெளியான போக்கோ சி50 first appeared on .

]]>
ரூ.6499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போக்கோ சி50. https://www.91mobiles.com/tamil/poco-c50-launched-for-just-rs-6499-flipkart-sale-starts-from-january-10-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-c50-launched-for-just-rs-6499-flipkart-sale-starts-from-january-10-2023 Wed, 04 Jan 2023 04:27:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4675 இந்தியாவில் நேற்று வெறும் ரூ.6499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போக்கோ சி50 (POCO C50) ஸ்மார்ட்போன். இது கடந்த ஆண்டு உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி40 (Poco C40) ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும்! முக்கிய அம்சங்கள்! போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது விலையை மீறிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில், இந்த மொபைல் ஒரு பெரிய எச்டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா […]

The post ரூ.6499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போக்கோ சி50. first appeared on .

]]>

இந்தியாவில் நேற்று வெறும் ரூ.6499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போக்கோ சி50 (POCO C50) ஸ்மார்ட்போன்.

இது கடந்த ஆண்டு உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி40 (Poco C40) ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும்!

முக்கிய அம்சங்கள்!

போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது விலையை மீறிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில், இந்த மொபைல் ஒரு பெரிய எச்டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா செட்டப், ஒரு பெரிய பேட்டரி மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவைகளைக் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ் & விலை

போக்கோ C50 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 3ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவைகளின் விலை நிர்ணயம் முறையே ரூ.6,499 மற்றும் ரூ.7,299 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கண்ட்ரி கிரீன் (Country Green) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) என்கிற இரண்டு நிறங்களில் வருகிறது.

எங்கு கிடைக்கும்?

போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வருகிற ஜனவரி 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் மீது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு EMI போன்ற சலுகைகள் கிடைக்கும். அறிமுகச் சலுகையாக ஃப்ளிப்கார்ட்டில் ரூ250 தள்ளுபடிக் கூப்பனும் வழங்கப்படும். இதனால் இந்த மொபைலை ரூ.6,249க்கு வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன், 1 வருட வாரண்டியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் இன்-பாக்ஸ் ஆக்சஸெரீஸுக்கு 6 மாத வாரண்டி கிடைக்கும்!

டிஸ்பிளே

டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ சி50 ஸ்மார்ட்போனில், வாட்டர் டிராப் நாட்ச் டிசைனின் கீழ் 6.52 அங்குல அளவிலான டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே HD+ ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ப்ராசஸர்

போக்கோ சி50 ஆனது மீடியாடெக் ஹீலியோ ஏ22 (MediaTek Helio A22) சிப்செட்டை பேக் செய்கிறது. இது 3GB வரையிலான ரேம் மற்றும் 32GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், உங்களுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. அதை பயன்படுத்தி 512ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம்!

 

கேமரா

போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் கேமராக்களை பற்றி பேசும் முன், அதன் ‘லெதர் போன்ற” டிசைனை குறிப்பிட விரும்புகிறோம். இது நிச்சயம் ஒரு நல்ல பிடிமானத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 8MP மெயின் கேமரா + இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில், 5MP செல்ஃபிகேமரா உள்ளது. போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ரியர் மற்றும் செல்ஃபி கேமராக்கள் ஆனது 30fps என்கிற வேகத்தின் கீழ் 1080p வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவைகள் ஆகும்.

பேட்டரி

பேட்டரியை பொறுத்தவரை, இது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது!

ரீபிராண்ட்

இது “முழுக்க முழுக்க” ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆகும். அதாவது இது ஏற்கனவே அறிமுகமாகிய ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்தையும் போக்கோ பிராண்டிங்கின் கீழ் கொடுக்கிறது. அதனால் என்ன.. ரூ.6499-க்கு இவ்வளவு வசதிகள் கிடைக்குதேனு நினைக்கிறவங்க தாராளமா வாங்கலாம்.

The post ரூ.6499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போக்கோ சி50. first appeared on .

]]>
விரைவில் வருகிறது Poco C50 பட்ஜெட்போன் https://www.91mobiles.com/tamil/poco-c50-smartphone-specifications-leaked-online-price-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-c50-smartphone-specifications-leaked-online-price-features Mon, 17 Oct 2022 10:31:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3075 போக்கோ நிறுவனம் இந்தியாவில் புதிய Poco C50 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில், சிறந்த அம்ப்சங்களுட்ன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. போக்கோ சி50 இந்த புதிய போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இதில் இருக்கும் விரிவாகப் பார்க்கலாம். புதிய போக்கோ சி50 ஸ்மார்ட்போன் 6.52 அங்குல எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. […]

The post விரைவில் வருகிறது Poco C50 பட்ஜெட்போன் first appeared on .

]]>

போக்கோ நிறுவனம் இந்தியாவில் புதிய Poco C50 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில், சிறந்த அம்ப்சங்களுட்ன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

போக்கோ சி50

இந்த புதிய போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இதில் இருக்கும் விரிவாகப் பார்க்கலாம். புதிய போக்கோ சி50 ஸ்மார்ட்போன் 6.52 அங்குல எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

அம்சங்கள்

120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போன்.

சிப்செட்

இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போக்கோ போன் அறிமுகமாகும்.

பேட்டரி

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி மொபைலின் பின்பக்கத்தில் 8எம்பி ரியர் கேமராவும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 5எம்பி செல்ஃபி கேமராவும் இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பட்ஜெட் விலையில் வெளியாகிறது இந்த போக்கோ சி50 போன்.

இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். போக்கோ எஃப்4 5ஜி போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதே சிப்செட் வசதி ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனில் கூட உள்ளது.குறிப்பாக Genshin Impact, Asphalt 9 கேம்களை இயக்க அருமையாக பயன்படுகிறது இந்த சிப்செட்.

இந்த மொபைல் 6.67 அங்குல ஃபுல் HD+ (1,080×2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

கேமரா

போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

இயங்குதளம்

MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி போன். மேலும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி போன். எனவே ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post விரைவில் வருகிறது Poco C50 பட்ஜெட்போன் first appeared on .

]]>