poco f5 5G https://www.91mobiles.com/tamil Tue, 09 Jul 2024 07:07:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 POCO F5, POCO X5, M6 Pro மற்றும் பல போன்களுக்கு ரூ. 6,000 வரை தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/poco-f5-x5-m6-pro-price-discounts-deals/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-f5-x5-m6-pro-price-discounts-deals Thu, 23 Nov 2023 06:19:50 +0000 https://www.91mobiles.com/tamil/?p=12055   POCO இந்தியா தனது பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்குத் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த விற்பனை நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை கிடைக்கும். POCO இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்கும் போது தள்ளுபடிகள் கிடைக்கின்றன. POCO X5, POCO M6 Pro, POCO C50 மற்றும் பல மாடல்களுக்கு ரூ.6,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. சலுகைகள் தொடர்பான முழு விவரங்களை கீழே பார்க்கலாம். POCO ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடியில் மாதிரி மாறுபாடு தற்போதைய விலை […]

The post POCO F5, POCO X5, M6 Pro மற்றும் பல போன்களுக்கு ரூ. 6,000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>
 

Highlights

  • POCO X5, POCO M6 Pro, POCO C50 மற்றும் பல ஃபோன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த தள்ளுபடி விலைகள் நவம்பர் 30 வரை செல்லுபடியாகும்.
  • தள்ளுபடிகள் ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே செல்லுபடியாகும்.

POCO இந்தியா தனது பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்குத் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த விற்பனை நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை கிடைக்கும். POCO இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்கும் போது தள்ளுபடிகள் கிடைக்கின்றன. POCO X5, POCO M6 ProPOCO C50 மற்றும் பல மாடல்களுக்கு ரூ.6,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. சலுகைகள் தொடர்பான முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

POCO ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடியில்

மாதிரி மாறுபாடு தற்போதைய விலை தள்ளுபடி ஒப்பந்த விலை
POCO C50 2ஜிபி+32ஜிபி ரூ.6,499 ரூ.1,100 ரூ.5,399
3ஜிபி+32ஜிபி ரூ.7,299 ரூ.1,500 ரூ.5,799
POCO C51 4ஜிபி+64ஜிபி ரூ.8,499 ரூ.2,250 ரூ.6,249
6ஜிபி+128ஜிபி ரூ.8,999 ரூ.1,800 ரூ.7,199
POCO C55 4ஜிபி+64ஜிபி ரூ.9,499 ரூ.2,500 ரூ.6,999
6ஜிபி+128ஜிபி ரூ.10,999 ரூ.3,000 ரூ.7,999
POCO M5 4ஜிபி+64ஜிபி ரூ.12,499 ரூ.4,500 ரூ.7,999
6ஜிபி+128ஜிபி ரூ.14,499 ரூ.4,500 ரூ.9,999
POCO M6 Pro 4ஜிபி+64ஜிபி ரூ.10,999 ரூ 750 ரூ.10,249
4ஜிபி+128ஜிபி ரூ.11,999 ரூ 750 ரூ.11,249
6ஜிபி+128ஜிபி ரூ 12v999 ரூ 750 ரூ.12,249
POCO X5 5G 6ஜிபி+128ஜிபி ரூ.18,999 ரூ.4,500 ரூ.14,499
8ஜிபி+256ஜிபி ரூ.20,999 ரூ.6,000 ரூ.14,999
POCO X5 Pro 6ஜிபி+128ஜிபி ரூ.22,999 ரூ.4,500 ரூ.18,499
8ஜிபி+256ஜிபி ரூ.24,999 ரூ.5,500 ரூ.19,499
POCO F5 5G 12ஜிபி+256ஜிபி ரூ.33,999 ரூ.4,000 ரூ.29,999
8ஜிபி+256ஜிபி ரூ.29,999 ரூ.4,000 ரூ.25,999
POCO M4 5G 4ஜிபி+64ஜிபி ரூ.12,999 ரூ.2,500 ரூ.10,499
6ஜிபி+128ஜிபி ரூ.14,999 ரூ.2,500 ரூ.12,499
POCO M4 Pro 5G 4ஜிபி+64ஜிபி ரூ.14,999 ரூ.3,500 ரூ.11,499
6ஜிபி+128ஜிபி ரூ.16,999 ரூ.3,500 ரூ.13,499
8ஜிபி+128ஜிபி ரூ.18,999 ரூ.3,500 ரூ.15,499
POCO M4 Pro 6ஜிபி+64ஜிபி ரூ.14,999 ரூ.5,000 ரூ.9,999
6ஜிபி+128ஜிபி ரூ.16,499 ரூ.4,500 ரூ.11,999
8ஜிபி+128ஜிபி ரூ.17,999 ரூ.4,000 ரூ.13,999
POCO X4 Pro 5G 6ஜிபி+128ஜிபி ரூ.19,999 ரூ.4,500 ரூ.15,499
8ஜிபி+128ஜிபி ரூ.21,999 ரூ.4,500 ரூ.17,499

 

இதுவே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள POCO மொபைல்களின் பட்டியல் ஆகும். முன்பே குறிப்பிட்டது போல், இந்த தள்ளுபடிகள் நவம்பர் 30 வரை மட்டுமே. இந்த  தள்ளுபடிகள் ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே செல்லுபடியாகும். நீங்கள் POCO ஃபோனை வாங்க விரும்பினால், இந்த தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

The post POCO F5, POCO X5, M6 Pro மற்றும் பல போன்களுக்கு ரூ. 6,000 வரை தள்ளுபடி! first appeared on .

]]>
இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகிறது POCO F5: நேரம், லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் https://www.91mobiles.com/tamil/poco-f5-launch-india-time-how-to-watch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-f5-launch-india-time-how-to-watch Tue, 09 May 2023 09:51:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8006   POCO அதன் POCO F5 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இது தவிர POCO F5 Pro மொபைலை உலக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 சிப்செட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் POCO F5 ஆகும். இந்த மொபைல் இந்திய நேரப்படி இன்று இரவு 9:30 மணிக்கு (IST) அறிமுகப்படுத்தப்படும். மேலும் வெளியீட்டை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் வழியாக நேரடியாக பார்க்கலாம். விரைவில் வெளியாக இருக்கும் POCO F5 […]

The post இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகிறது POCO F5: நேரம், லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் first appeared on .

]]>

Highlights

  • POCO F5 இன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது
  • சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 சிப்செட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவில் முதல் மொபைல் இதுவாகும்.
  • POCO F5 மொபைலின் சாத்தியமான விலை, அம்சங்கள் & வெளியீட்டு நிகழ்வை லைவில் பார்க்கும் முறை

 

POCO அதன் POCO F5 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இது தவிர POCO F5 Pro மொபைலை உலக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 சிப்செட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் POCO F5 ஆகும். இந்த மொபைல் இந்திய நேரப்படி இன்று இரவு 9:30 மணிக்கு (IST) அறிமுகப்படுத்தப்படும். மேலும் வெளியீட்டை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் வழியாக நேரடியாக பார்க்கலாம்.

விரைவில் வெளியாக இருக்கும் POCO F5 இன் எதிர்பார்க்கப்படும் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம். மேலும் அதன் வெளியீட்டு நிகழ்வை நேரடியாக ஸ்ட்ரீமிங்கை எவ்வாறு பார்க்கலாம் என்பதையும் இப்போது பார்ப்போம்.

POCO F5 வெளியீட்டு நேரம், லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி

POCO F5 வெளியீடு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்திய நேரப்படி இரவு 9:30  மணிக்கு  நேரடியாக ஒளிபரப்பாகும். POCO ஆனது POCO F5 மற்றும் POCO F5 Pro மொபைல்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, வெண்ணிலா POCO F5 மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. உங்களுக்கான உலகளாவிய நிகழ்வு லைவ் ஸ்ட்ரீமிங் URL இதோ:

 

இந்தியாவில் POCO F5 (எதிர்பார்க்கப்படும்) விலை & சலுகை

முந்தைய கசிவுகள் மற்றும் வதந்திகளின்படி, POCO F5 ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பத்திலும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பக விருப்பத்திலும் வெளியிடப்படும் .

அடிப்படை வேரியண்ட் இந்தியாவில் சுமார் ரூ.27,000 விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேவேளையில், டாப்-டையர் வேரியன்ட் ரூ.30,000 ஐ தொடக்கூடும்.

POCO F5க்கு POCO சில அறிமுகச் சலுகைகளை அறிமுகப்படுத்தலாம். இதனால் விலை நிர்ணயம் இன்னும் குறையக்கூடும்.

POCO F5 தற்போது நடைபெற்று வரும் Flipkart Big Savings Days Sale 2023க்கு மத்தியில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் விற்பனையானது சில நாட்கள் கழித்து ஆரம்பிக்கலாம். எனவே மொபைலை வாங்குவதற்கு தற்போதைய சலுகைகள் பொருந்தாது.

POCO F5 (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்

டிஸ்ப்ளே

POCO F5 ஆனது 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் செல்ஃபி கேமராவிற்கான மேல்பக்க மையத்தில்  ஒற்றை பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வெளியாகும் எனக் கூறப்படுகிறது .

 

சிப்செட்

இந்த மொபைல் Snapdragon 7+ Gen 2 செயலியைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

POCO F5 ஆனது 8GB RAM இல் வெளியாகலாம். மேலும் 12GB RAM வேரியண்டிலும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, இந்த மொபைல் 256ஜிபி வரையிலான உள் நினைவகத்துடன் வரும்.

 

இயங்குதளம்

இந்த மொபைலானது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 -அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம் .

 

பேட்டரி

சாதனம் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது .

கேமரா

POCO F5 ஆனது 64MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவில் பேக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

POCO F5 முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Qualcomm Snapdragon 7 Plus Gen 2
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.67 அங்குலம் (16.94 செமீ)
  • பின் கேமரா – 64MP + 8MP + 5MP
  • செல்ஃபி கேமரா – 32MP
  • பேட்டரி – 5500 mAh

The post இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகிறது POCO F5: நேரம், லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் first appeared on .

]]>
NBTC-சான்றிதழைப் பெறுவதால், POCO F5 Pro விரைவில் வெளியிடப்படலாம்! https://www.91mobiles.com/tamil/poco-f5-pro-launch-imminent-nbtc-certified/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-f5-pro-launch-imminent-nbtc-certified Wed, 12 Apr 2023 12:51:39 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7498   POCO F5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதைச் சுற்றியுள்ள வதந்திகள் இப்போது இணையத்தில் உலா வருகின்றன. இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் வெண்ணிலா POCO F5 இன் வருகையை டீஸ் செய்து வரும் நிலையில், உலக சந்தையில் POCO F5 மற்றும் POCO F5 Pro மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. POCO F5 Pro இன்று NBTC சான்றிதழைப் பெற்றுள்ளது. இது இந்த மொபைலின் உடனடி வெளியீட்டைக் குறிக்கிறது. POCO F5 Pro 5G […]

The post NBTC-சான்றிதழைப் பெறுவதால், POCO F5 Pro விரைவில் வெளியிடப்படலாம்! first appeared on .

]]>

Highlights

  • வரவிருக்கும் POCO F5 Pro ஸ்மார்ட்போன் NBTC சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • இதனால் இந்த மொபைலின் வெளியீடு விரைவில் இருக்கலாம்.
  • POCO F5 Pro ஆனது Snapdragon 8+ Gen 1 சிப்செட், 120Hz புதுப்பிப்பு வீதம் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 64MP பிரதான கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

POCO F5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதைச் சுற்றியுள்ள வதந்திகள் இப்போது இணையத்தில் உலா வருகின்றன. இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் வெண்ணிலா POCO F5 இன் வருகையை டீஸ் செய்து வரும் நிலையில், உலக சந்தையில் POCO F5 மற்றும் POCO F5 Pro மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. POCO F5 Pro இன்று NBTC சான்றிதழைப் பெற்றுள்ளது. இது இந்த மொபைலின் உடனடி வெளியீட்டைக் குறிக்கிறது.

மேலே உள்ள ட்வீட்டில் பார்த்தபடி, POCO F5 Pro (POCO 23013PC75G மாதிரி எண் கொண்ட) தாய் NBTC சான்றிதழ் செயல்முறையை முடித்துவிட்டது. இது மொபைலின் வெளியீடு விரைவில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது. கடைசியில் ஜி  என்ற எழுத்து இருப்பதால், இது மொபைலின் உலகளாவிய மாறுபாடு என்பது தெரிய வருகிறது. தொடர்புடைய சான்றிதழ் இணையதளங்களில் இந்த மொபைலின் இந்திய பதிப்பை நாங்கள் தேடினோம்.  ஆனால் அது எங்கும் காணப்படவில்லை. இதற்கு POCO F5 Pro இந்தியாவில் தொடங்கப்படாது அல்லது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரக்கூடும் என்று அர்த்தம். இருப்பினும், முந்தையதிற்கே வாய்ப்புகள் அதிகம்.

 

NBTC சான்றிதழானது மொபைலின் மோனிகரையும், அது 5G மொபைலாக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக, இதன் மாடல் எண்ணானது, இது சீனாவின் Redmi K60 மொபைல் என்பதைக் குறிக்கிறது.

 

POCO F5 Pro (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

POCO F5 Pro ஆனது 6.67 அங்குல FHD+ OLED பேனல் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் . கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த மொபைல் OIS உடன் 64MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP முன் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சாதனத்தின் பேட்டரியைப் பொறுத்தவரை, POCO F5 Pro ஆனது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் . சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 செயலி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது, இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள் சேமிப்புடன் இணைக்கப்படலாம். கடைசியாக, POCO F5 Pro ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 -அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸை துவக்கும் .

 

POCO F5 Pro முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Qualcomm Snapdragon 8 Plus Gen 1
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.67 அங்குலம் (16.94 செமீ)
  • பின் கேமரா – 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 5500 mAh

The post NBTC-சான்றிதழைப் பெறுவதால், POCO F5 Pro விரைவில் வெளியிடப்படலாம்! first appeared on .

]]>
இந்தியாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகமாகிறதா POCO F5 5G? எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன? https://www.91mobiles.com/tamil/poco-f5-launch-date-in-india-exclusive/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-f5-launch-date-in-india-exclusive Mon, 20 Mar 2023 05:37:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6969 POCO இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனான POCO F5 5G பற்றிய பேச்சு  இணையத்தில் சுற்றி வருகிறது. இது அதன் வெளியீடு வெகு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து. இந்நிலையில் நமது ‘91மொபைல்ஸ்’க்கு வரவிருக்கும் இந்த மொபைலின் தற்காலிக வெளியீட்டுத் தேதியைப் பற்றிய தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் கிடைத்துள்ளன. அதன்படி POCO F5 5G இன் இந்திய பதிப்பு 23013PC75I மாடல் எண்ணைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஒரு புதிய ஸ்னாப்டிராகன் […]

The post இந்தியாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகமாகிறதா POCO F5 5G? எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன? first appeared on .

]]>

Highlights

  • மிட்ரேஞ் ஸ்மார்ட்போன் POCO F5 5G ஏப்ரல் 6, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
  • கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட POCO F4 5G மொபைலைத் தொடர்ந்து இந்த POCO F5 5G வருகிறது.
  • POCO F5 5G ஆனது 120Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7+ Gen 2 சிப், 12GB வரை ரேம் மற்றும் பல அம்சங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POCO இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனான POCO F5 5G பற்றிய பேச்சு  இணையத்தில் சுற்றி வருகிறது. இது அதன் வெளியீடு வெகு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து. இந்நிலையில் நமது ‘91மொபைல்ஸ்’க்கு வரவிருக்கும் இந்த மொபைலின் தற்காலிக வெளியீட்டுத் தேதியைப் பற்றிய தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் கிடைத்துள்ளன. அதன்படி POCO F5 5G இன் இந்திய பதிப்பு 23013PC75I மாடல் எண்ணைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஒரு புதிய ஸ்னாப்டிராகன் 7XX தொடர் சிப்செட், 12GB வரை ரேம், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே மற்றும் பல அம்சங்களைக் கொண்டிருக்கும் என வதந்தி பரவுகிறது.

 

POCO F5 5G இந்தியாவில் எப்போது வெளியாகும்?

எங்கள் ஆதாரங்களின்படி, POCO F5 5G வெளியீட்டு தேதி ஏப்ரல் 6 ஆக இருக்கலாம். இந்த தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த மொபைலை POCO வெளியிட இருப்பதாய்த் தெரிகிறது.

 

என்ன விலை

இந்தியாவில் வெளியாகவிருக்கும் POCO F5 5G மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனின் விலை குறித்த எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், வன்பொருள் அம்சங்கள் மற்றும் பரந்த போட்டியைக் கருத்தில் கொண்டு, POCO அதன் போட்டியாளர்களுக்கு இணையாக விலை நிர்ணயம் செய்யும். இதன் முன்னோடியான POCO F4 5G, இந்தியாவில் ரூ.27,999க்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

POCO F5 5G – எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

POCO F5 5G ஆனது ரெட்மி நோட் 12 டர்போவின் மறுபெயரிடப்பட்ட  பதிப்பாக (Rebranded version)  இருக்கும் என்று கூறப்படுகிறது. இது விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. POCO F5 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் , 1,400 nits வரை பிரகாசம், HDR10+ ஆதரவு மற்றும் 1,920Hz PWM (Pulse-width modulation) டிம்மிங்,  6.67 அங்குல் QHD+ AMOLED பேனலைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

​​Redmi Note 12 Turbo புத்தம் புதிய Snapdragon 7+ Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், POCO F5 மொபைலும் அதே சிப்செட்டைப் பெறலாம். POCO F5 மொபைலில் 12GB ரேம் மற்றும் 256GB சேமிப்பகத்தையும் எதிர்பார்க்கலாம். இந்த மொபைல் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 மொபைல் OS உடன் இயங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கேமரா

பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கக்கூடும், மேலும் 50எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் 8எம்பி மற்றும் 2எம்பி செகண்டரி ஷூட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேமரா அமைப்புடன் எல்இடி ப்ளாஷ் இருக்கும். முன்னதாக, POCO F5 5G செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16MP ஷூட்டரைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. POCO F5 5G ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்  மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய 5,500mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகமாகிறதா POCO F5 5G? எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன? first appeared on .

]]>
இணைய வதந்தி: போகோ எஃப்5 போனாக வருகிறதா ரெட்மி கே60? https://www.91mobiles.com/tamil/mysterious-poco-smartphone-spotted-in-online-poco-f5-could-rebranded-version-of-redmi-k60/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mysterious-poco-smartphone-spotted-in-online-poco-f5-could-rebranded-version-of-redmi-k60 Fri, 06 Jan 2023 11:12:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4780 விரைவில் வெளியாக இருக்கும் Poco ஸ்மார்ட்போன் குறித்த முக்கியத் தகவல் ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது. போக்கோவின் புதிய ஸ்மார்ட்போன் ஆனது Poco F5 ஆக இருக்கலாம் எனவும், இது மிட் ரேன்ஜ் ஆண்ட்ராய்ட் போனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு ரெட்மி போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கலாம் என்ற வதந்தியும் உள்ளது. Poco F5 5G புதிய Poco ஸ்மார்ட்போன் ஒன்று சமீபத்தில் IMEI தரவுத்தளத்தில் காணப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த போன் வெளியாகும் எனவும், வெளியாகியுள்ள […]

The post இணைய வதந்தி: போகோ எஃப்5 போனாக வருகிறதா ரெட்மி கே60? first appeared on .

]]>

விரைவில் வெளியாக இருக்கும் Poco ஸ்மார்ட்போன் குறித்த முக்கியத் தகவல் ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது. போக்கோவின் புதிய ஸ்மார்ட்போன் ஆனது Poco F5 ஆக இருக்கலாம் எனவும், இது மிட் ரேன்ஜ் ஆண்ட்ராய்ட் போனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு ரெட்மி போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கலாம் என்ற வதந்தியும் உள்ளது.

Poco F5 5G

புதிய Poco ஸ்மார்ட்போன் ஒன்று சமீபத்தில் IMEI தரவுத்தளத்தில் காணப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த போன் வெளியாகும் எனவும், வெளியாகியுள்ள தகவலில் இந்த போன் மறுபெயரிடப்பட்ட ரெட்மி கே சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

போக்கோவாக களமிறங்கும் ரெட்மி

இந்த மர்மமான போக்கோ ஸ்மார்ட்போன் மற்றொரு சான்றிதழ் தளத்திலும் தோன்றி இருக்கிறது. அதிலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. POCO 23013PC75G என்ற மாடல் எண்ணுடன் தோன்றி இருக்கும் POCO F5 5G, சமீபத்தில் சிங்கப்பூர் IMDA சான்றிதழ் ஆணையத்தில் சான்றளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குறியீட்டு எண் ஆனது போக்கோ ஸ்மார்ட்போனை ரெட்மி உடன் ஏறத்தாழ இணைக்கும் வகையில் இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

Poco F5 5G எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். Poco F5 5G ஆனது மறுபெயரிடப்பட்ட Redmi K60 போனாக இருக்கும் பட்சத்தில் இதன் அம்சங்களை ஓரளவு கணித்துவிடலாம். இந்த ஸ்மார்ட்போனானது 6.67 அங்குல QHD+ AMOLED பேனல் கொண்டிருக்கும் எனவும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 1,400 nits உச்ச பிரகாசம், HDR10+ ஆதரவு மற்றும் 1,920Hz PWM ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்

Poco F5 5G ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இது ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. காரணம் இந்த சிப்செட்கள் தான் மற்ற முக்கிய நிறுவனங்களின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Redmi K60 ஸ்மார்ட்போன் போன்றே போக்கோ எஃப்5 5ஜி போனிலும் டிரிபிள் ரியர் கேமராக்கள் இடம்பெறும் பட்சத்தில் அது 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் இவை அனைத்தும் தகவலின் அடிப்படையில் ஆனது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். போக்கோ நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி நிறுவனம் விரைவில் இந்த ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யும் எனவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post இணைய வதந்தி: போகோ எஃப்5 போனாக வருகிறதா ரெட்மி கே60? first appeared on .

]]>
பட்ஜெட்விலையில் வெளியாகிறது போகோ F5 5G https://www.91mobiles.com/tamil/poco-f5-5g-smartphone-will-be-launched-soon-specs-features-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-f5-5g-smartphone-will-be-launched-soon-specs-features-and-more Thu, 20 Oct 2022 09:02:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3146 பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது பட்ஜெட் விலையில் தரமான கேமராக்கள், அருமையான சிப்செட், நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும் பேட்டரி என் பல சிறப்பு அம்சங்களுடன் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கிறது போக்கோ நிறுவனம். போக்கோ எஃப்5 5ஜி இதுவரை பட்ஜெட் விலையில் அதிகமான போன்களை அறிமுகம் செய்தது போக்கோ நிறுவனம் மட்டும் தான். இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில்போக்கோ எஃப்5 5ஜி எனும் ஸ்மார்ட்போனை […]

The post பட்ஜெட்விலையில் வெளியாகிறது போகோ F5 5G first appeared on .

]]>

பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது பட்ஜெட் விலையில் தரமான கேமராக்கள், அருமையான சிப்செட், நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும் பேட்டரி என் பல சிறப்பு அம்சங்களுடன் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கிறது போக்கோ நிறுவனம்.

போக்கோ எஃப்5 5ஜி

இதுவரை பட்ஜெட் விலையில் அதிகமான போன்களை அறிமுகம் செய்தது போக்கோ நிறுவனம் மட்டும் தான். இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில்போக்கோ எஃப்5 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டிப்ஸ்டர் முகுல் ஷர்மா EEC சான்றிதழ் தளத்தில் தற்போது Poco F5 5G பட்டியலிடப்பட்டதாகக் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 23013PC75G என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே

ஆன்லைனில் கசிந்த Poco F5 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம். போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது AMOLED 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கண்டிப்பாக ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

ப்ரைட்னஸ்

குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

கேமரா

வெளியான படத்தை வைத்துப் பார்க்கையில் போகோ எஃப் 5 5ஜி மொபைல் பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், என்னென்ன கேமராக்கள், எத்தனை மெகா பிக்சல்களைக் கொண்டு இருக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை.

சிப்செட்

போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். இந்த போன் இரட்டை சிம் ஸ்லாட்டுகளிக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது.

இயங்குதளம்

அதேபோல் போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி

போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் போக்கோ எஃப்4 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் விரைவில் அறிமுகமாகும் போக்கோ எஃப்5 5ஜி போனும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பட்ஜெட்விலையில் வெளியாகிறது போகோ F5 5G first appeared on .

]]>