poco X5 GT https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 15:47:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5500mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகிறதா போக்கோ X5 GT? https://www.91mobiles.com/tamil/poco-x5-gt-smartphone-with-triple-rear-camera-will-be-launched-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-x5-gt-smartphone-with-triple-rear-camera-will-be-launched-soon Tue, 21 Feb 2023 05:59:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5954 போக்கோ நிறுவனம் சமீபத்தில் தான் போக்கோ எக்ஸ்5 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் புதிய போக்கோ எக்ஸ்5 ஜிடி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது வெளிவந்த தகவலின்படி, போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 23049PCD8G என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போன் சர்வதேச சந்தையில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. IMDA […]

The post 5500mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகிறதா போக்கோ X5 GT? first appeared on .

]]>

Highlights

  • போக்கோ நிறுவனம் புதிய போக்கோ எக்ஸ்5 ஜிடி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது
  • இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

போக்கோ நிறுவனம் சமீபத்தில் தான் போக்கோ எக்ஸ்5 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் புதிய போக்கோ எக்ஸ்5 ஜிடி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது வெளிவந்த தகவலின்படி, போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 23049PCD8G என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போன் சர்வதேச சந்தையில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. IMDA வலைத்தளத்தில் போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளிவந்துள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்

 

டிஸ்பிளே

போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.67 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும். கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியோடு இந்த புதிய போன் அறிமுகமாகும். போக்கோ எக்ஸ்5 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்5 ப்ரோ மாடல்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன்.

 

சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பத குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

 

கேமரா

போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ போன். கூடவே எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

 

மெமரி

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

 

பேட்டரி & பாஸ்ட் சார்ஜிங்

போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன்.

 

கனெக்டிவிட்டி

5ஜி, வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதவுகளுடன் இந்த போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் போக்கோ எக்ஸ்5 ஜிடி ஸ்மார்ட்போன் இந்தியாவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

The post 5500mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகிறதா போக்கோ X5 GT? first appeared on .

]]>
இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்யப் போகிறதா போகோ? https://www.91mobiles.com/tamil/2-new-poco-smartphones-to-launch-in-india-soon-check-poco-c55-and-poco-x5-gt/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2-new-poco-smartphones-to-launch-in-india-soon-check-poco-c55-and-poco-x5-gt Fri, 17 Feb 2023 05:15:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5872 போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் மொபைல் பிரிவை அப்டேட் செய்தது. போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.22,999 ஆகும். இதனையடுத்து போக்கோ சி55, போக்கோ எக்ஸ்5 ஜிடி என இரண்டு மொபைல்களை போகோ விரைவில் வெளியிடலாம் எனத் தெரிய தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு மொபைல்களில் ஒன்று பட்ஜெட் பிரிவிலும், மற்றொன்று மிட்ரேஞ்ச் பிரிவிலும் வெளியாகலாம். அதே போல் இவை ஏற்கனவே வெளியான மொபைல்களின் ரீபிராண்டட் […]

The post இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்யப் போகிறதா போகோ? first appeared on .

]]>
Highlights

  • சீன மொபைல் நிறுவனமான போக்கோ 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் எனத் தெரிய வந்துள்ளது.
  • அதிலொன்று பட்ஜெட் விலை மாடலாகவும், இன்னொன்று மிட்-ரேன்ஜ் மாடலாகாவும் இருக்கலாம்!

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் மொபைல் பிரிவை அப்டேட் செய்தது. போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.22,999 ஆகும். இதனையடுத்து போக்கோ சி55, போக்கோ எக்ஸ்5 ஜிடி என இரண்டு மொபைல்களை போகோ விரைவில் வெளியிடலாம் எனத் தெரிய தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு மொபைல்களில் ஒன்று பட்ஜெட் பிரிவிலும், மற்றொன்று மிட்ரேஞ்ச் பிரிவிலும் வெளியாகலாம். அதே போல் இவை ஏற்கனவே வெளியான மொபைல்களின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

POCO C55

தற்போது இந்நிறுவனம் அதன் பட்ஜெட் மொபைல் பிரிவை அப்டேட் செய்யும் நோக்கத்தின் கீழ் போக்கோ சி55 (POCO C55) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல இந்த போக்கோ ஸ்மார்ட்போனும் கூட சீனாவில் அறிமுகமான ஏதோவொரு ரெட்மி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதாவது போக்கோ சி55 மாடலானது ரெட்மி 12சி (Redmi 12C) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், போக்கோ நிறுவனம் போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் சரியான இந்திய வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை; வெறுமனே “விரைவில் வரும்” என்று மட்டும் ட்வீட் செய்துள்ளது. இது இந்த பிப்ரவரி மாதத்திற்குள்ளயே அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

 

POCO C55 விலை மற்றும் அம்சங்கள்

போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.10,000 க்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, இது 6.71 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம், அதில் 50எம்பி மெயின் கேமரா இருக்கலாம். முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா இருக்கலாம். கடைசியாக இந்த பட்ஜெட் விலை போக்கோ ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் மற்றும் அது 10W சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.

POCO X5 GT

போக்கோ சி55 ஸ்மார்ட்போனை தொடர்ந்து, போக்கோ எக்ஸ்5 சீரிஸின் கீழ் போக்கோ எக்ஸ்5 ஜிடி என்கிற இன்னொரு மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.  இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் (BIS – Bureau of Indian Standards) வலைதளத்தில் காணப்பட்டுள்ளதால், இதுவும் கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். போக்கோ எக்ஸ்5 ஜிடி மாடலும் கூட ஒரு ரீபிராண்டட் ஸ்மார்ட்போனாகவே வரும். இது ரெட்மி நோட் 12 டர்போவின் (Redmi Note 12 Turbo) மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்தியாவில் அறிமுகமாகலாம்!

 

POCO X5 GT விலை மற்றும் அம்சங்கள்

இது உண்மையாகவே ரெட்மி நோட் 12 டர்போவின் ரீ பிராண்டட் வெர்ஷனாக வெளியாகும் பட்சத்தில், இது 6.67 அங்குல OLED FHD+ டிஸ்பிளே, 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்! இதுவும் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட வில்லை.

The post இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்யப் போகிறதா போகோ? first appeared on .

]]>