POCO X5 Pro https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 13:42:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நோக்கியா X30 மொபைலுக்கு பதில் வாங்கக்கூடிய 5 போன்கள்! https://www.91mobiles.com/tamil/why-you-should-consider-these-5-cheap-and-best-alternative-smartphones-for-nokia-x30-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=why-you-should-consider-these-5-cheap-and-best-alternative-smartphones-for-nokia-x30-5g Fri, 17 Feb 2023 10:01:02 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5896 ஒரு நோக்கியா 5ஜி போனை வாங்கினால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தால்.. நோக்கியா எக்ஸ்30-ஐ வாங்கலாம். ஒருவேளை நீங்கள் விலை நிர்ணயத்தையும் கருத்தில் கொள்ள விரும்பினால்.. உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் – தற்போது இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஸ்மார்ட்போனென்றால் அது நோக்கியா எக்ஸ்30 தான். இதன் விலை ரூ.48,999 ஆகும். இந்த ஒரு விஷயத்திற்காகவே நோக்கியா எக்ஸ்30 மாடலின் இந்திய விற்பனை மந்தமாகலாம். ஏனென்றால், இதை விட மலிவான விலைக்கு […]

The post நோக்கியா X30 மொபைலுக்கு பதில் வாங்கக்கூடிய 5 போன்கள்! first appeared on .

]]>

Highlights

  • நோக்கியா எக்ஸ்30 5ஜி  உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 5 மாதங்களுக்கு பிறகே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இதன் இந்திய விற்பனை வருகிற பிப்.20 முதல் தொடங்கவுள்ளது.

ஒரு நோக்கியா 5ஜி போனை வாங்கினால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தால்.. நோக்கியா எக்ஸ்30-ஐ வாங்கலாம். ஒருவேளை நீங்கள் விலை நிர்ணயத்தையும் கருத்தில் கொள்ள விரும்பினால்.. உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் – தற்போது இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஸ்மார்ட்போனென்றால் அது நோக்கியா எக்ஸ்30 தான். இதன் விலை ரூ.48,999 ஆகும். இந்த ஒரு விஷயத்திற்காகவே நோக்கியா எக்ஸ்30 மாடலின் இந்திய விற்பனை மந்தமாகலாம். ஏனென்றால், இதை விட மலிவான விலைக்கு மற்றும் நோக்கியா எக்ஸ்30 5ஜி-ஐ விட நல்ல-நல்ல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கிடைகின்றன. அதில் நாங்கள் பரிந்துரைக்கும் டாப் 5 போன்களின் பட்டியல் இதோ:

  1. Realme 10 Pro (ரியல்மி 10 ப்ரோ)

ரியல்மி 10 ப்ரோவின் விலை – நோக்கியா எக்ஸ்30-ன் விலையில் மூன்றில் ஒரு பங்காகும். ஆனால் அதே குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை கொண்டுள்ளது. இது ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.72 அங்குல ஃபுல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, 108எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

  1. POCO X5 Pro (போக்கோ எக்ஸ்5 ப்ரோ)

போக்கோ எக்ஸ்5 ப்ரோ, நோக்கியா எக்ஸ்30-க்கான மற்றொரு தகுதியான ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போனாகும். இது ரூ.22,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 6.67 அங்குல ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 108எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளைக் கூறலாம்.

  1. Redmi Note 12 Pro (ரெட்மி நோட் 12 ப்ரோ)

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனும் போக்கோ எக்ஸ்5 ப்ரோவும் ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்வதால், இதுவும் நோக்கியா எக்ஸ்30 க்கான ஒரு நல்ல மாற்றாகும். இதன் விலை – ரூ.24,999. இது ஓஐஎஸ் (OIS) ஆதரவுடனான 50எம்பி மெயின் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

  1. Google Pixel 6a (கூகுள் பிக்சல் 6ஏ)

சரியான விலை மற்றும் நம்பமுடியாத கேமரா திறன்களுக்காகவே கூகுள் பிக்சல் 6ஏ மாடலை கருத்தில் கொள்ளலாம். இது ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது நோக்கியா எக்ஸ்30-ஐ விட ரூ,18,000 குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 6.1அங்குல ஃபுல் எச்டி+ OLED டிஸ்ப்ளே, 12.2எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்ஃபி கேமரா, கூகுளின் சொந்த டென்சர் எஸ்ஓசி, 4410mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

  1. iQOO 9 (ஐக்யூ 9)

நோக்கியா எக்ஸ்30 மாடலை போலல்லாமல், ஐக்யூ 9 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் உடன் வருகிறது. அதாவது ஒப்பீட்டளவில் இதுவொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போனாகும். இதன் விலை – ரூ.42,999. இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 6.56 அங்குல ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஓஐஎஸ்-எனேபிள்டு 48எம்பி மெயின் கேமரா, 4350mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளை கூறலாம்.

The post நோக்கியா X30 மொபைலுக்கு பதில் வாங்கக்கூடிய 5 போன்கள்! first appeared on .

]]>
108MP கேமரா, 5500mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங்கோட பிப்ரவரி 6ல் வெளியாகிறது போகோ X5 ப்ரோ 5G! https://www.91mobiles.com/tamil/poco-x5-pro-5g-smartphone-will-launch-on-february-6-specs-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-x5-pro-5g-smartphone-will-launch-on-february-6-specs-features Wed, 01 Feb 2023 05:35:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5430 இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக கிரக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கையில் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி வைத்திருப்பது போன்று ஒரு டீசர் வெளியிடப்பட்டது. மேலும் போக்கோவின் பிராண்ட் தூதராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. POCO X5 Pro 5G ஸ்மார்ட்போன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது. இதுபோக வேறு சில நிறங்களிலும் […]

The post 108MP கேமரா, 5500mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங்கோட பிப்ரவரி 6ல் வெளியாகிறது போகோ X5 ப்ரோ 5G! first appeared on .

]]>

Highlights

  • போக்கோ நிறுவனம் புதிய ‘போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி’ ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 6-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த போக்கோவின் பிராண்ட் தூதராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக கிரக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கையில் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி வைத்திருப்பது போன்று ஒரு டீசர் வெளியிடப்பட்டது. மேலும் போக்கோவின் பிராண்ட் தூதராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது. இதுபோக வேறு சில நிறங்களிலும் வரலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பவர் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காண முடிகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

சிப்செட்

போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் சிறந்த செயல்திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேமரா

இந்த புதிய போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்ஃபி கேமராவுடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன்.

திரை

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட Full HD AMOLED டிஸ்பிளேவோடு  இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் டால்பி விஷன் ஆதரவு, HDR ஆதரவு, 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 

பேட்டரி

இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும். எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

 

இயங்குதளம்

இந்த போக்கோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மெமரி

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ போன் வெளிவரும். அதேபோல் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் இருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாக இருக்கிறது.

 

விலை

இந்த மொபைல் ரூ.20,999 என்ற விலையில் இருந்து கிடைக்கும். இந்த மொபைலை பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மூலம் வாங்க முடியும்.

The post 108MP கேமரா, 5500mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங்கோட பிப்ரவரி 6ல் வெளியாகிறது போகோ X5 ப்ரோ 5G! first appeared on .

]]>