ponniyin selvan https://www.91mobiles.com/tamil Sun, 11 Sep 2022 10:15:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பொன்னியின் செல்வன் வெளிநாட்டு வர்த்தகம் நிறைவு https://www.91mobiles.com/tamil/ponniyin-selvan-movie-foreign-release-business-has-done/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ponniyin-selvan-movie-foreign-release-business-has-done Mon, 12 Sep 2022 04:32:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2223 பொன்னியின் செல்வன் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொன்னின் செல்வன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வியாபார பணி வேகமாக நடைபெற்று வருகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவார்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் படத்தின் முதல் […]

The post பொன்னியின் செல்வன் வெளிநாட்டு வர்த்தகம் நிறைவு first appeared on .

]]>

பொன்னியின் செல்வன் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொன்னின் செல்வன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வியாபார பணி வேகமாக நடைபெற்று வருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டவார்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அத்துடன் படத்தின் முதல் பிரதியை தயார் செய்யும் பணியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கான வியாபார வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதில் முதல் கட்டமாக வெளிநாட்டு வெளியீட்டிருக்கான வியாபாரங்களை லைகா நிறுவனம் முடித்துள்ளது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் சரிகம சினிமாஸ் நிறுவனமும், கனடாவில் KW டாக்கீஸ் நிறுவனமும், Night ED Films நிறுவனமும், ஐரோப்பாவில் Boleyn நிறுவனமும், மத்திய கிழக்கு நாடுகளில் PHF நிறுவனமும் வெளியிடுகின்றன.

அதேபோல் மலேசியாவில் லோட்டஸ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. அதேபோல் சிங்கப்பூரில் Home Screen நிறுவனத்தினர் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட உள்ளனர்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இதனிடையே பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில் தன் எழுத்துக்களால் கொண்டாடப்படுபவர், பல தலைமுறைகள் தாண்டியும் போற்றப்படுபவர், தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பவர், தமிழ் உள்ளவரை உயிர்த்திருப்பார் என புகழாரம் சுட்டியுள்ளனர். பிரபல எழுத்தாளரான கல்கி 1,899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி பிறந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை கேட்டுவிட்டு படிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தார் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த் என்று பதிலளித்திருந்தார். அவர் கூறியதைக் கேட்டவுடன் குஷி ஆகிவிட்டேன். உடனே அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். படிக்க படிக்க ஆர்வமாக சென்று கொண்டே இருந்தது. கல்கி உயிருடன் இருந்திருந்தால் அவரது இல்லத்திற்கு சென்று காலில் விழுந்திருப்பேன் என்று கூறினார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பணி புரிந்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல சுவாரசியமான பின்னணியை கூறினார். இந்த திரைப்படத்திற்காக பாலிக்கு சென்று ஆய்வுகள் நடத்தி இசையமைத்தாக தெரிவித்தார். என்னுடைய தந்தையுடன் இருந்தபோது மனோகரா உள்ளிட்ட பலவற்றை கேள்விப்பட்டு உள்ளேன். அவற்றைக் கொண்டு முதலில் இசை அமைத்து கொடுத்தேன். ஆனால் அதை மணிரத்னம் நிராகரித்து விட்டார்.

அதன் பின்னே பாலி சென்றோம், நம் மன்னர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு நடத்திய ஆய்வை வைத்து இசையை உருவாக்கி மணிரத்னத்திற்கு காண்பித்தேன். நன்றாக இருப்பதாக கூறி தேர்வு செய்தார் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.

The post பொன்னியின் செல்வன் வெளிநாட்டு வர்த்தகம் நிறைவு first appeared on .

]]>
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்! https://www.91mobiles.com/tamil/tamil-cinema-ponniyin-selvan-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-cinema-ponniyin-selvan-movie-update Wed, 17 Aug 2022 17:37:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1679 இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம். கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. பொன்னியின் செல்வன் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் […]

The post ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்! first appeared on .

]]>

  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம்.

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. பொன்னியின் செல்வன் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் “பொன்னி நதி” அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ’சோழா.. சோழா..’ எனத் தொடங்கும் இந்தப் பாடலும் முதல் பாடலைப் போலவே வரவேற்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வழக்கமாக மணிரத்னத்தின் படங்களுக்கு தொடர்ச்சியாக பாடல் எழுதி வந்த வைரமுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதவில்லை. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் இது பற்றி ஒரு பேட்டியில் கேட்ட போது, இதற்கு மணிரத்னம் தான் பதில் சொல்ல வேண்டும் என மழுப்பலாய் பதில் கூறி இருந்தார்.

இப்படி தினம் ஒரு பரபரப்பாய் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இது தவிர தொழில்நுட்ப ரீதியிலும் இப்படம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து இருக்கிறது. அதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இதன் மூலம் ஐமேக்ஸ் முறையில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்! first appeared on .

]]>
விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட பாடல் https://www.91mobiles.com/tamil/india-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=india-launch Wed, 27 Jul 2022 05:00:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1091 எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் […]

The post விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட பாடல் first appeared on .

]]>

எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் பாடல் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

The post விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட பாடல் first appeared on .

]]>